Monday, February 26, 2007

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலைக் கோரி கருத்தரங்கம்

கோவையில், சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், ஒன்பது ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலைச் செய்யக் கோரி, நீதியைத் தேடி – கருத்தரங்கம், வரும் 11-03-2007, மாலை 5 மணியளவில், பாத்திமாகனி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இது குறித்து, சிறுபான்மை உதவி அறக்கட்டளை வெளியிட்ட துண்டறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லீம்கள் உட்பட தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிறைவாசிகளின் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் 9 ஆண்டுக் கால சிறை இருப்பை, 21-ஆம் நூற்றாண்டு முஸ்லீம் சமூகத்தின் பேரழிவாகவும், இழிவாகவும் வரலாறு பதிவு செய்யவிருக்கிறது.

நீதி, நியாயம், ஜனநாயகம், சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி, நியாய, சட்ட, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, விசாரணை என்ற பெயரில் வரலாறு காணாத சிறை இருப்பிலுள்ள முஸ்லீம்களுக்கு நம்மால் உரிய நீதி பெற்றுத்தர முடியவில்லை என்றால், அதனினும் ஒரு சமூக இழிவு, பேரிழிவு வேறொன்று இருந்திடுமோ?


இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்புக் கலவரங்களின் சூத்திரதாரர்கள், மூலகர்த்தர்கள் யாரென்று ஆய்வு செய்யப்பட்டதில் அதில் முழுவதுமாக சங்க்பரிவாரங்களே இருந்துள்ளனர். ஆனால், அக்கலவரங்களின் தொடர்ச்சியை ஆய்வு செய்ததில் பொருளாதார, உயிர், உடைமை இழப்புகள், கைது நடவடிக்கைகள், வழக்குகள் என பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் முஸ்லீம்களே அதிகம் இடம் பெற்றுள்ளனர்.

அதுபோலவே, கோவையில் பல்வேறு காலங்களில் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களின் சூத்திரதாரிகளான சங்க்பரிவார் பாசிஸ்டுகள் மீது எவ்வித உருப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. முஸ்லீம்களின் சொத்துக்களை கோடிக்கணக்கில் சூறையாடிச் சேதப்படுத்தியவர்களும், முஸ்லீம்களைப் படுகொலைச் செய்தவர்களும் என ஒருவர் கூட இன்று சிறைச்சாலையில் இல்லை. அவர்களின் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளின் நிலை என்னவென்ற செய்தியைக் கூட அறிய முடியவில்லை. அவர்கள் கூட்டம் கூட்டமாய் பெரும் சதித்திட்டத்தோடு கோவை முழுவதையும் கலவரக்காடாய் ஆக்கியபோதும் அவர்ககளை யாரும் சொல்லவில்லை சங்க்பரிவார தீவிரவாதிகள் என்று. அவர்களுக்கு அமைக்கப்படவில்லை தனி நீதிமன்றங்கள். அவர்கள் எல்லாம் வைக்கப்படவில்லை தனி கண்காணிப்புச் சிறைகளில். ஆனால், பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் வெறும் விசாரணைக் கைதிகளாய் குற்றம் நிருபிக்கப்படாமலேயே தீவிரவாதிகள் என்ற அவப்பெயரோடு, 166 முஸ்லீம்களையும் ஒரே வழக்கில் சதித்திட்டம் தீட்டினார்கள் என்று கூறி, பிரமாண்ட வழக்கைத் தொடுத்து, அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி உள்ளனர்.

இந்த நீண்டகால சிறைவாசத்தால் நோயுற்ற முதியவர் ஒருவருக்கு மரணமே விடுதலையைப் பெற்றுத் தந்தது. விடுதலையாக வேண்டிய நாட்களை எண்ண வேண்டிய மற்றொருவர் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இன்னும் பலர் நோயாளிகளாய் சிகிச்சையிலேயே சிறைவாசம் கழித்து வருகின்றனர். இதனினும் கொடுமை சிலர் விடுதலை வெளிச்சம்கூட தெரியாத நிலையில் தன் குடும்பத்தவர்கள் அனைவரையும் இழந்துவிட்ட அனாதைகளாக உள்ளனர். இவர்கள் விடுதலை பெற்றால் எங்கே யாரிடம் போய்த் தஞ்சம் அடைவர்.

