

மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு புதிய இணைய தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதற்கான வேலை முழு அளவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கென புதுச்சேரியில் ஒரு எளிய தொடக்க நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.
தற்போது நான் என்னுடைய வலைப்பூவை அமைப்புச் செய்திகளை வெளியிடப் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
மனித உரிமைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அனைத்தையும் இத்தளத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். மனித உரிமைகள் குறித்த பிரகடனங்கள், சட்டங்கள், தீர்ப்புகள், வழிகாட்டும் உத்தரவுகள்,அறிக்கைகள் என அனைத்து ஆவணங்களும் இத்தளத்தில் வழங்கவும் எண்ணியுள்ளோம்.
மனித உரிமை மீறல்கள் பற்றிய புகார்களை இணைய தளத்தின் வழியாகவே அனுப்ப ஒரு புகார் பெட்டி வடிவமைக்க இருக்கிறோம். இவ்வாறு பெறப்படும் புகார்கள் முறையே விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடையவர்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.
மனித உரிமை மீறல்கள் நடக்கும் போது அதில் தலையிட்டு தடுப்பதற்கு பொதுமக்கள் பங்கேற்பை தீவிரப்படுத்துவதற்கு உரிய வழிவகை செய்ய உள்ளோம்.
மனித உரிமைச் சார்ந்து வரும் இலக்கியங்கள், புத்தகங்கள் பற்றி அவ்வப்போது தகவல்களும் வெளியிட இருக்கிறோம்.
தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் இத்தளத்தைக் காணலாம்.
இத்தளத்தை மேலும் செழுமைப்படுத்த உங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்குகிறோம்.
"http://www.peoplesrights.in/
6 comments:
வாழ்த்துக்கள்.
சேவை செய்யும் உள்ளங்களுக்கு வாழ்த்துகள்
சுகுமாரன் ஸார்.. தங்களுடைய மகத்தான மக்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன்
அன்பு நண்பர்களுக்கு,
தங்கள் வாழ்த்துக்கள் எங்களை மேன்மேலும் பணியாற்ற ஊக்கப்படுத்துகிறது...நன்றி.
manidha urimaihal thulirththu thazhaikka poraadivarum anbu sahotharare menmezhum valarattum ungal manidha urimai panihal......
nesamudan nizam,dubai.
பயன் விளைக்கும் மயற்சி!
வரவேற்கிறேன்.
Post a Comment