Saturday, February 09, 2008
கிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும் புகைப்படம்...
புதுச்சேரியில் உள்ள சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டில் பிணம் புதைக்கும் கிருஷ்ணவேணி அம்மாவும், அவரது மகனும் பிணம் புதைக்கும் போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளேன்.
கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் வினோ பிரசாத் புதுச்சேரி லாசுப்பேட்டையிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்குச் சாப்பிட வந்த அவன், தன் தாய் சிரமப்பட்டு வேலை செய்வதைக் கண்டு, அவருக்கு உதவி செய்யும் நோக்கோடு பிணத்தைப் புதைக்கின்றான். பள்ளிச் சீருடையுடன் அவன் பிணத்தைப் புதைப்பது மனதை வாட்டுகிறது.
06-02-2008 அன்று மதியம் எடுத்து, 07-02-2008 அன்றைய தினகரன் புதுச்சேரி பதிப்பில் வெளியாகியுள்ள புகைப்படம் இது.
மகன் தாய்க்கு ஆற்றும் கடமை இது?
"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் பெண்மணியின் துயரம்..
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
He just help his mother . We can appreciate him. Help him study by sponsership. The most of the writers try to crate sensational news . Not hear the cry of people for food. If her mother be a teacher or merchant he can advantage of money or status. As a human being we can help her mother find better job. We writers under stand all profession have same importance in the society. We did not try to shed crocodile tears.
நண்பர் சுகுமாரன்,
மனதை பிழிந்தெடுக்கிறது படமும், செய்தியும். விழிம்புநிலையில் வாழ தள்ளப்பட்ட நம் மக்களுக்கு என்று தான் விடியலோ? ம்ம்ம்
அரசின் திட்டங்கள் அடித்தட்டிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேரவில்லை என்பதற்கு 'வளரும் இந்தியாவின்' சாட்சிகள் இவர்கள். பணக்காரர்களுக்கும், ஆதிக்கசாதியினருக்குமான வளர்ச்சியை மட்டுமே உருவாக்கியதில் அரசிற்கு பெரும்பங்கு இருக்கிறது. நாமும் தவறியிருக்கிறோம்!
மனதைத் தொடும் காட்சி. ஆளாளுக்குப் பேசித்திரியும் பொருளாதார 'வளர்ச்சியும்', வல்லரசுக் கனவுக்காரர்களும் இவர்களுக்கு எவ்விதத்திலும் உதவியதில்லை என்பதற்கு ஒரு சாட்சி!
criticthoughts
//He just help his mother . We can appreciate him. Help him study by sponsership. The most of the writers try to crate sensational news . Not hear the cry of people for food. If her mother be a teacher or merchant he can advantage of money or status. As a human being we can help her mother find better job. We writers under stand all profession have same importance in the society. We did not try to shed crocodile tears.//
அன்பு நண்பருக்கு,
அந்த அம்மாவிற்கு உதவியது எங்களைப் போன்றவர்கள்தான். பரபப்புக்காக இதை நாங்கள் செய்யவில்லை. அந்த அம்மாவிற்கு எங்களின் போராட்டத்தினால்தான் அரசு நிரந்தர வேலைப் போட்டுத் தந்துள்ளது.
நான் என் பதிவில் குறிப்பிட்டுள்ளது போல நாங்களோ, அரசோ வேறு வேலை ஏற்பாடு செய்துத் தர தயாராக இருக்கிரோம். அவருக்கு அந்த சுடுகாட்டை விட்டு வர மனமில்லை. அதனால்தான் இன்னமும் அந்த பணியைச் செய்கிறார். இத்தனைக்கும் அவருக்கும் சுடுகாட்டைப் பராமரிக்கும் பணிதான்.
நாங்கள் ஆக்கபூர்வமாக சிந்தித்துதான் செயல்படுகிறோம். முதலைக் கண்ணீர் வடிக்கவில்லை...
Post a Comment