அன்று, பிரிட்டிஷாரின் ஆட்சியின்கீழ் இருந்த அடிமை இந்தியாவில், 17-02-1922-இல் ஆலி முஸ்லியார் என்ற முஸ்லீம் சுதந்திரத்திற்காக போராடி உயிர் நீத்த கோவை சிறையில், இன்று, 166 முஸ்லீம் சிறைவாசிகள் 9 ஆண்டுகளாய் நீதி மறுக்கப்பட்டு, சுதந்திர தேசத்தில், அடிமைச் சிறை வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் படுபாதக கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போது, சில மணித்துளிகளில் சங்க்பரிவாரங்கள் வீதியில் இறங்கி குற்றம்சாட்டப்பட்டால் மட்டும் ஒருவர் குற்வாளி அல்ல என்ற சட்ட வியாக்கியானம் கூறி சங்கராச்சாரியாரை விடுவிக்க பல்வேறு சண்டித்தனங்களைச் செய்தது. அதேசமயம், 166 முஸ்லீம்கள் ஒரு நாளோ, மாதமோ, ஆண்டோ என்றில்லாமல் 9 ஆண்டுகளாக வெறும் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் நிரபராதிகளாய் சிறைவாசம் புரிந்து வருகின்றனர். சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினைக் கொண்ட இந்நாட்டில், சங்கராச்சாரியாருக்கு ஒரு நீதி, சாமானியர்களான சிறுபான்மை முஸ்லீம்களுக்கு ஒரு நீதியா?

இந்த இழி நிலையை, பேரழிவை நாம் மறுக்கவோ, மறைக்கவோ கண்டும் காணாதது போல் இருந்திடவோ நினைக்கலாம். ஆனால், அறிந்து கொள்ளுங்கள் வரலாறு நம் மனசாட்சியைவிட நேர்மையாக இயங்குகிறது என்பதனை.


நிகழ்ச்சி நிரல்:


எம்.எஸ்.எம் அபுதாகீர் வரவேற்புரை நிகழ்த்துகிறார். எஸ்.யூ.அன்வர்கான் தலைமை ஏற்கிறார்.

எச்.சுரேஷ்
(மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி), மூத்த வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் (அகில இந்தியத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்-PUCL), எம்.எச்.ஜவாகிருல்லா (முசுலீம் முன்னேற்றக் கழகம்), எம்.குலாம் முகமது (மனித நீதிப் பாசறை), வீரேந்திரகுமார் (நாடாளுமன்ற உறுப்பினர், கேரளா), பி.எம்.ஏ.சலாம் (சட்டமன்ற உறுப்பினர், கேரளா), செபாஸ்டியன் பவுல் (நாடாளுமன்ற உறுப்பினர், கேரளா), மெளவி டி.ஜெ.எம். சலாவுதீன் ரியாஜி (ஜமாத்துல் உலமா), பலராம் (முன்னாள் தலைவர், மனித உரிமைகள் ஆணையம், கேரளா), அமீத் வனிமீல் (ஜமாத்தே இஸ்லாமிய இந்த், கேரளா), இமாம் உசேன் (JAQH), பூந்துறை சிராஜ் (மக்கள் ஜனநாயக் கட்சி, கேரளா), அக்பர் அலி (மக்கள் ஜனநாயக் கட்சி, கேரளா), எஸ்.ஜெ. இனாயத்துல்லா (அகில இந்திய மில்லி கவுன்சில்), எம்.ஆமித் பக்ரி மன்பஈ (ஐக்கிய சமாதானப் பேரவை), ஜி.எம்.என்.சலீம் (முஸ்லீம் லீக் இளைஞர் அணி), நக்கீரன் கோபால், கோவை.கு.இராமக்கிருட்டினன் (தந்தை பெரியார் தி.க.), பேராசிரியர் அ.மார்க்ஸ் (மனித உரிமைக்கான மக்கள் இயக்கம்), பி. திருமலைராஜன் (மூத்த வழக்கறிஞர்), புதுவை கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), விருத்தாசலம் ராஜு (மனித உரிமைப் பாதுகாப்பு நடுவம்), வழக்கறிஞர் ப.பா.மோகன் (சட்ட ஆலோசகர், சிறுபான்மை உதவி அறக்கட்டளை), அக்னி சுப்பிரமணியம் (மனிதம்), வழக்கறிஞர் எம்.முகமது அபுபக்கர் (மக்கள் சிவில் உரிமைக் கழகம்-PUCL) ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

முடிவில் கோவை தங்கப்பா நன்றி கூறுகிறார்.

தொடர்புக்கு: 0422-2307673, 94436 54473.
மின்னஞ்சல்: mdsafair@ gmail.com

24 comments:

╬அதி. அழகு╬ said...

