Saturday, January 30, 2010
சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் கருத்தரங்கம் தொடங்கி நடக்கிறது - படங்கள்!
சென்னையில் சிவில் உரிமை இயக்கங்களின் எல்லையும் வீச்சும் பன் மாநில கருத்தரங்கம், இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதல் அமர்வுக்கு கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு) தலைமைத் தாங்கிப் பேசினார். மனித உரிமைக்கான மக்கள் கழகத்தின் தலைவர் பேரசிரியர் அ.மார்க்ஸ் கருத்தரங்கின் நோக்கத்தை விளக்கியும், அனைவரையும் வரவேற்றும் பேசினார்.
பின்னர் தமிழகத்தின் மூத்த மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான எஸ்.வி.இராஜதுரை கருத்தரங்கைத் தொடக்கி வைத்து கருத்துரை ஆற்றினார். இந்திய - தமிழக மனித உரிமை இயக்க வரலாற்றையும், மனித உரிமை இயக்கம் சுயேட்சையாக செயல்படுவது குறித்தும் விரிவாக அவர் பேசினார்.
பின்னர், தில்லிப் பத்திரிகையாளர் சந்தியா சிவராமன், ஐதராபத்திலிருந்து வந்திருந்த மனித உரிமை மன்றத்தின் பொதுச்செயலாளர் வி.எஸ்.கிருஷ்ணா ஆகியோர் கருத்துரை வழங்கினர். பின்னர் உணவு இடைவேளைக்குப் பின்னர் தற்போது கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. மதிய அமர்வில் தில்லிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அபூர்வானந்த் உரையாற்றினார். தற்போது மக்கள் ஜனநாயக மன்றத்தின் தலைவர் பேராசிரியர் பாபையா உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
கருத்தரங்கில் பேசிய அனைவரும் மனித உரிமை அமைப்புகள் சுயேட்சையாக செயல்படுவது பற்றியும், எந்த ஒரு கட்சியையோ, அமைப்பினரையோ சார்ந்து இருக்கக் கூடாது என்பதை விளக்கிப் பேசினர். ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர் பற்றி பேசுவது மனித உரிமைக்கு எதிரானது என்றும், சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் எதிர்கொள்வது அவசியம் என்றும் வலியுறுத்தினர்.
மேலும் மதிய அமர்வில் பேச பேராசிரியர் பிரபா கல்விமணி, வழக்கறிஞர்கள் ரஜினி, கே.கேசவன், பா.புகழேந்தி ஆகியோர் காத்திருக்கின்றனர். மாலையில் விவாத அரங்கம் நடக்கிறது.
கருத்தரங்கம் பற்றி இன்னும் விரிவாக பதிவு இடவுள்ளேன்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
விஜய் டிவியில் பர்தா குறித்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று ஒரு இஸ்லாமிய அமைப்பு அறிவிததது.விஜய் டி.வி அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பமாட்டோம் என்று அறிவித்தது.ஜாகிர் நாயக் என்கிற இஸ்லாமிய மதச் சொற்பொழிவாளர் முஸ்லீம்கள்
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக் கூறக்கூடாது என்கிறார், பின் லேடனை ஆதரித்துப் பேசுகிறார்.
அவர் தமிழ் நாட்டில் நிகழ்ச்சி நடத்துகிறார். சிவில் உரிமை அமைப்புகள்/ஆர்வலர்கள் இதிலெல்லாம் தலையிட மாட்டார்களா.முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவர்களாகிய நீங்கள் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை எதிர்த்து என்ன செய்திருக்கிறீர்கள்.கண்டனக் குரலையாவது எழுப்பியதுண்டா.
Post a Comment