மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலண்டனில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேசனல் ஆகியவை சார்பில் 26-06-2007 செவ்வாயன்று மும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது.
இந்திய அளவில் மோதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபற்றி ஆழமாக ஆராய்ந்து அப்பாவி மக்களின் உயிரைப் பறிக்க காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்கவும் பாடுபடுவது பற்றி இம்மாநாட்டில் திட்டமிடப்பட உள்ளது. மேலும், மோதல் கொலைகள் குறித்த பல்வேறு அம்சங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
இதில், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ், தில்லியிலிருந்து பேராசிரியர் கிலானி, டாக்டர் ஜான் தாமஸ், மும்பையிலிருந்து வழக்கறிஞர் செபஸ்டின், பேராசிரியர் ஷாம்சுல் இஸ்லாம், பெங்களூரிலிருந்து கெளரி லங்கேஷ், பேராசிரியர் பாபையா, சென்னையிலிருந்து மனிதம் அக்னி சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்துகொண்டு உரையற்றுகின்றனர்.
புதுச்சேரியிலிருந்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் இம்மாநாட்டில் கலந்துகொண்டு “மோதல் கொலைகளில் சாதி, மதப் பின்னணி“ என்ற தலைப்பில் கருத்துரை வழங்குகிறார்.
மோதல் கொலைகள் குறித்து மக்களிடையே போதிய விழிப்பிணர்வு ஏற்படுத்தவும், இதுபோன்ற சட்டத்திற்குப் புறம்பான செயல்களைத் தடுத்து நிறுத்தவும், அகில இந்திய அளவிலான குழு ஒன்று இம்மநாட்டில் அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் இடம் பெறுவார்கள்.
சித்திரவதைக்கு எதிரான சர்வதேச நாளில் (ஜுன் 26) இம்மாநாடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
5 comments:
பதிவிற்கு நன்றி.
மாநாடு பற்றிய தகவல்கள் எழுதவும்.
செய்திக்கு நன்றி அய்யா
சென்றுவந்து விரிவாக எழுதுங்கள்
தவறுதலான கோடு தந்து விட்டேன்
இங்கே சொடுக்குங்க
கண்மணிக்கு வணக்கம்.
நான் மும்பை கிளம்பிக் கொண்டிருக்கின்றேன்.
நேரம் இருந்தால் 8 கேள்விகள் பற்றி எழுதுகிறேன்.
நன்றி.
Post a Comment