"நீதியும் மனிதமும் செத்து விட்டன" என்று கோவை முஸ்லிம்கள் எடுக்கவிருந்த இறுதி முடிவை, தங்கள் பதிவும் அது தரும் செய்தியும் தடுத்து வைக்கின்றன‌ - தற்காலிகமாகவேனும்.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

திரு. அழகு அவ்ர்களுக்கு,

மிக்க நன்றி.

கோ. சுகுமாரான்.

Sirajudeen said...

இந்தியா ஜனநாயகம்??? பெரிய, எத்தனை முறை வேண்டுமானாலும் கேள்வி குறியைப் போட்டுக் கொள்ளுங்கள்.

Anonymous said...

In which the case against Sankaracharya is relevant here.
He was arrested and is out on bail.
He was not accused of planting bombs or hatching conspiracy to
kill people enmasse.He got bail
after being in prision for some
time.
As far as I remember cases were filed in coimbatore against RSS/Hindutva elements also and some were convicted.If muslims do not get bail they have to take it up with the state government and judicial system.Tamil Nadu is not ruled by BJP or RSS.Civil rights groups lose their credibility when they join hands with religious fundamentalists and terrorists.
K.G.Kannabiran is appearing on behalf of the accused in this case.
As a lawyer he has right to defend anyone who is accused.I have no problem with that.At the same time
in the eyes of the public he will not be considered as a neutral person.
A.Marx is an ardent supporter of Islamic fundamentalism.His hatred
for Hinduism is well known.
When civil rights groups and activists support and work with
religious fundamentalists who deny gender justice they no longer enjoy the confidence of many persons who are against relgious
fundamentalism of all kinds.
When civil rights groups and activists shed tears for Saddam
Hussein but oppose Modi their hypocrisy is obvious.Of late I am
losing hope on them and am wondering whether they will regain
their credibility.They should be secular in letter and spirit.
There is more to secularism than
BJP/RSS bashing.
ravi srinivas

Anonymous said...

இந்த முஸ்லீம்கள் வெடித்த குண்டுகளால் செத்த அந்த 66 பேருக்கு என்ன செய்ய போகிறீர்கள் ? செத்தவர்கள் இந்துக்கலாதலால் உங்கள் அரபு வருமானத்தில் அவர்களுக்கு பங்கு தர முடியாதில்லையா ?

கரு.மூர்த்தி

இளங்கோ-டிசே said...

பகிர்தலுக்கு நன்றி சுகுமாரன்.

bala said...

சுகுமாரன் அய்யா,
என்ன மறுபடி மும்முரமா தொழில் ஆரம்பிச்சிட்டீங்க?பாகிஸ்த்தான் தீவிரவாத கும்பல் சமீபத்துல பணம் அனுப்பிச்சி வச்சாங்களா?வாங்கின பணத்துக்கு நல்லாவே வேலை பண்ணறீங்க.வாழ்த்துக்கள்.

பாலா

Anonymous said...

//bala said...

சுகுமாரன் அய்யா,
என்ன மறுபடி மும்முரமா தொழில் ஆரம்பிச்சிட்டீங்க?பாகிஸ்த்தான் தீவிரவாத கும்பல் சமீபத்துல பணம் அனுப்பிச்சி வச்சாங்களா?வாங்கின பணத்துக்கு நல்லாவே வேலை பண்ணறீங்க.வாழ்த்துக்கள்.

பாலா //

பாலா , அவரு இப்பல்லாம் பாகிஸ்தான்கிட்ட கையேந்தரதில்லை , நேரா அரபு பணம்தான் . பணம் புகழக்காக மனிதௌரிமைங்கர பேரால எதுவும் செயவாங்க.

சரி , அவர்கள் வெடித்த குண்டுகளால் செத்தவங்களுக்கு இந்த மனிதௌரிமையெல்லாம் கிடையாதா ?

கரு.மூர்த்தி

Anonymous said...

சுகுமாரன்,


ரவிஸ்ரீநிவாஸ் அவர்கள் சொல்லியுள்ளதையே நானும் வழிமொழிகிறேன்.

