Thursday, September 30, 2010

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: இதுவரை வந்துள்ள விவரம்!

அயோத்தியில் ராமர் பிறந்த இடமெனக் கூறி பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய இடமான 2.5 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து 60 ஆண்டு காலமாக நடந்து வந்த வழக்கில் இன்று (30.09.2010) மதியம் 3 மணியளவில், லக்னோவிலுள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் 6000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை வழங்கியது.

இதுவரையில் வெளிவந்துள்ள தீர்ப்பு விவரம்:

மூன்று நீதிபதிகளும் தனித் தனி தீர்ப்பு கூறியுள்ளனர். மூன்று நீதிபதிகளில் ஒருவர் ராமர் கோயில் கட்ட ஆதரவு. மற்றொருவர் கோயில் கட்டவும், மசூதி கட்டவும் ஆதரவு.

பெரும்பானமை நீதிபதிகள்: சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும். மூன்றில் ஒரு பங்கு பாபர் மசூதி கமிட்டிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். மற்றொரு பங்கு ‘நிர்மோகி அகாரா’ அமைப்பிடம் தர வேண்டும். மூன்றாவது பங்கு ராமர் கோயில் அறக்கட்டளையிடம் தர வேண்டும்.

மூன்றாக பிரிக்கும் வரை அடுத்த மூன்று மாதத்திற்கு தற்போதை நிலை தொடர வேண்டும்.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் என இரண்டு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர். பாபர் மசூதி கட்ட எந்த கோயிலும் இடிக்கப்படவில்லை என நீதிபதி கான் மாறுபட்ட கருத்தை கூறியுள்ளார்.  

சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக் கோரிய சன்னி வக்பு வாரியம்,  நிர்மோகி அகரா அமைப்பு ஆகையவற்றின் மனுக்கள் நிராகரிக்கபட்டன.

இதனிடையே தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் மேமுறையீடு செய்யப் போகிறோம் என்று பாபர் மசூதி கமிட்டியினர் அறிவித்துள்ளனர்.

தீர்ப்பு குறித்து இன்று மாலை 6.00 மணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் தில்லியில்  ஒன்று கூடி விவாதிக்கின்றனர்.

தீர்ப்பு கூறப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று மாலை கூடி விவாதிக்கிறது.

5 comments:

அய்யோ_தி_முஸ்லிம்ஸ் said...

அறுபது ஆண்டுகாலமாக கோமாவில் கிடந்த நீதி இன்று ஒரேயடியாய் செத்து விட்டது...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

நல்லடக்கமா அல்லது தகனமா... அது... (அதாங்க... மேல்முறையீடு செய்தபின்னர் வரணுமே ...சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு... அதுதான்...) அது எப்போது என்று தெரியவில்லை.

அநேகமாய், இன்று முஸ்லிம்களிடம் கொடுக்கப்பட்ட மீதம் உள்ள மூன்றில் ஒரு பகுதி நிலத்தையும் அன்று முழுசாய் பிடுங்கிக்கொண்டு அம்போவென முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அடித்து அனுப்பப்போகிறார்கள், சுப்ரீம் கோர்ட்டில்...

என்னைக்கேட்டால், முஸ்லிம்கள் முட்டாள்த்தனமாய் மேல்முறையீடு எல்லாம் செய்யாமல், ஓரமாய் தரப்பட்ட அந்த ஒரு துக்கடா நிலத்தை தங்கள் மயான நிலமாக ஆக்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். இந்தியாவில் மதக்கலவரத்தில் கொல்லப்படும் அனைத்து முஸ்லிம்களையும் கொண்டு போய் அங்கே அடக்கம் செய்யலாம்.

இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.

வாழ்க ... இந்துயா...

நன்றி ... அநீதி மன்றம்...

smart said...

//இனி மேலும் மேலும் பல பல மசூதிகளில் இரவோடு இரவாக கதவை-பூட்டை உடைத்து ஹிந்து கடவுள் சிலைகளை உள்ளே வைத்து அப்புறம் கேஸ் போட்டு அந்த மசூதிகளை பூட்டி பாழடைய வைத்து பின்னர் ஒருநாள் இடித்துத்தள்ளிவிட்டு அவற்றை தங்கள் வசமாக்கிக்கொள்ள ஹிந்துத்துவாக்களை உற்சாகப்படுத்தும்படியான ஒரு கெட்ட அழிவுப்பாதையின் தொடக்கம்தான் இன்று வந்த இந்த தீர்ப்பு.//
வீணாக குழப்பத்தில் உள்ளீர்கள் அனைவரும் சகோதரர்கள்

ஒரு சின்ன உதாரணம்
இந்தியா பாகிஸ்தான் பிரிவினை போது பாக்.லுள்ள இந்துக்கள் எண்ணிக்கையும் தற்போதுள்ள எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ளவும். அதே போல இந்தியாவில உள்ள முஸ்லீம்களின் அன்றைய மற்றும் இன்றைய எண்ணிக்கையையும் கணக்கில் கொள்ளவும். இந்தியாவின் மதச்சார்பின்மை புரியும்.

mohamed ashik said...

வஞ்சக பாகிஸ்தான் பிரிவினையை அடுத்து காஷ்மீர் விடுதலை பற்றிய உறுதிமொழி இன்றும் குப்பையில், அஸ்ஸாம் இன படுகொலைகள் பற்றிய விசாரணை இன்றும் குப்பையில், கோவை கலவர ராஜரத்தினம் கமிஷன் அறிக்கை இன்றும் குப்பையில், மும்பைக்கலவர ஸ்ரிக்கிருஷ்ணா கமிஷன் அறிக்கை இன்றும் குப்பையில், கணக்கிலடங்கா குஜராத் கலவர இன படுகொலைகள் என்றென்றும் குப்பையில், பாபர்மசூதி இடிப்பு லிபரான் கமிஷன் அறிக்கை சமீபத்தில் குப்பையில், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை குப்பையிலோ அல்லது குப்பையில் அருகிலோ, கர்மவீரர் அஞ்சா நெஞ்சர் கார்கரே நேர்மையாய் நடந்த குற்றத்துக்காக கொலை, அவர் கண்டுபிடித்த அனைத்தும் கூடிய சீக்கிரம் குப்பையில், அப்புறம் இன்றைய தீர்ப்பில் நீதி குப்பையில் என் முஸ்லிம்களுக்கான அனைத்து நீதிகளும் குப்பையில் விழுந்த பின்னுமா....

இந்தியாவின் மதச்சார்பின்மை பற்றி...

இன்னுமா உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது...

அய்யகோ...

இந்த ஸ்மார்ட் குழந்தையை யாராவது காப்பாத்துங்களேன்...

அருள் said...

அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் "இராமர் பிறந்த இடம்" என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

இராமர் பிறந்த இடம் என்று இந்துக்கள் நம்புவதாக மட்டுமே கூறப்பட்டிருக்கிறது. நம்புவது வேறு, உண்மை வேறு. இரண்டும் ஒன்றல்ல.

உதயம் said...

இந்தியாவின் மதசார்பின்மை பற்றி பேசும் போது பாகிஸ்தானைப் பற்றி ஏன் இழுக்கிறார் நாத்திகவாதி ஸ்மார்ட் என்று புரியவில்லை. ஒரு வேளை, பாக்.கிலிருந்து தான் முஸ்லிம்கள் இங்கு குடியேறிவிட்டார்கள் என்று நினைக்கிறார் போலும்!