Friday, October 26, 2012

தந்தை பெரியார் தி.க.வினர் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!


திருச்சி சீறிரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கடந்த 20 அன்று ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட கோவை இராமகிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் புதுச்சேரி தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த வீரமோகன், ம.இளங்கோ, சுரேஷ், தீனதயாளன் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் உட்பட 19 பேர் அடங்குவர்,

தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து தந்தை பெரியார் தி.க. சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் இன்று (26.10.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தந்தை பெரியர் தி.க. பொருளாளர்  பாலமுருகன் தலைமைத் தாங்கினார்.  இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), கோ.சுகுமாரன்  (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), ஜெகன்நாதன்  (மக்கள் வாழ்வுரிமை இயக்கம்), இரா.முருகானந்தம்  (மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்), பா.சக்திவேல் (மனித உரிமை கவுன்சில்), கோ.செ.சந்திரன் (சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), எம்.ஏ.அஷ்ரப் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), ச.சத்தியவேல் (இந்திய ஜனநாயக கட்சி), கோ.பிரகாஷ் (தமிழர் களம்), அபுபக்கர் (இந்திய தவ்ஹுத் ஜமாத்), கே.சத்தியானந்தம் (புதுச்சேரி மக்கள் நல முன்னணி), மு.ப.நடராஜன் (தமிழர் தி.க.), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்), தந்தை பெரியார் தி.க. இளைஞர் அணிச் செயலாளர் ரவி, துணைச் செயலாளர் ராஜசேகர், மாணவரணித் தலைவர் சக்திவேல், அரியாங்குப்பம் தொகுதித் தலைவர் பாஸ்கரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

1 comment:

Anonymous said...

பிராமணாள் கபே என்று பெயர் வைப்பது சட்டப்படி சரியா தவறா, தவறு என்றால் அந்த ஊர் நகராட்சி எப்படி அனுமதி கொடுத்தது.சாதிப் பெயருடன் பல கடைகள் இருக்கும் போது இதை ஏன் எதிர்க்கிறீர்கள்.சட்டப்படி அவ்வாறு பெயர் இருக்கக்கூடாது என்றால் வழக்கு தொடர்ந்து பெயரை மாற்ற ஆணை பெறுங்கள். இதில் ஆர்ப்பாட்டம் செய்வதால் என்ன ஆகப்போகிறது.