Thursday, October 11, 2007

ஈழத் தமிழர்களுக்கு மதத்தின் அடிப்படையில் உதவுவதை ஏற்க மாட்டோம் - தொல்.திருமாவளவன்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் 11-10-2007 அன்று, காலை 11.00 மணிக்கு புதுச்சேரியில், "யாத்ரி நிவாஸ்" விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஈழத் தமிழர்களுக்காக பழ.நெடுமாறன் தலைமையில் ஏற்கனவே சேகரித்த நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு கொண்டு செல்ல முடியாமல் இருக்கின்றன. சேகரிக்கப்பட்ட பொருட்களைச் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் கொண்டு செல்வதற்கு தமிழக அரசும், மத்திய அரசும் உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

மனிதாபிமான அடிப்படையில் ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்வதற்கு யார் முன்வந்தாலும் விடுதலைச் சிறுத்தைகள் வரவேற்கும். மதத்தின் அடிப்படையில் நாங்களும் இந்து, நீங்களும் இந்து என்ற அடிப்படையில் உதவி செய்ய வருவதை ஏற்க முடியாது. இதை இங்குள்ள தமிழர்களும் ஏற்கமாட்டார்கள். ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.

(அண்மையில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் இல.கணேசன் ஈழத் தமிழர்களுகாக உணவுப் பொருட்கள், மருந்துகள் சேகரிக்கப் போவதாக அறிவித்தது இங்கு நினைவு கூரத்தக்கது).

திண்ணியத்தில் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியது. மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று தமிழக அரசிடம் வலியுறுத்துவோம்.

சேலம் அருகேயுள்ள கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலில் தலித்துகள் நுழைவதற்கு ஜாதி இந்துக்கள் தடை விதித்துள்ளனர். இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். வரும் 24-ஆம் நாளன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு சுமூகத் தீர்வு காண வேண்டும்.

மரக்காணம் அருகே அனல் மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டைட்டானியம் பிரச்சினையில் தமிழக அரசு ஓர் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தை அறிந்து முடிவு எடுத்தது. அதேபோல அனல் மின் நிலைய விவகாரத்திலும் ஆய்வுக் குழு அமைத்து மக்கள் கருத்தறிந்து முடிவு எடுக்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழுவில் எடுக்கும் முடிவுகளைப் பின்பற்றி அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அணுசக்தி ஒப்பந்தமானது இந்திய அரசைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தமாக இருக்க கூடாது. இந்திய இறையாண்மையைப் பாதிக்காத வகையில் ஒப்பந்தம் இருக்க வேண்டும். அமெரிக்கா விதிக்கும் நிபந்தனைகளை இந்தியா ஏற்க கூடாது. இதில் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு சரிதான். நாடாளுமன்றத்திற்கு தீடீர் தேர்தல் வருவதைத் தவிர்க்க வேண்டும்.

பாண்டிச்சேரி மாநிலத்தைப் புதுச்சேரி மாநிலம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இதில் நகரத்தை மட்டும் பாண்டிச்சேரி என மீண்டும் அழைப்பது, புதுச்சேரி மாநிலத்தை மீண்டும் பாண்டிச்சேரி மாநிலம் என அழைக்கும் நிலைக்குக் கொண்டு செல்லும்.

கவிஞர் தமிழ்ஒளி நூல்களை அரசுடமையாக்க வேண்டும். அவருக்கு அரசு சிலை நிறுவ வேண்டும். தமிழ்ஒளி பிறந்த நாள் விழாவை சென்னை, புதுச்சேரி பகுதிகளில் கொண்டாட உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.

6 comments:

Anonymous said...

//மதத்தின் அடிப்படையில் “நாங்களும் இந்து, நீங்களும் இந்து” என்ற அடிப்படையில் உதவி செய்ய வருவதை ஏற்க முடியாது.//

ஆனால் நாங்கள் கிருத்துவ மதமாற்றிகளிடம் கையூட்டு பெறுவதை யாரும் கேள்வி கேட்க கூடாது .

//பேட்டியின் போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.//

அருமை அண்ணன் செல்வப்பெருந்தகை இருந்தாரா அங்கே ?

சீனு said...

//ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.//

பட்டினி கிடப்பவனுக்கு மதம் ஏது?

//திண்ணியத்தில் மனிதர்களை மலம் தின்ன வைத்த கொடுமையில் யூகங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பது வேதனைக்குரியது.//

சட்டத்தால் அவ்வளவு தான் செய்யமுடியும் என்பது என் கருத்து. இந்த வழக்கை சட்டத்திறு அப்பாற்பட்டு தான் அனுகவேண்டும்?

Anonymous said...

//ஈழத்தில் பட்டினி கிடக்கும் தமிழர்களும் எற்கமாட்டார்கள்.//

///பட்டினி கிடப்பவனுக்கு மதம் ஏது?///


அது!!!!!!

இந்த கேள்வியிலேயே எல்லா பதிலும் அடங்கி போச்சுங்க!

Anonymous said...

அயல் நாடுகளில் வாழும் ஆதிக்க சாதிக்கார இலங்கை தமிழ் குஞ்சுகள் அங்கங்க வசிக்கிற இந்திய சாதிக்கார ஆதிக்க ஹிந்துக்கள் கூட சேர்ந்து நடத்துற சோடிப்புதாங்க இதெல்லாம்.

ஈழத்தில் இருக்கிற தலித்துங்கள அழிக்கறதுக்கு இந்திய பன்னாடைகள் கூட சேர்ந்து நடத்துற சதின்னு திருமாவுக்கு தெரியாம இருக்குது. திருமாவே, உன்னை வெச்சியே உன் இனத்திற்கே ஆப்பு வெக்க பாக்கிறான்க இந்த லம்பாடிங்க. பாத்து ஒழுங்க நடந்துக்கப்பா!

Anonymous said...

///பட்டினி கிடப்பவனுக்கு மதம் ஏது?///

அதுசரி,,,பட்டினி கிடப்பனுக்கு இனம் ஏது என்று சொல்லிவிட்டு சிங்களவரோடு கைகோர்த்துவிட முடியுமா?

பசி வந்தாலும் அரசியலில் தெளிவாக இருப்பவன் தான் புரட்சிக்காரன்.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னக் கூடாது.

மதம் தமிழர்களைப் பிரித்து அடிமை நிலையிலேயே வைத்திருப்பது என்பது ஈழத் தமிழர்களுக்கு தெரியாதா?

மதம்...கிதம்..னு தமிழ்நாட்டுக்கு வந்தால், அதோகதி தான்...

இந்துமத ஆதரவு நிலை எடுத்தால், ஈழத்தமிழனை எவனும் ஆதரிக்க மாட்டார்கள்.

சீனு said...

//இந்துமத ஆதரவு நிலை எடுத்தால், ஈழத்தமிழனை எவனும் ஆதரிக்க மாட்டார்கள்.//

ஓ! நீங்க தான் ஈழத்தமிழனின் பிரதிநிதியா? அவனை போராடுவதற்கு விடுங்கள்.