Friday, September 08, 2006

செஞ்சோலை படுகொலை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவைக் கண்டித்து போராட்டம்

ஈழத்திலுள்ள செஞ்சோலை காப்ப்கத்தின் மீது சிங்களப்படை குண்டுவீசி 61 சிறுமிகளை படுகொலையை கண்டித்து, தந்தைப் பெரியார் தி.க சார்பில் 21-08-2006 அன்று புதுச்சேரியில் "இலங்கை அதிபர் இராசபக்சே கொடும்பாவி எரிப்புப் போராட்டம் நடந்தது".

பெரியார் தி. க தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கணக்கானவர்களைக் காவல்துறையினர் தளைப்படுத்தினர்.

"இந்திய அரசே!

  • விடுதலைப்புலிகள் மீதான தளையை நீக்கு!
  • தமிழ் ஈழத்தை அங்கீகரி!
  • இனவெறி பிடித்த சிங்கள அரசுக்கு எவ்வித உதவிகளும் செய்யாதே!

போன்ற முழக்கங்கள் இப்போராட்டத்தில் எழுப்பபட்டன.

கீழே.......

போராட்டப் புகைப்ப்டங்கள்.














2 comments:

வெற்றி said...

அன்பின் சுகுமாரன்,
தகவலுக்கு மிக்க நன்றி. இந்தியா ஒரு சனநாயக் நாடு என்பதாலும், தமிழகம் இந்தியாவின் ஓர் அங்கமாக இருப்பதாலும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு இந்திய நடுவண் அரசு மதிப்பளிக்கும் என நம்புகிறேன்.

Anonymous said...

சுகுமாரன், அந்தத் தகவலையும் படங்களையும் உணர்வுகளையும் இங்கு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.