Friday, February 17, 2006

காதலர் தினத்தை தடை செய்ய வேண்டுமா?

காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து மதவாத அமைப்புகள் கூறியுள்ளதை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
சாதி, மத வேறுபாடுகள் நிறைந்த இச்சூழலில் காதல் செய்வதும் கலப்பு மணம் புரிவதும் மிகவும் அவசியம். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், ஜோதிபா பூலே போன்ற தலைவர்கள் வலியுறுத்திய சாதி ஒழிப்புக்கு இக்கொண்டாட்டம் தேவையானது. இந்தியாவில் பல இடங்களில் மதவெறியர்கள் காதலர் தின கொண்டாட்டத்திற்கு இடையூறு செய்துள்ளனர். வாழ்த்து அட்டைகளை எரித்துள்ளனர். பொதுஇடங்களில் காதலர்களைத் தாக்கியுள்ளனர். ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற மதவெறி அமைப்புகளின் இக்காட்டு மிராண்டித் தனத்தை முறியடிக்க வேண்டும்.
பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் என சில கட்சிகளும் காதலர் தினத்தை எதிர்ப்பது தவறான போக்காகும். காதலர் தினத்தைப் போற்றுவோம். சாதி, மத வேறுபாடுகளைக் களைந்திடுவோம்.

"ஒரு காலத்தில்தன்
காதலிக்காகத்
தலையைக்
கொடுத்தான்ஒரு
கவிஞன்என்று படித்தபோது
'இது முட்டாள்தனம்'என்று
எண்ணிப்பரிகசித்தேன்.
இப்போதுஎனக்குஒரே
ஒரு தலை
இருக்கிறதுஎன்று நினைத்துப்பரிதவிக்கிறேன்."

- கவிஞர் மீரா.

கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் - நூலில்.
14-2-2006.