குண்டு வைத்தவர்கள் மிகவும் கொடூரமான தீவிரவாதிகள். அவர்கள் நியாயத்திற்காகவோ, சமுதாய மேம்பாட்டிற்காகவோ போராடி சிறை சென்றவர்கள் கிடையாது. மதவெறி தலைக்கு மேலிட்டு இந்தக் காரியத்தில் இறங்கியவர்கள். இதை நான் சொல்லவில்லை. இன்று பல முஸ்லிம்களே சொல்கிறார்கள். தமிழ் வலைப்பதிவுகளில் கூட பஸ்லுலிலாஹி, முகவைத்தமிழன்(ரைசுத்தீன்) போன்றவர்களது பதிவுகளைப் படித்தால் இதை அறியமுடியும்.

இன்று இவர்களுக்கு வாதிடினீர்கள் என்றால், நாளை வெளியே வந்து மீண்டும் அல்லாஹ்வின் திருப்பெயரால் தமிழகமெங்கும் குண்டு வைக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

பெரும்பான்மை மதவெறியால்தான் இவர்கள் இப்படி மாறினார்கள் என்கிற இஸ்லாமிய தக்கியாவுக்கு நீங்களும் மயங்கியிருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். அது உண்மையென்றால் ஏன் பாகிஸ்தானிலும் இதே மதவெறி ஆட்டி வைக்கிறது? வங்க தேசத்தில் ஏன் நிதம் நிதம் குண்டுகள் வெடிக்கின்றன? பிரச்சினை இவர்களின் மத நம்பிக்கையில் இருக்கிறது. நாளையே தமிழகம் முழுவதும் முஸ்லிமானாலும் இது நிகழும்; வகாபிக்கள் தர்கா செல்லும் முஸ்லிம்களைக் காஃபிர்கள் என்றழைத்து குண்டு வைப்பார்கள். ஷியாக்கள் சூஇன்னிக்களுக்கு குண்டு வைப்பார்கள், ஸுன்னிக்கள் அகமதிக்களூக்கு குண்டு வைப்பார்கள். மதவெறி மேலிடுவதால் ஏற்படும் விபரீதம் இது - இஸ்லாத்தின் அடிப்படையோடு சம்பதப்பட்டது இந்த வன்முறை.

இவர்களின் விசாரணை தாமதமாகின்றது என்றால், இந்தியாவில் எங்கேயும் நிலைமை அப்படியே தான் இருக்கிறது. விசாரணை தள்ளிப்போவதற்கு முக்கியக் காரணம் இவர்கள் நீதிபதிகளை மிரட்டுவதும், கோர்ட்டுக்குள்ளேயே வந்து குர் ஆன் ஓதி போலீசாரை, வழக்கறிஞர்களை, சாட்சி சொல்ல வரும் இந்துக்களை மிரட்டுவதாலும்தான். இவர்களுக்கு இப்படி மதவெறி மிகுந்ததில் உயிரிழந்த இந்துக்கள் அனைவருமே அன்றாடங்காய்ச்சிகள் தான். மசூதியில் இன்று இத்தனை காஃபிர்களை வெட்டவேண்டும் என்று ஃபத்வா கொடுத்து, மதம் கண்ணை மறைக்க சகட்டுமேனிக்கு கண்ணில் பட்ட இந்துக்களையெல்லாம் வெட்டியிருக்கின்றார்கள்.

எண்ணிக்கை தந்த தைரியத்தில், அல்லாஹ்வுக்காக ஜிகாத் செய்து காஃபிர்களைக் கொல்கிறோம் என்கிற மத அடிப்படைவாத எண்ணத்தில் இக்கொடூரங்களைச் செய்திருக்கின்றார்கள்.

சாட்சி சொல்ல வருபவர்களை மிரட்டுவது, சிறையிலும் குழுவாக நடந்து கொண்டு ஏனைய கைதிகளை அடித்து மிரட்டுவது, ஜெயிலரைக் கொலை செய்வது என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கும்பல், வெளியே வந்தால் நாளைய தமிழகத்தின் நிலை என்னாவது?

எதோ இஸ்லாமிய அடிப்படைவாதத்தால், கோயம்பத்தூரிலுள்ள இந்து அமைப்பினர்தாம் பாதிக்கப்படுகிறார்கள் என்று புதுச்சேரியிலிருந்து கொண்டு கனவு காணாதீர்கள். இவர்களுக்கு எல்லோருமே காஃபிர்கள் தான். இவர்களுக்கு நான் மட்டுமல்ல, நீங்களும் காஃபிர்தான். தமது மதத்தைச் சேர்தவர்களைக் கூட, இவர்கள் நம்புகிற விதிகளுக்கு முரணாக செயல்பட்டதால் கொன்ற கொடூரர்கள் இவர்கள். இன்னும் சொல்லப்போனால், இவர்களின் முதல் இலக்கு இன்றும் செக்யூலர் முஸ்லிம்கள் தான்.



