Sunday, January 13, 2008
புதுச்சேரி அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட் நிர்வாகத்தைக் கண்டித்து தொடர் முழக்கப் போராட்டம்
புதுச்சேரி, மேட்டுப்பாளையத்தில் உள்ள அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து 11-01-2008 வெள்ளியன்று மாலை 4.00 மணியளவில் தொழிற்சாலை முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்புடன் இணைந்த அத்தியப்பா கெமிக்கல்ஸ் (பி) லிட்., தொழிலாளர் நலச் சங்கத்தின் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்திற்கு சங்கத்தின் செயலாளர் ம.சந்திரகுமார் தலைமை தாங்கினார். தலைவர் சூ.சின்னப்பா வரவேற்றுப் பேசினார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் போராட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றினார்.
பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், அமைப்பாளர் தந்தைபிரியன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செம்படுகை நன்னீரகம் அமைப்புத் தலைவர் கு.இராம்மூர்த்தி, செயலாளர் பார்த்திபன், சமூக நீதிப் போராட்டக் குழு அ.மஞ்சினி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு உரையாற்றினர். முடிவில் சங்க இணைச் செயலாளர் சு.முருகன் நன்றி கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தொழிலாளர்களில் ஒரு பகுதியினருக்கு மீண்டும் வேலை அளித்த நிர்வாகம், தற்போது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுக்களைக் கூறி தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.
தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//தொழிலாளர்களைப் பழிவாங்கும் போக்கைக் கைவிட வலியுறுத்தி 10-01-2008 முதல் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் முழக்கப் போராட்டத்தில் பல்வேறு இயக்கத்தினர் பங்கேற்றனர்.//
இந்த வேலை நிறுத்தம் எல்லாம், எனக்குத் தெரிஞ்சு பெருசா ஒண்ணும் சாதிச்சதா தெரியல.
சென்னையில் உள்ள ரெண்டு மூணு பெரிய நிறுவனங்கள் (crompton, binny mills) இந்த மாதிரி வேலை நிறுத்தங்களால் இழுத்து மூடப் பட்டது.
முதலாளிகளுக்கு ஒன்றும் நட்டம் வந்திருக்காது. ஆனா, பல ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலமே மாறிவிட்டிருந்தது, இந்த செய்கையால். பள்ளிக்கூடம் கூட பசங்கள அனுப்பமுடியாம, ரிக்ஷா ஓட்ட ஆரம்பித்த குடும்பங்கள் தெரியும் எனக்கு.
ப்ரச்சனையை அணுக, போராட்டம் இன்றியமையாதது ஆகலாம். ஆனா, அதை கொஞ்சம் சம்யோகிஜதமா யோசிச்சு பண்ணா தேவலை.
உ.ம்: வழக்கம் போல வேலை செஞ்சுட்டு, வேலை முடிஞ்சு 6மணிக்கு, அலுவலகத்தின் முன்னால், கூட்டம் போட்டு கோரிக்கைகளை எழுப்பலாம். ஒரு மாசம் இப்படி பண்ணிட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம்.
முதலாளிகளுக்கு வெயிட் காட்டின மாதிரியும் இருக்கும், அலுவலகத்தை இழுத்து மூடி, சம்பளம் வராத கஷ்டம் எல்லாம் இல்லாமயும் இருக்கும்.
குடும்பத்த யோசிக்கணுங்க. சில யூனியன் லீடர்ஸ் சொல்றத கேட்டுட்டு அவங்க பின்னாடி போனா, குடும்பத்த எவரு காப்பாத்துவாரு?
உங்க கண்ணோட்டம் என்ன இந்த ஸ்ட்ரைக் பத்தியெல்லாம், தனிப் பதிவா போட்டீங்கன்னா, புரிஞ்சுக்குவேன்.
நன்றி!
no response for my comment?
i wish to see how strikes help in the long run, for my own understanding.
thank you.
அன்பு நண்பர் சர்வேசன் அவர்களுக்கு, வணக்கம்.
நான் தற்போது வேறு ஒரு வேலையில் இருப்பதால் உடன் உங்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை.
சிறிது கால அவகாசம் கொடுங்கள். பதில் அளிக்கின்றேன். பொறுத்துக் கொள்ளவும்.
மிகவும் நன்றி சுகுமாரன்.
Post a Comment