இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ.நெடுமாறன் சென்னையில் இன்று (13-09-2007) வியாழக்கிழமை சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார்.
அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்டோர் நேரில் சந்தித்துப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் பழ.நெடுமாறன் இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று காலையில் தொடங்கினார். அப்போது அந்த வளாகத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்த தமிழகப் போலிசார் உண்ணாவிரதப் போராட்டப் பந்தலைப் பிரித்துப் போட்டு, இங்கே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தக் கூடாது என்று கூறியுள்ளனர். மேலும் மூத்த தலைவரான பழ.நெடுமாறனின் கையைப் பிடித்து இழுத்துள்ளனர். "இது எங்களுக்குச் சொந்தமான இடம். இங்கே உண்ணாவிரதம் இருப்பதை யாரும் தடுக்க முடியாது" என்று அங்கிருந்தவர்கள் போலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைப் படம் பிடித்த "சன்" தொலைக்காட்சி உள்ளிட்ட பத்திரிகைத் துறையினரைப் போலிசார் தாக்கியுள்ளனர். இதனால் காவல்துறையினருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து போலிசார் வெளியேறினர்.
சென்னையில் சாகும்வரை காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை பழ.நெடுமாறன் மெற்கொண்டதைத் தொடர்ந்து, அவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பா.ம.க. தலைவர் கோ.க.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச்செயலாளர் பெ.மணியரசன், தமிழர் தேசிய விடுதலை இயக்கத்தின் செயலாளர் தியாகு, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், தமிழக அன்னையர் முன்னணியின் அமைப்பாளர் பேராசிரியர் சரசுவதி, சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன், நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்கள் அங்கு திரண்டுள்ளனர். போலிசாரின் அடக்குமுறையை அனைவரும் கண்டித்துள்ளனர்.
பழ.நெடுமாறன் உண்ணாவிரதம் இருக்கும் பகுதிக்குள் செல்ல செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரையும் போலிசார் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் வளாகத்திற்கு வெளியே போலிசார் ஏராளமானவர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. செய்தியறிந்து தமிழகம் முழுவதுமுள்ள தமிழ் உணர்வாளர்கள் சென்னையை நோக்கி வந்துக் கொண்டிருக்கின்றனர்.
14 comments:
Sorry for typing in Thanglish
------------------------------
Arasin indha aniyaya adakkumuraikku enadhu kandanagal.... edharkaakavellam Jeyalalitha arasai edhirthomo edhellam JJ vidam pidikaadho adhiyellam indha arasum seydhu varuvadhu mika vedhaikuriyadhu...
கலைஞர்ஜி அவர்கள் சோனியாஜின் போடுகின்ற செஞ்சோற்றுக்கடனுக்காக
வஞ்சனையில் புரள்கின்றார். வரலாறு அவரை சபிக்கும் என்ற உணர்வுகூட இல்லாத மனிதர்.
புள்ளிராஜா
கலைஞர்ஜி அவர்கள் சோனியாஜி போடுகின்ற செஞ்சோற்றுக்கடனுக்காக
வஞ்சனையில் புரள்கின்றார். வரலாறு அவரை சபிக்கும் என்ற உணர்வுகூட இல்லாத மனிதர்.
புள்ளிராஜா
தமிழகமெங்கும்
மன்மோகன்
நாராயணன்
பொம்மைகள்
கொழுத்தவேண்டும்.
தகவல்களுக்கு மிக்க நன்றி.
பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
கலைஞர் அரசின் அடக்குமுறை தவறான ஒன்று,வீரப்பன் கூட தூது செல்லக்கோரி இதே கலைஞர் நெடுமாறன் வீட்டுக்கே போனார், அது என்னமோ இன்றியமையாத ஒரு பிரச்சினை போல.
ஆனால் இந்த பழ.நெடுமாறன் போன்றவர்கள், தமிழ் நாட்டுப்பிரச்சினைகளுக்கு எல்லாம் இப்படி உண்ணாவிரதம் இருக்க வருவதில்லையே அது ஏன்?
