புதுச்சேரியில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் மது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 07.03.2010 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், அண்ணா சிலை அருகில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மனித நேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.எ.அஷ்ரப் தலைமை வகித்தார்.
புதிதாக 90 மதுக்கடைகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரியில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தமிழ்க அளவில் மனித நேய மக்கள் கட்சி நடத்திய போராட்டத்தின் அங்கமாக் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் இ.முகமது சலீம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ.அப்துல்ராஜாகான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி அமைப்பாளர் சு.பாவாணன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், கிராமப் பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு துணை அமைப்பாளர் கோ.அ.ஜெகன்நாதன், சிங்காரவேலர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் கோ.செ.சந்திரன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு மது ஒழிப்பை வலியுறுத்தி பேசினர்.
சிறப்பு அழைப்பளராக கலந்துக் கொண்ட மனித நேய மக்கள் கட்சியின் தலைமை நிலைய பேச்சாளர் முத்துப்பேட்டை அப்துல் மாலிக் கணடன உரையாற்றி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment