Tuesday, June 22, 2010

விழுப்புரம் மாவட்டம் சித்தணியில் நடந்த தண்டவாளத் தகர்ப்பும் அதையொட்டிய காவல்துறைஅத்துமீறல்களும்!

சென்னை- திருச்சி அகல ரயில் பாதையில் பேரணி ரயில் நிலையத்திற்கும் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் இடையில் அமைந்துள்ள சித்தணி கிராமத்தின் அருகில் ரயில் பாதையில் ஜூன்12ஆம் நாள் இரவு சுமார் 2 மணியளவில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் தண்டவாளம் தகர்ந்து மலைக்கோட்டை ஏக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெரும் உயிரிழப்பை எற்படுத்தக்கூடிய இத்தகைய செயல்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. எத்தகைய நியாயமான நோக்கங்களுக்காக இத்தகைய நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதன மூலம் அந்த நியாயங்களைப் பெற்றுவிடவும் இயலாது.

இந்தத் தண்டவாளத் தகர்ப்பிற்குக் காரணமானவர்கள் யார் என்பது குறித்து இதுவரை புலனாய்வில் எந்த முக்கியத் தடயமும் கிடைக்காத நிலையில் இது குறித்த விசாரணை ஏன்ற பெயரில் விழுப்புரம் மற்றும் அதைச் சுற்றிலும் வாழ்கின்ற தமிழுணர்வுள்ள இளைஞர்கள் சிலர் காவல் துறையால் கடும் துன்பத்திற்கு ஆட்படுத்தப்படுவது குறித்து மனித உரிமை செயலாளிகளான எங்களுக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்ததையொட்டி இது குறித்த உண்மைகளை அறிய கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டது.

1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) சென்னை.

2. கோ.சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.

3. பேரா. சே.கோச்சடை, மக்கள் சிவில் உரிமைக் கழகம், (PUCL) காரைக்குடி.

4. பி.வி.ரமேஷ், மனித உரிமைகள் கண்காணிப்புக் கழகம், விழுப்புரம்.

5. M. பரக்கத்துல்லா வழக்குரைஞர் , மனித உரிமை அமைப்புகளுக்கான தேசிய
கூட்டமைப்பு, (NCHRO) திண்டுக்கல்.

6. மு.சிவகுருநாதன், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம், (PUHR) திருவாரூர்.

7. இரா. முருகப்பன், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம், திண்டிவனம்.

8. பாஸ்கர், வழக்குரைஞர், மக்கள் கண்காணிப்பகம், வேலூர்.

9. லூசியானா, வழக்குரைஞர், மனித உரிமை இயக்கம்,

11. ஆ.ராஜகணபதி, வழக்குரைஞர், திண்டிவனம்.

11. சு.காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, (FPR) புதுச்சேரி.

12. ரஸ்கின்ஜோசப், வழக்குரைஞர், விழுப்புரம்.

13. ஜெயராமன், மக்கள் கண்காணிப்பகம், பண்ருட்டி.

இக்குழுவினர் நேற்று (ஜூன்-18) அதிகாலை முதல் க்யூ பிரிவு போலிசாரால் மூன்று நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட 11 தமிழுணர்வுள்ள இளைஞர்கள் மற்றும் விழுப்புரம், சித்தணி பகுதிகளிலுள்ள பொதுமக்கள், விழுப்புரத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் ஆகியோரைச் சந்தித்தது. வீடு புகுந்து க்யூ பிரிவு போலீசாரால் சோதனையிடப்பட்ட தமிழுணர்வுள்ள 3 இளைஞர்களின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டது. சித்தணியில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கும், பேரணி ரயில் நிலையத்திற்கும் சென்று சம்பவ இடத்தையும், முக்கிய ஆவணங்களையும் பரிசீலித்தது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட விக்கிரவாண்டி காவல்நிலைய ஆய்வாளர் டி.விவேகானந்தன், விழுப்புரம் சரக டிஐஜி மாசானமுத்து ஐபிஏஸ்., சிறப்பு புலனாய்வுக்கு நியமிக்கப்பட்டுள்ள வேலூர் க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரம் ஆகியோருடன் நேரிலும் தொலைபேசியிலும் உரையாடியது. பேரணி ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் சங்கரவடிவேலுவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில அய்யங்களைத் தெளிவுப்படுத்திக் கொண்டது.

மேற்கண்ட விசாரணைகளின் ஊடாக அறிய வந்த உண்மைகள்:

1.ஜூன் 12இம் தேதி இரவு சரியாக 1:45 மணியளவில் கம்பன் ஏக்ஸ்பிரஸ் (வண்டி ஏண். 6173) சம்பவ இடத்தைக் கடந்து சென்றுள்ளது. இந்த ரயிலின் வருகையால் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சேலம் ஏக்ஸ்பிரஸ் (1064) சற்று பின் சம்பவ இடத்தைத் தாண்டிச் சென்றவுடன் சரியாக 2:08 மணியளவில் அவ்வண்டியின் கார்டு ராஜாராமன் வாக்கிடாக்கி மூலம் பேரணி நிலையத்திற்கு அனுப்பிய செய்தி பதிவேட்டில் (டிஏஸ்இர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. 145/10-2, கி.மீ தொலைவில் ரயில் கடக்கும்போது ஓரு பெரும் சத்தம் ஓன்றை உணர்ந்ததாக கார்டு கூறியதை யொட்டி அடுத்து வந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் (6178) இரவு 2:23 மணியளவில் நிறுத்தப்பட்டதனால் பெரும் விபத்தொன்று தவிர்க்கப்பட்டது. அருகில் சென்று பார்த்த பொழுது 98செமீ நீளத்திற்கு ஓருபக்கத் தண்டவாளம் இல்லாதிருந்ததும் அவ்விடத்தில் உள்ள சரளைக் கற்கள் முற்றிலும் சிதறிப் பள்ளம் ஓன்று உருவாகி இருந்ததும் கண்டறியப்பட்டது.

அருகில் ஊள்ள கிணறு ஒன்றின் மின்சார இணைப்பைப் பயன்படுத்தி சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு ஒன்றின் மூலம் தண்டவாளப் பெயர்ப்பு நடத்தப்பட்டிருந்தது தெரிந்தது. சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் அவ்விடத்தைக் கடக்கும்முன்னர் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததா இல்லை கடந்த பின்னர் நடந்ததா என்பது குறித்து ஆதிகாரிகள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சுமார் 1மீட்டர் நீளத்திற்கு ஒரு பக்கம் மட்டும் தண்டவாளம் இல்லாத நிலையில் அதிவேகமாகச் செல்லும் ஓரு ரயில் விபத்தின்றி கடந்துவிட வாய்ப்புண்டு எனச் சிலர் கூறுகின்றனர். இது குறித்து நுணுக்கத்திறன் உள்ள பொறியாளர்களே கருத்துக் கூற முடியும் என்றாலும் தானறிந்த வரையில் அவ்வாறு நடப்பது சாத்தியமில்லை எனவும், அவ்வாறு நடந்திருந்தால் அது ஓர் அதிசயம் (Miracle) எனவும் நிலைய ஆதிகாரி சங்கரவடிவேலு குறிப்பிட்டார். சித்தணியைச் சேர்ந்த ஜெயா என்கிற பெண்மணி முதலில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் ரயில் ஓன்று கடந்த சப்தம் கேட்டதாகவும் கூறினார். தண்டவாள பெயர்ப்புக்குப்பின்னும் சேலம் ஏக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் கடந்துள்ளது என மக்கள் நம்புகிறார்கள் என்றாலும், இது குறித்த நுணுக்கத்திறன் பெற்ற பொறியாளர்கள் மற்றும் தடயவியல் வல்லுநர்கள் இறுதி முடிவு தெரிவிக்காதவரை ஏந்த முடிவுக்கும் வர முடியாது என்றார் டிஐஜி மாசானமுத்து. எப்படி irunthalum கவனமாக செயல்பட்டு விபத்தைத் தடுக்க ரயில்வே ஊழியர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

சம்பவ இடத்தில் கைரேகை உள்ளிட்ட எந்தத் தடயங்களும் கிடைக்கவில்லை என்றார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த விக்கிரவாண்டி காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன். எனினும் முதல் தகவல் அறிக்கையில் (குற்ற ஏண் 259/2010) கீழ்க்கண்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடிமருந்த பொருள் சட்டம் பிரிவு 3 மற்றும் ரயில்வே சட்டப் பிரிவுகள் 150(2) (b), 151 (1) (2), பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தல் சட்டப்பிரிவு 4, சட்ட விரோத நடவடிக்ககள் தடுப்புச் சட்டப்பிரிவு 13, மற்றும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 307 ஆக இன்றுவரை யார் செய்தார்கள் என்பது குறித்து எந்தத் துல்லியமான தகவல்களும் புலன்விசாரிக்கும் காவல்துறைக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.

2. தண்டவாளத் தகர்ப்பு நடந்த அடுத்தநாளே காவல்துறை இயக்குநர் லத்திகா சரண் ஓரு குறிப்பிட்ட இயக்கத்திர்ும் தரும் தொடர்பு இல்லை எனக் கூறினார். சம்பவ இடத்தில் கிடந்ததாகக் கூறப்படுகிற ஒரு துண்டறிக்கையை மையமாக வைத்து விடுதலைப்புலிகள் ஆதரவு - தமிழ் தேசிய சக்திகள் மட்டுமே இதைச் செய்திருக்க முடியும் ஏன்ற ஒரே கோணத்தில் மட்டும் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. அந்த அடிப்படையில் புலன் விசாரணை ஜூன் 14 அன்று க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டது. இதறதிடையில் ஜூன் 12இம் தேதி பகல் தொடங்கி தமிழ் தேசிய உணர்வுடைய கீழ்க்கண்ட 11 இளைஞர்கள் க்யூ பிரிவு காவலர் கார்த்திக் என்பவரின் அடையாளம் காட்டலில் பிடித்துச் செல்லப்பட்டனர்.

1. கா.பாலமுருகன் (ஏ) தமிழ்வேங்கை (24), த.பெ. காசிநாதன், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், ஏல்ஒசி முகவர், பிடித்துச் செல்லப்பட்ட தேதி : ஜூன்-12.

2. ஏழில் ஈளங்கோ, (43), த.பெ. விழுப்பறையனார், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.

3. ஜோதி நரசிம்மன் (36), த.பெ. பாண்டுரங்கன், விழுப்புரம்.
தொலைக்காட்சி நிருபர், தமிழர் தேசிய இயக்கம்,ஜூன்-12.காலை 9-20

4. ஐழுமலை (37), த.பெ. தேவராஜ், ப. வில்லியனூர்.
புத்தக விற்பனையாளர், தமிழர் கழகம்,ஜூன்:12, காலை 11-மணி.

5. பாபு (37), த.பெ. கோதண்டம், அச்சகம், விழுப்புரம்.
தமிழர் தேசிய இயக்கம், ஜூன்-12. பகல் 2-00

6. குமார் (37), த.பெ. கலியபெருமாள்,
தமிழர் தேசிய இயக்கம், ஊளுந்தூர்பேட்டை. ஜூன்-12. இரவு 10-30.

7. சக்திவேல் (40), த.பெ. அண்ணாமலை,
திமுக கிளை செயலாளர், செஞ்சி.

8. கணேசன் (43), த.பெ. கோதண்டபாணி,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.. ஜூன்-12. காலை 11-00 மணி

9. ராஜநாயகம் (39), த.பெ. நாராயணசாமி,
ம.தி.மு.க. செஞ்சி.ஜூன் 13, இரவு 1 மணி.

10. சிவராமன் (41), த.பெ. பலராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-14. காலை 7-15

11. ஜெயராமன் (32), த.பெ. ஜானகிராமன்,
தமிழர் தேசிய இயக்கம், விழுப்புரம்.ஜூன்-12. இரவு 11-00

இவர்கள் அனைவரும் விழுப்புரத்தை ஒட்டியுள்ள காணை (3பேர்), கெடார் (2பேர்), கஞ்சனூர் (3பேர்) வளவனூர் (2பேர்) சத்தியமங்கலம் (ஒருவர்) ஏன மேற்கூறிய பல்வேறு காவல் நிலையங்களில் வைத்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டனர். வெறுந்தரையில் உட்காரச் சொல்லி தொடர்ச்சியாக 5 மணிநேரம் பின்னர் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் 5 மணிநேரம் என மாறி மாறி பல்வேறு காவல்துறைப் பிரிவினர், அதிகாரிகள் ஆகியோர் ஒரே மாதிரியான கேள்விகளைத் திருப்பித் திருப்பி கேட்டுள்ளனர். 1 முதல் 9 வரை மேலும் கீழுமாக எழுதுதல், ஆங்கில தமிழ் எழுத்துக்களை எழுதுதல் என்றவாறு விசாரணை தொடர்ந்துள்ளது. ஓரு சிலரை இரண்டாம் நாள் இரவு உறவினர் மற்றும் நண்பர்களிடம் ஜாமீன் கடிதம் வாங்கிக் கொண்டு அனுப்பி மீண்டும் அடுத்தநாள் வரவழைத்துள்ளனர். தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறனை ஊனக்கு எவ்வாறு தெரியும்? அவர் ஏன் முதல்வர் கருணாநிதியை துரோகி என்றெல்லாம் பேசுகிறார்? நீ விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறாயா? இந்த சம்பவத்தை ஏன் செய்தாய்? கடந்த 5 நாட்களில் யார் யாரை எல்லாம் சந்தித்தாய்? - முதலான கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டன.

இதறகஈதிடையில் பிடித்துச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஜூன் 15இம் நாள் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். இது தொலைகாட்சிகளில் அறிவிக்கப்பட்டவுடன் அன்று இரவு 11.00 மணியளவில் அனைவரும் வீட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அது முன்னதாக ஒவ்வொருவரிடமும் தாங்கள் ஒவ்வொரு நாளும் மாலை வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாக எழுதித்தருமாறு கேட்டனர். வற்புறுத்தப்பட்டதன் பேரில் ஒரு சிலர் அவ்வாறு எழுதியும் கொடுத்தனர். ஒருசிலர் அப்படி எழுதிக் கொடுக்க மறுத்தனர். இன்னும் ஒரு சிலரிடம் ஆஜர் முச்சரிப்பில் மேலே சிலவரிகள் இடைவெளிவிட்டு கையொப்பங்கள் பெறப்பட்டன. எல்லோரின் கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன, புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. வெளியே செல்லும் போது வீடியோக்களும் எடுக்கப்பட்டுள்ளன.

ஜூன் 15இம் தேதியன்று எழிலஇளங்கோ, ஜோதிநரசிம்மன் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று சுமார் 3மணிநேரம் அறைகளைக் கலைத்துச் சோதனையிடப்பட்டுள்ளது. தமிழ்வேங்கை இல்லத்தில் 16ம் தேதி இவ்வாறு சோதனையிடப்பட்டது. ஏழில்ஈளங்கோவின் வீட்டில் ஒருகதவின் பூட்டையும் உடைத்துள்ளனர். அனைவரின் வீடுகளிலும் புத்தகங்கள், குறுந்தகடுகள், செல்போன்கள் போன்றவற்றை கைப்பற்றிச் சென்றுள்ளனர். எழில் இளங்கோ வீட்டில் அவரை கைது செய்ய வந்தஅன்று யாரும் இல்லாத நிலையில் அவரது தந்தையின் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே இருந்த பொருட்களையும் கலைத்துள்ளனர். ஆண்கள் இல்லாத நேரத்தில் ஏழில் இளங்கோ வீட்டில் அவரது மனைவி கோதை, தமிழ்வேங்கை வீட்டில் அவரது மனைவி மங்கையர்கரசி ஆகியோர் தனியாக இருந்தபோது இச்சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்வேங்கையின் மனைவி மங்கையர்கரசி அச்சத்தால் உள்ளிருந்த கதவை தாளிட்டிருந்த நிலையில் காவல்துறையினர் குறிப்பாக க்யூ பிரிவு கார்த்திக் கதவை திறக்கச்சொல்லி வற்புறுத்தியுள்ளார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரும்வரை கூட காத்திருக்க தயாராக இல்லை.

