Sunday, April 06, 2008

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளம் பயணம்.

புதுச்சேரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளத்தில் நடக்கும் தேர்தலையொட்டி, சர்வ தேச தேர்தல் பார்வையாளராக 8 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார்.

வரும் ஏப்ரல் 10 அன்று நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் (Constituent Assembly Election) நடைபெற உள்ளது. இத்தேர்தல் மூலமாக அந்நாட்டு மக்கள் முதல் முறையாக தங்களுக்கான அரசியல் சட்டத்தை வகுக்க உள்ளனர். இதனால், உலக அரங்கில் நேபாள தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இத்தேர்தல் சுதந்தரமாகவும், நேர்மையாகவும் நடைபெறும் பொருட்டு சர்வ தேச அளவில் தேர்தல் பார்வையாளர்கள் குழு ஒன்றை நேபாள தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

நேபாளத்தைச் சேர்ந்த 148 அரசு சாராத அமைப்புகள் சார்பில் 92 ஆயிரத்து 245 பேரும், உலக அளவில் 500-க்கும் மேற்பட்டவர்களும் ‘தேர்தல் பார்வையாளர்களாக’ நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 9801 தேர்தல் மையங்களையும், 20 ஆயிரம் தேர்தல் பூத்துக்களையும் பார்வையிடுவார்கள். கடந்த 1999-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்களைவிட இது 30 மடங்கு அதிகமாகும்.

இதுதவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் 10 தேர்தல் பர்வையாளர்கள் ஏற்கனவே நேபாளத்தில் முகாமிட்டு தேர்தல் பணிகளைப் பார்வையிட்டு வருகின்றனர்.

தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெற வேண்டுமென்பதற்காக நேபாள தேர்தல் ஆணையம் ‘தேர்தல் பார்வையாளர்கள் ஆதார மையம்’ (Election Observers Resource Centre) ஒன்றை உருவாக்கி இப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நேபாள தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களுக்கென நடத்தை விதிகளை (Code of Conduct for Observers) வகுத்துள்ளது. அதன்படி தேர்தல் பார்வையாளர்கள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர தேர்தல் நடக்கும் எந்த பகுதிக்கும் தேர்தல் பார்வையாளர்கள் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. மேலும், தேர்தல் பார்வையாளர்கள் ஆக்கபூர்வமாகவும், பாரபட்சமின்றி, சார்புத் தன்மையின்றி பணியாற்றிடவும் அறிவுறுத்தி உள்ளது.

நேபாள தேர்தல் ஆணையம் தேர்தல் பார்வையாளர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

புதுச்சேரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் ‘அரசியல் நிர்ணய சபை தேர்தல் பார்வையாளர்கள் அமைப்பு’ (CA Election Observation Joint Forum (CAEOF) அழைப்பின் பேரில் நேபாளம் செல்கிறார். வரும் ஏப்ரல் 7 முதல் 14 வரை நேபாளத்தில் தங்கி இருந்து தெர்தல் பணிகளைப் பார்வையிடுகிறார். பின்னர் இந்தியா திரும்புகிறார்.

தமிழகத்திலிருந்து பேராசிரியர் சே.கோச்சடை (மக்கள் சிவில் உரிமைக் கழகம்), வழக்கறிஞர் ரஜினிகாந்த் (இந்திய மக்கள் வழகறிஞர் சங்கம்), மாந்தநேயன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்) ஆகியோரும் சர்வ தேச தேர்தல் பார்வையாளர்களாக நேபாளம் செல்கின்றனர்.

3 comments:

Anonymous said...

சென்று வாருங்கள், வாழ்த்துக்கள்.

ஒரு ஈழத்தமிழன்

குழலி / Kuzhali said...

வாழ்த்துகள் சுகுமாரன்....

ஏ.சுகுமாரன் said...

Dear sukumaran,
howq are you. we had some meeting before.
i was realy happy to note your achivements. your life always going steadilly to a goal with public interest.
VAZTHUKAL
we also publish this news in our
www.puduvaitamilsonline.com today.
warm regards,
a.sugumaran
09345419948