//
ஆனால் இந்த பழ.நெடுமாறன் போன்றவர்கள், தமிழ் நாட்டுப்பிரச்சினைகளுக்கு எல்லாம் இப்படி உண்ணாவிரதம் இருக்க வருவதில்லையே அது ஏன்?
//
தவறான தகவல் வவ்வால் கடந்த கால கட்டங்களில் ஐயா பழ.நெடுமாறன் பல போராட்டங்களில் பங்குப்பெற்றிருக்கிறார்.
உதராணத்திற்க்கு தழிழ் சான்றோர் பேரவை "தமிழ் வழி கல்வி " க்காக சாகும் வரை போராட்டம் அறிவித்த போது தலைமை தாங்க வேண்டிய நபர் கலைஞருக்கு பயந்து கடைசி நேரத்தில் கழன்றுக்கொண்டப்போது ஐயா அவர்கள் நேரிடையாக அங்கே வந்து தலைமை தாங்கினார்.
இன்னும் ஏரளமான சம்பவங்களை நான் பட்டியலிடலாம்...
நன்றி
லண்டனில் வசிக்கும் இந்தியத்தமிழன் என்கிற முறையில் சில வாதங்களை இங்கே வைக்கிறேன்.
- இப்போது தாயகத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் வாழும் இலங்கைத்தமிழர்களில் பலர் பெரும் கோடீஸ்வரர்களாக
உள்ளனர். அவர்கள் நினைத்தால் ஒரு கோடி என்ன பலகோடி மதிப்பில் உணவுப்பொருட்களையும் மருந்து பொருட்களையும்
இலங்கையில் வாழும் தம் ரத்த உறவுகளுக்கு வழங்க முடியும், ஆனால் அவர்களுக்கு இல்லாத அக்கரை நெடுமாறனுக்கு எப்படி வந்தது.
- இங்கெ வாழும் இலங்கைத்தமிழர்களைப் பார்த்தால் அவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் யாருக்கும் வராது.
அவர்கள் செய்யும் அடாவடிகளும், திருட்டுதனங்களும், வாழவந்த இடத்தில் செய்யும் ரவுடிஸமும் நம்மை தமிழன்
என்று கூறிக்கொள்ளவே வெட்கம் கொள்ளச்செய்கின்றன.
- தாயகத்தில் மக்கள் உணவுக்காக ஏங்கும் இந்த நேரத்தில் இங்குள்ள இலங்கைத் தமிழர்கள், பணத்திற்காக கிறிஸ்துவ கூட்டங்களில்
பங்கேற்பது, அதற்கு வீடு வீடாக சென்று ஆட்களை அழைப்பது, நோட்டீஸ் கொடுப்பது போன்ற வேலைகளிலும் ஈடுபடுகின்றனர்.
- சுனாமி சமயத்தில் தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காக இங்குள்ள இலங்கைத்தமிழ் இளைஞர்கள் வசூலித்த பணத்தில் ஒரு பைசா கூட
அவர்களுக்கு செல்லவில்லை.
இலங்கைத்தமிழர்களுக்கு எவ்வளவு தான் நீங்கள் உதவினாலும் அவர்கள் நன்றி மறந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதற்கு
பல சான்றுகள் உண்டு. உதாரணமாக அவர்களை வளர்த்துவிட்ட இந்திராவின் மகனையே கொன்றது, இன்று அவர்களுக்கு
உதவிய தமிழக மீனவர்களேயே துன்புறுத்துவது என் பலவற்றைக்கூறலாம்
"குப்பி" என்று ஒரு படம் பார்த்திருப்பீர்கள். அதில் விடுதலைப் புலிகளுக்கு பல ஆண்டுகளுக்கு முன் நன்கொடை கொடுத்த
ஒரே காரணத்திற்காக, ஒரு குடும்பம் ராஜிவ் கொலையாலிகளால் எவ்வளவு அவதிக்குள்ளானது என்பதை மிகத்தெளிவாக
விளக்கியுள்ளனர். அதைப்பார்த்த பிறகாவது, தமிழகத்தமிழர்கள் திருந்துவது நல்லது.
நெடுமாறன் அய்யா அவர்கள் மீதும் தமிழுணர்வாளர்கள் மீதும் அடக்குமுறையை ஏவிவிட்ட அரசாங்கத்திற்கு கடுமையான கண்டனங்கள்.
மற்ற விசயங்களுக்காக மத்திய அரசை நெருக்கும் கலைஞர் தமிழர்களுக்கான மனிதாபிமான விசயத்தில் பாராமுகமுகமாயிருப்பது வருந்தத்தக்கது மட்டுமல்ல வரலாற்றுத் துரோகம்.
நான் தலைப்புச் செய்திக்கு வரவில்லை; எனினும் நெடுமாறன் ஐயா உடல் நிலை கருதி இதைக் கைவிட வைக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இதே வேளை இங்கே பின்னூட்ட மெனும் பெயரில் "காலைத்தூக்கித் சலமடிக்கும் ,பெயர் குறிப்பிடாத இந்த லண்டனில் வாழும் இந்தியத்தமிழனுக்கு சில வார்ததைகள் கூற உள்ளேன்.
நீங்கள் பொத்தாம் பொதுவாக கருத்துக் கூறியுள்ளீர்கள். இப்படிப் பார்த்தால் எவருமே சுத்தமில்லை.
எல்லோருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காததால் நல்ல பிள்ளைகள் பெயரெடுக்கிறீர்கள்.
ஒன்றே ஒன்று லண்டனில் நீங்கள் இருப்பதால் கட்டாயம் தெரிந்திருக்கும்.
தமிழகத்தில் உள்ள பல ஊர்களில் வசிக்கும் ஈழத்தமிழரின் , பலரின் அயல் வீடுகளில் வசிக்கும் தமிழகத் தமிழ்ச் சகோதரர்கள்; இப்போ லண்டனில் வசிக்கிறார்கள். இவர்கள் இப்போ லண்டனில் இருப்பது ஈழத்தமிழர் எனும் பெயரில்; முகவர் மூலம் லண்டன் வந்து; தான் ஒரு ஈழத்தமிழன் எனக்கு இராணுவத்தால் கொடுமை நடந்தது என அதற்கு தேவையான ஈழமுகவரியில் இருந்து சகலதும் கொடுத்து; இன்று பலர் அகதி அந்தஸ்துப் பெற்று; குடியுரிமையும் பெற்று குடும்பம் குட்டியாக நல்ல நிலையில் வாழ்ந்து வருடாவருடம் இந்தியா வந்து செல்கிறார்கள்.
அதாவது எந்த பிரச்சனையும் தமிழகத்தில் இல்லாத இந்த இளைஞர்கள்; ஈழச்சகோதரர்கள் அன்பால்
நல்லுள்ளத்தால் வாழ்வில் காண முடியாத வாழ்வு வாழ்கிறார்கள்; அந்த நன்றியுடையவராகவும் இருக்கிறார்கள்.( அடுத்தமுறை சென்றால் பெயர் விபரமும் சேகரிக்கிறேன்)
பாரிசில் 1897 ல் இருந்து 1997 வரை ,எங்கள் மிக நெருங்கிய தமிழக நண்பரானவருக்கு (தற்செயலாக) பாரிசில் அகதி அந்தஸ்துக்கிடைக்க சகல உதவியும் செய்தது என் நண்பன்.
அந்த தமிழக நண்பர் இங்கே உழைத்த பணத்தை வைத்து தன் 3 சகோதரிகளுக்குத் திருமணம் செய்து கொடுத்து; நிலம் வாங்கி வீடுகட்டி குடும்பமாக சந்தோசமாக இப்போ சென்னையில் இருக்கிறார்.
அவர் இந்த நிலைக்கு உதவியது;என் நண்பன் ஈழத்தவன்...செய்த காரணம் "தமிழ்"
அந்த நண்பருடன் இன்றும் தொடர்புண்டு.
நாம் இந்தியா வந்தால் தன் வீட்டு விருந்தினராக வரவேண்டுமென அன்புக் கட்டளையிட்டுள்ளார்.
ஆகவே நீங்கள் காலைத் தூக்கி சலமடித்தாலும், மலமடித்தாலும்...ஒரு சிலர் புரிந்துள்ளதே போதும்.
ஆனாலும் பெயர் போட ஏன் இவ்வளவு பயப்படுகிறீர்கள்...
யோகன்,
//தமிழகத்தில் உள்ள பல ஊர்களில் வசிக்கும் ஈழத்தமிழரின் , பலரின் அயல் வீடுகளில் வசிக்கும் தமிழகத் தமிழ்ச் சகோதரர்கள்; இப்போ லண்டனில் வசிக்கிறார்கள்.//
இந்த ஒரு விஷயத்தில் நான் உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன், தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் அனைவரும் தனி தனி வீடுகளில் வசிக்கவில்லை. ஈழத்தமிழர் பெயரில் வேறொருவர் பாஸ்போர்ட் ,விசா வாங்க இயலாது, மேலும், இங்கு தனியே வீடு எடுத்து நகர மக்களுடன் கலந்து வாழ இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை, அவர்கள் எல்லாம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்கப்படுகிறார்கள் என்பதே நான் அறிந்த வரையில் உள்ள நடைமுறை.அவர்களால் அந்த ஊரை விட்டுக்கூட வெளியேர முடியாது.
இலங்கையில் இருந்து அகதிகளாக வராமல் விசா எடுத்து வந்தால் வேண்டுமெனில் இங்கு தனியே தங்கி இருக்கலாம், ஆனால் அவர்களின் பெயரில் அயல் நாட்டிற்கு எல்லாம் ஒருவர் குடி பெயர முடியாது.
அயல் நாட்டிற்கு வந்த பிறகு எப்படி ஈழத்தமிழர் பெயரில் விசா வாங்கினார் கள் என்பது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று!
லண்டனில் வசிக்கும் தமிழ்நாட்டுத் தமிழன்பருக்கு!
நான் தரும் தகவல்களை தமிழகக் காவல் துறைக்கோ,அல்லது பிரித்தானிய வெளிவிவகாரத் துறைக்கோ கொடுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். ஏனெனில் இது அவர்களுக்குத் தெரிந்த விடயம்.அவர்கள் தொலக்காட்சியில் சொன்ன விடயம்..
//இந்த ஒரு விஷயத்தில் நான் உங்கள் கருத்துடன் முரண்படுகிறேன், தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் அனைவரும் தனி தனி வீடுகளில் வசிக்கவில்லை.//
, மேலும், இங்கு தனியே வீடு எடுத்து நகர மக்களுடன் கலந்து வாழ இலங்கையில் இருந்து வருபவர்களுக்கு அனுமதி இல்லை, அவர்கள் எல்லாம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் கணக்கெடுக்கப்படுகிறார்கள் என்பதே நான் அறிந்த வரையில் உள்ள நடைமுறை.அவர்களால் அந்த ஊரை விட்டுக்கூட வெளியேர முடியாது.//
நீங்கள் ஊகத்தின் அடிப்படையில் கூறுகிறீர்களா? அல்லது நேரடி அனுபவத்தை எழுதுகிறீர்களா? தெரியவில்லை.என் உறவினர் 90ல் மன்னார் கடல் கடந்து வந்து இப்போ
வலசரவாக்கத்தில் சொந்த வீட்டில் இருக்கிறார்கள். அதாவது பொலிசில் பதிவுசெய்து இருக்கிறார்கள்.அவர்கள் மகன்மார் இருவர் லண்டனில் இருந்து தான் குடும்பத்துக்கு ஆவன செய்கிறார்கள். ஏனைய 3 சகோதரர்கள் அங்கே படிக்கிறார்கள்.