இங்கொன்றைச் சொல்வது முக்கியம். இவர்கள் அனைவரும் வெளிப்படையாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் பலகாலமாக விழுப்புரத்தில் இயங்கி வருபவர்கள். இச்சம்பவம் காவல்துறைக்கு தொடர்பாக விசாரிக்க அவர்கள் தொடர்பு கொள்ளப்பட்டபோது அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பைத் தந்துள்ளனர். கூப்பிட்டபோதெல்லாம் எங்கு வரச்சொன்னாலும் அங்கு சென்று தங்களை ஒப்படைத்துள்ளனர். அனைத்து கேள்விகளுக்கும் முறையாகவும், சோர்வின்றியும் பதிலளித்துள்ளனர். எனினும் இவர்களை 4 நாட்கள் சட்டவிரோதமாக க்யூ பிரிவு காவல்துறையினர் அடைத்து வைத்து மனஅளவிலான சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளனர்.

3. நான்கு நாட்கள சட்டவிரோதக் காவலில் தடுத்துவைக்கப்பட்ட மேற்கண்ட 11 இளைஞர்களும், தமிழ் உணர்வாளர்கள், பழங்குடியினர், தலித்துகள் முஸ்லீம்கள் இகியோர்களின் உரிமைகளுக்காகவம் சுற்றுச்சூழல், ஈழத்தமிழர் உரிமை ஆகியவிாகவும், வெளிப்படையாகவும், ஜனநாயக பூர்வமாகவும் இயங்கி வந்தவர்கள். இவர்களைப் பற்றி விழுப்புரம் நகரத்தைச் சார்ந்த முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் எமது குழுவினரிடம் தெரிவித்த கருத்துக்களாவன:

(1) திரு. சக்கரை (திமுக முன்னாள் நகர செயலாளர்)

“இவர்களை நான் பலகாலமாக அறிவேன். ஜனநாயகமுறையில் செயல் படுபவர்கள். இவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏறபட்டதில்லை. மக்கள நலனுக்காக ரயிலை மறிக்கும் போராட்டம் வேண்டுமானால் நடத்துவார்களே தவிர எந்த நாளும் தண்டவாளத்தை தகர்க்கும் வேலையில் ஈடுபடமாட்டார்கள்”.

(2) மு.ய.முஸ்தாக்தீன் (தமுமுக மாவட்ட செயலாளர்)

“இவர் களோடு நான் நீண்ட நாட்களாக வேலை செய்திருக்கிறேன். தலித்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் அடித்தளப் பிரிவினரின் உரிமைகளுக்காக அனுமதிபெு சட்டப்பூர்வமான போராட்டங்களைத்தான் நடத்தி வந்தார்கள்”.

(3) சி.ஆப்பாவு (தி.க.)

“பகுத்தறிவு ஊணர்வு மிக்க இளைஞர்கள், நெடுமாறன் அமைப்பிலிருந்து தமிழ் உணர்வுடன் செயல்படக் கூடியவர்கள். ஜனநாயக விரோதமான வழியில் இவர்கள் செயல்பட்டது இல்லை”.

