Tuesday, November 18, 2008
புதுச்சேரியில் நவம்பர் 25-இல் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி "முழு அடைப்பு"
ஈழத் தமிழர் மீதான இனவெறிப் போரை தடுத்து நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி வரும் 25-11-2008 அன்று, புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது என அனைத்துக் கட்சி - இயக்கங்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் 18-11-2008 செவ்வாய் அன்று மாலை 4.00 மணியளவில் முதலியார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலச் செயலர் நாரா.கலைநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) தலைமை தாங்கினார். அக்கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் இரா.விசுவநாதன் (சட்டமன்ற உறுப்பினர்) முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வி.எஸ்.அபிஷேகம், இராமமூர்த்தி, கீதநாதன், செல்வம் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி), சிவக்குமார் (பாட்டாளி மக்கள் கட்சி), முன்னாள் அமைச்சர் நா.மணிமாறன் , வ.செல்வராஜ் (மறுமலர்ச்சி தி.மு.க.), தங்க.கலைமாறன்,(பகுஜன் சமாஜ் கட்சி), தி.சஞ்சீவி, (இராஷ்டிரிய ஜனதா தளம்), சுந்தரமூர்த்தி (தேசியவாத காங்கிரஸ்), லோகு.அய்யப்பன், விசயசங்கர், தந்தைபிரியன் (பெரியார் தி.க.), கோ.சுகுமாரன், (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), இரா.மங்கையர்செல்வன், வ.குப்புராசு (மீனவர் விடுதலை வேங்கைகள்), ந.மு.தமிழ்மணி,(செந்தமிழர் இயக்கம்), இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), மு.அ.குப்புசாமி, (தமிழர் திராவிடர் கழகம்) ஆகிய கட்சி - இயக்கத்தினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
இலங்கையில் நடைபெறும் போரை இந்திய அரசு தடுத்து நிறுத்தி அங்குள்ள தமிழர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி வரும் 25-11-2008 செவ்வாயன்று புதுச்சேரியில் "முழு அடைப்புப் போராட்டம்" நடத்துவது.
இப்போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வையில் வரும் 23, 24 ஆகிய இரு நாட்களில் புதுச்சேரி முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி நவம்பர் 25-இல் தமிழ்கம் முழுவதும் "முழு அடைப்பு" நடத்துவது என ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மகிழ்ச்சி
என்ன செய்தாலும் இந்திய ஆட்சியாளர்கள் எருமைத் தோலில் ஏறவில்லையே.
இதைவிட கேவலமாக ஒரு அரசு இருக்க முடியாது என நினைக்கிறேன்.
மன்மோகன், இந்தியன் அல்லது தமிழனுக்கு பிரச்சனை என்பதைவிட அமெரிக்கனுக்கு பிரச்சனை என்றால் தான் இந்த சீக்கியன் கவலைப்படுவான் போலிருக்கிறது.
Post a Comment