அகதி முகாமை விட்டு வெளியே சென்று வசிக்க வசதி இருந்தால் தடையில்லை ஆனால் அகதி உதவி எதுவும் கிடைக்காது.வீண்பிரச்சனைகளுக்குப் போகாமல் அயலாருடன் நல்லுறவை வளர்த்தால் நிம்மதியாக காலம் பூராக இருக்கலாம்.( விசாரித்துப் பார்க்கவும்)
// ஈழத்தமிழர் பெயரில் வேறொருவர் பாஸ்போர்ட் ,விசா வாங்க இயலாது.//
உண்மை...ஆனால் நான் கூறியதில் தெளிவில்லைப் போல்..நான் கூற முற்பட்டது..அவர்கள் ஐரோப்பா நுளைவது இந்தியக் கடவுச் சீட்டு,அல்லது மலேசியக் கடவுச் சீட்டு (ஆச்சரியப்பட வேண்டாம்) வந்து, விமான நிலையத்தால் வெளியேறி விட்டார்களா?? அதன் பின் அவர்கள் HOME OFFICE போவது
ஈழத் தமிழர் என அதற்கு தேவையானது தயாராக்கக் காசுதான் தேவை. பெற்ற அப்பன் அம்மாவைவிட காசு கொடுத்து இந்த உலகில் யாவும் வாங்கலாம். உங்களுக்குத் தெரியாமல் இல்லை.
//இலங்கையில் இருந்து அகதிகளாக வராமல் விசா எடுத்து வந்தால் வேண்டுமெனில் இங்கு தனியே தங்கி இருக்கலாம், ஆனால் அவர்களின் பெயரில் அயல் நாட்டிற்கு எல்லாம் ஒருவர் குடி பெயர முடியாது.//
எத்தனை ஆயிரம் பேர் பார்க்க வேண்டும். வலசரவாக்கம்,குன்றத்தூர், திருச்சி,திருவண்ணாமலை சென்று விசாரிக்கவும்.பொலிசில் பதிவு செய்து விட்டு வெளிநாட்டில் இருந்து பிள்ளைகள் அனுப்பும் பணத்தில், வீடு ,வாகனம் என நல்லா வாழ்வதைப் பார்க்கலாம்.
உங்களால் முடியாததை ,முடியாதெனக் கூற வேண்டாம். ‘தேவையே கண்டுபிடிப்பின் தாய்’ தேவை வந்து விட்டது.
வழிகள் கண்டு பிடிக்கப்படுகிறது.
//அயல் நாட்டிற்கு வந்த பிறகு எப்படி ஈழத்தமிழர் பெயரில் விசா வாங்கினார் கள் என்பது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று!//
அன்பரே! நீங்களும் தமிழர்,நாங்களும் தமிழர்...ஐரோப்பியருக்கு
எல்லாம் ஒன்றே...அவ்வளவும் போதும்..
இது,அடுத்தவர் தொழில் ரகசியம்...அத்துடன் சிலர் நல்வாழ்வுப் பிரச்சனை கூட, தமிழகத்திலும் சாதிக் கொடுமையாலும்,ஊழலாலும் இன்னும் பல படித்த இளைஞர்களும்,அதிகம் படிக்காதோரும் வாழ வழியின்றி இருக்கிறார்கள்.சில காலமாவது அவர்களும் இங்கே வந்து உழைத்து வாழ்வில் செழுமை காணட்டும். விபரமாகக் கூற வேண்டும். தங்கள் லண்டன் விலாசம் தரவும். நான் அறிந்தவற்றை அங்கு வரும் போது தெளிவாகக் கூறுகிறேன்.
இவை யாவும் 2000 க்கு முன் நடந்தவை!!! இப்போ மின்னியல் விசா, கணணிக் கடவுச் சீட்டு...அதனால் யாவும்..படுத்து விட்டது.
வவ்வால்!
என் கணணியில் உங்கள் பெயர் தெரியவில்லை. அதனால் அந்தப் பின்னூட்டம் ஏற்கனவே பெயர் குறிப்பிடாமல் இட்ட தமிழக அன்பரென நினைத்து ,விபரம் கூறினேன்.பின்னூட்டம் இட்ட பின் தெரிந்தது .//அயல் நாட்டிற்கு வந்த பிறகு எப்படி ஈழத்தமிழர் பெயரில் விசா வாங்கினார் கள் என்பது விசாரிக்கப்பட வேண்டிய ஒன்று!//
இதற்கு விரும்பின் தனிமடலில் சில விபரம் தருகிறேன்.பொதுவாக அழகல்ல!!!
So mr.johan paris every eela tamil in Europe are affected by SLA and IPKF?
I really respect you.
Post a Comment