4) ஏ.வெற்றிசெல்வன், மாவட்ட செயலாளர் (வி.சி.)

“இவர்களில் 5,6பேரை எனக்குத் தெரியும். மனித உரிமை மீறல்களைக் கண்டால் ஜனநாயக முறையில் எதிர்த்து நிற்பார்கள்”.

(5) டாக்டர். இரா.மாசிலாமணி Ex.MLA மாநில பொருளாளர், மதிமுக.

“காவல்துறையினர் ஆரம்பம் முதலே முன் முடிவுகளுடன் இயங்கி வருகிறார்கள். எந்த விசாரணையையும் செய்யாமலேயே மாவோயிஸ்டுகளுக்கும், இதும் சம்பந்தம் இல்லை என்றார்கள். இந்த நிகழ்ச்சியுடன் இந்த இளைஞர்களைத் தொடர்பு படுத்தி ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார்கள். தினமணி நாளிதழ் தலையங்கத்தில் எழுதியதுபோல் உளவுத்துறையினர் இந்த காரியத்தைச் செய்திருக்கலாமே தவிர இவர்கள் செய்திருக்க மாட்டார்கள்”.

(6) பாஸ்கர் (அஇஅதிமுக) நகர செயலாளர்

(எங்கள் கட்சியின் நிலைப்பாடு தெரியாமல் நான் எதையும் பேசமாட்டேன் ஏன்று ஏங்களுடன் பேச மறுத்தார். தண்டவாளத்தகர்ப்பு தவறு என்கிற கருத்துதான் எங்களுடைய கருத்தும் கூட, உள்ளூர்க்காரர் என்கிற முறையில் இந்த 11 பேரைப்பற்றிய உங்கள் கருத்து என்ன என்று கேட்டபோதும் கட்சி நிலைப்பாடு தெரியாமல் பேசமாட்டேன் எனப் பேச மறுத்துவிட்டார்).

(7) வே.அந்தோணி குரூசு (சாந்தி நிலையம், குழந்தைகள் உரிமை இயக்கம்)

“இந்த 11பேரையும் எனக்குத் தெரியும் இவர்கள் தமிழ் ஆதரவாளர்கள். பெரும்பாலோர் தமிழர் தேசிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள். காவல்துறை அனுமதியின்றி எந்தப் போராட்டத்தையும் இவர்கள் நடத்தியதில்லை. தமிழுணர்வாளர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அரசு இவர்களைப் பழிவாங்குகிறது”.

(8) தமிழேந்தி (வி.சி.)

“இந்த ஊருக்கு வந்த 17 இண்டுகளாக இவர்களில் பலரை எனக்குத் தெரியும். குறிப்பாக ஏழிலஇளங்கோ, ஜோதிநரசிம்மன், போன்றோர் எனது நெருங்கிய நண்பர்கள். மனித ஊரிமை மீறல்களைப் பொறுக்கமாட்டார்கள். இனால் அமைதி வழியிலேயே அவறறை ஏதிர்ப்பார்கள்”.

(9) ஸ்டாலின்மணி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

“தண்டவாளப் பெயர்ப்பு வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. இனால் இவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள. இவர்கள் அப்படி செய்யக் கூடியவர்கள் இல்லை”.

(10) கோ.ப.அன்பு (பா.ம.க.)

“நல்ல தமிழ்ப்பற்றுள்ள இளைஞர்கள். தமிழில் பற்று வைப்பதை குற்றம் என்றா சொல்லமுடியும்? இவர்கள் வெளிப்படையாக இயங்கியவர்கள்.அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை. செம்மொழி என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தமிழுணர்வாளர்களை இப்படி கொடுமைப்படுத்தக் கூடாது”.

11) ஆனந்தன் (மா.கம்யூ.கட்சி)

“ஜனநாயக முறையில் தமிழ் ஆதரவு குறித்து செயல்பட்டு வந்தவர்கள். பாலமுருகன் உள்பட அனைவரையும் எனக்குத் தெரியும். இந்த மாதிரி தீவிர நடவடிக்கைகளில் எல்லாம் இவர்கள் இறங்கக் கூடியவர்கள் இல்லை”.

