தென்னையும் மாவும் தேர்ந்த பலாவும்
புன்னையும் பனையும் பூத்த வாழையும்
வளையும் சவுக்கும் வளர்ந்த பூவரசும்
கலைமிகு ஆலும் கழி பெரும் அரசும்
கத்தரி வெண்டை களம்வளர் சுண்டை
கொத்தவரை பாகல் கோவை பீர்க்கன்
வெள்ளரி பூசுணை மிளகாய் புளி சுரை
தள்ளரிய காய்கனி தக்காளி பப்பாளி
அகத்தி பசலை அரை - சிறு கீரை
புகழ்பெறு காசினி பொன்னாங் கண்ணி
முல்லை ரோஜா மூக்கைத் துளைக்கும்
மல்லிகை சாமந்தி மணமிலாக் கனகா
இன்னவும் பிறவும் எல்லாம் விளையுதே
தென்றல் தவழும் தேங்காய்த் திட்டிலே!
புரட்சிக்கவிஞர் பாவேந்தரின் மாணவரும், 'புதுவை முரசு' ஆசிரியருமான தேங்காய்த்திட்டு மண்ணில் சுயமரியாதை சுடராய் வாழ்ந்த தமிழ்க்கனல் க.இராமகிருட்டினர், அவர் வாழ்ந்த ஊரின் செழிப்பு பற்றி 1972-1978 ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில் எழுதிய பாடல்.
No comments:
Post a Comment