(12) த.பழமலய், மூத்த தமிழ்க் கவிஞர்.

“நெடுமாறன் ஐயா மற்றும் எங்களைப் போன்றவர்களின் கருத்துக்களாலும் பணிகளாலும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படும் இந்த இளைஞர்களை நான் அறிவேன். தமிழுணர்வுள்ள இவர்கள் தமிழ்நாட்டுக்குள் ஒடுகிற தமிழ் மக்களை ஏிச் செல்லும் வாகனம் ஒன்றை கவிழ்த்து தமிழர்களைக் கொல்ல முயற்சிக்க மாட்டார்கள் என உறுதியாகச் சொல்கிறேன். தவிரவும் இவர்கள் இத்தகைய தொழில் நுட்பங்கள் எல்லாம் தெரிந்தவர்களும் இல்லை”.


4.காவல்துறை அதிகாரிகளை நாங்கள் சந்தித்து இதுபோல சட்டவிரோதமாக நான்கு நாட்கள் வரை தடுத்து வைக்கப்பட்டது குறித்து கேட்டபொழுது அவர்களிடமிருந்து சரியான பதில் இல்லை. விசாரணை முழுக்க க்யூ பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதால் எதுவும் கருத்துச் சொல்ல முடியாது என டிஐஜி மாசானமுத்து கூறினார். நாங்கள் வற்புறுத்திக் கேட்டபொழுது, “நீங்கள் எனது நாற்காலியில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று யோசித்துப் பாருங்கள்” என்றார். க்யூ பிரிவு ஆய்வாளர் சுந்தரத்திடம் பேசியபொழுது “அவர்கள் வெளிப்படையாகச் செயல்படுபவர்கள் என்று எங்களுக்கும் தெரியும். அதனால் தான் அவர்களை நாங்கள் கண்ணியமாக நடத்தினோம்” என்றார். சட்டவிரோதமாக 4 நாட்கள் தடுத்து வைத்திருந்தது ப்றறி கேட்டபொழுது அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தினம் அவர்களை வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதித்தோம் என்று முழுப்பொய்யுரைத்தார்.


5. நாங்கள் இந்த விசாரணையை மேற்கொண்டிருந்த நேற்று (ஜூன்-18) மதியம் மேற்படி ஜோதிநரசிம்மன், பாபு, ஏழுமலை, குமார் ஆகியோரும் இவர்களோடு தங்கராசு, முருகன் ஏனபவர்களும் க்யூ பிரிவு போலீசாரைக் கண்டித்துச் சுவரொட்டி ஒட்டியதாக கைது செய்யப்பட்டு கீழ்கண்ட பிரிவுகளின்படி வழக்கு தொடர்ந்து ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர். நகர காவல் நிலைய குற்ற ஏண் 226/2010 குற்றப்பிரிவுகள் 147 மற்றும், 1959 சுவரொட்டி சட்டம் 4(1), 4(ஏ), மற்றும் 151 சிஇர்பிசி. ரிமாண்ட் செய்யப்பட்டவர்களில் முருகன் என்பவர் கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் ஒரு தொழிலாளி, எந்த இயக்கங்களிலும் தொடர்பில்லாதவர்.

சுவரொட்டி ஒட்டியதாக இத்தனை கடும்பிரிவுகளின் கீழ் ஏன் வழக்கு தொடர்ந்துள்ளீர்கள் என்று நாங்கள் கேட்டபோது, எனக்குத் தெரியாது. விசாரிக்கிறேன் என டிஐஜியும் க்யூ பிரிவு சுந்தரமும்
கூறினார்கள்.

எமது பார்வைகளும் கோரிக்கைகளும்


01. ரயில் தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பான புலனாய்வில் எந்த ஆதாரமும் கிடைக்காத நிலையில் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லாப்படும் ஓரு கையால் எழுதப்பட்ட தாளை வைத்து ஒரு கோணத்தில் மட்டுமே புலனாய்வு மேற்கொள்ளப்படுவது கண்டிக்கத்தக்கது. உளவுத்துறை கூட இதைச் செய்திருக்கலாம் என்கிற கருத்துக்கள் கூட மக்கள் மத்தியில் நிலவும் நிலையில் இப்படி அவசர கோலமாக ஒரு குறிப்பிட்ட அமைப்மைச் சேர்ந்தவர்கள் காவல்துறை தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழர் தேசிய இயக்கம் என்கிற ஒரு அமைப்பே இன்று இலக்காக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஈழத்தமிழர்கள் மற்றும் மனித ஊரிமைகளுக்காக போராடி வந்த ஈந்த இளைஞர்களை, அதிலும் குறிப்பாக தமிழ்வேங்கை, ஜோதிநரசிம்மன், ஏழிலஇளங்கோ ஆகியோரை எப்படியாவது இந்த வழக்கில் சிக்கவைத்துப் பழிதீர்க்க காவல்துறை முயல்வது வெளிப்படையாகத் தெரிகிறது.


02. தாங்கள் எந்த நேரமும் விசாரணைக்கு வருவதற்காக இந்த 11 இளைஞர்களும் தயாராக இருந்த நிலையில் அவர்களை வலுக்கட்டாயமாகக் கொண்டு சென்று 3 முதல் 4 நாட்கள் வரை சட்டவிரோதமாகக் காவலில் வைத்திருந்ததோடு அவர்களது உறவினர்கள் நீதிமன்றத்தை அணுகிய பின்னர் தினந்தோறும் அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதியளிக்கப்பட்டது போல அவர்களை வற்புறுத்தி பொய் ஆவணங்கள் தயாரிக்க முற்பட்ட க்யூ பிரிவு காவல்துறையினர் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்கப்பட வேண்டும்.


03. தண்டவாளப் பெயர்ப்பு தொடர்பாக வல்லுனர் குழுவின் அறிக்கையொன்றை அரசு வெளியிடவேண்டும். இவ்வழக்கை க்யூ பிரிவிலிருந்து மாற்றி ஓரு டிஐஜி தலைமையிலான சிபிசிஐடி விசாரணைக்குட்படுத்த வேண்டும்.


04. வெறும் சுவரொட்டி ஒட்டிய ஒரு காரணத்திற்காக இந்த 11 பேரில் நால்வர் உள்ளிட்ட அறுவரை கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் காவலில் வைத்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப்பெறப்பட்டு விடுதலை செய்யப்பட வேண்டும்.


05. விழுப்புரம் மாவட்ட மனித உரிமை ஆர்வலர்கள், காவல்துறை அத்துமீறல்களைத் தொடர்ந்து போராட்டங்கள், சிறு வெளியிடுகள், மாநாடுகள், பேரணிகள் ஆகியவின் ஊடாக வெளிக்கொணர்ந்து வருவது பாராட்டுக்குரியது. தண்டவாளப் பெயர்ப்பை ஓட்டி நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்களிலும் உடனடியாகத் தலையிட்டு சுவரொட்டிகள் முதலியவைகள் அச்சிட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த விழுப்புரம் மாவட்ட மனித உரிமை அமைப்புகளையும் அவுடன் இணைந்து செயல்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்பினரையும் இக்குழு பாராட்டுகிறது.

ஜூன்-19-2010
விழுப்புரம்.

1 comment:

சீ.பிரபாகரன் said...

கருணாநிதி வாழ்க!
ஸ்டாலின் வாழ்க!
அழகிரி வாழ்க!
கனிமொழி வாழ்க!
மேற்படியாரின்
சுற்றமும் நட்பும்
பல்லாண்டு காலம் வாழ்க!
வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

வாழ்ந்து...

முடிந்த அளவு
தமிழினத்தை
நாசம் செய்க...