இதில் ஒரு சிலர் அப்பாவிகள் தான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், அப்படி அடிபட்டு, உதைபட்டு, சிறையில் வாழும் அப்பாவிகள் எண்ணற்றோர் இருக்கின்றனர். அப்படி கோரிக்கை எதாவது வைப்பதானால், மத வேறுபாடின்றி, விசாரணைக்கைதிகளாக சிறையில் வாடும் அனைவரும் வெளியே வரவேண்டும் என்று குரல் கொடுங்கள்.


இதில் பங்கேற்பதால், உங்களுக்கு உங்களின் ஈகோவை திருப்திப்படுத்திக்கொள்ள இன்னும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும், உங்களுக்கு பெயர் கிடைக்கும், மதச்சார்பின்மையாளர் என்ற பட்டமும் புகழாரங்களும் கிடைக்கும் - ஆனால், இதற்க்கும் பதவி வெறிபிடித்து அலையும் (உங்களைப் போன்றவர்கள் திட்டும்) அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் கிடையாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.


உங்களது செயல்பாடுகளினால், மதவெறி குறைந்தால், மனித நேயம் மலர்ந்தால் அதைக் கண்டு மகிழ்பவர்களுள் நானும் ஒருவனாக இருப்பேன். ஆனால், மதவெறி இவர்களது கண்ணையும் இதயத்தையும் கட்டிப் போட்டிருக்கின்றது. பல ஆண்டுகள் பழகிய நண்பர்களைக் கூட அவர்கள் மாற்று மதத்தவர்கள் என்று(அன்று நபி சொன்னார் என்பதால் இன்று) கொலை செய்யும் இவர்களின் மனதில் உங்களைப் போன்றவர்களின் முயற்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது. தாம் மிகவும் புத்திசாலித்தனமாக இந்துக்களை வைத்தே விடுதலை வாங்கிவிட்டதாக மார்தட்டிக் கொள்வார்கள். அல்லாஹ் தங்களுக்கு விடுதலை வாங்கித்தந்தார் என்று இன்னமும் மதவெறி இவர்களுக்கு அதிகரிக்கவே செய்யும்.


சமீபத்தில் தமிழகத்தில் நிலவிவரும் ஜமாத் அடக்குமுறை பற்றி விரிவான கட்டுரைகளை எழுதிய புதுவை சரவணன் அவர்கள் சொல்கிறார், இதே கோவை சிறையில் எண்ணற்ற இந்துக்களும், எந்த குற்றம் செய்யாதபோதும் வாடுகின்றார்கள் என்று. இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களைக் கைதுசெய்தால், இந்துக்களையும் கைது செய்ய வேண்டும் என்ற தமிழக போலீசாரின் எழுதா விதிப்படி கைது செய்யப்பட்டவர்கள் என்கிறார் அவர். குண்டு வைத்தவர்கள், குரான் சொல்கிறது என்பதற்க்காக கொடூரமாக வெட்டிக் கொன்றவர்கள் எல்லாம் முஸ்லிம்கள். ஆனால், போலீஸ் கணக்கை சமன் செய்வதற்காக இந்துக்களையும் பிடித்து உள்ளே வைத்தது. மதவெறி தலைக்கேறி குண்டு வைத்தவர்களை வெளியே விடக் கோரினால், மதவேறுபாடின்றி அநியாகமாக சிறையில் வாடும் அனைவரையும் வெளியே விடச் சொல்லுங்கள்.

Anonymous said...

They can answer for Kovai police Selvaraj murder and talk about human rights anywhere....

As per me I want to kill who planned for all bombing (who expected to kill Women, Children and pregnent women in the name of Muslim religion).

Only few people suffering for rights ...But the people who lost the rights to live in the world.

I want human rights for who lost lives on killing...

My brother lost life....

Mr. கோ.சுகுமாரன் Please give us life...He was the only earning person in the family and All we (1 brother and 2 sisters) stopped education and working for food.

We did not come you to beg for our life...We lost our rights for Education.

Can you talk about it....

Could you please tell me, If you lose anyone(your son/Daughter/brother/sister/father/mother) in the riot , Can you talk about the human rights of killer.

If so please talk about rights of Dharmapuri killers also...

A true person affected by coimbatore riots (also i am a muslim). I cannot reveal my name due practical (everyone knows my family cannot live in Karumbukadai) reason.

Anonymous said...

Thanks for the post Mr. Sukumaran.
It is really good to see that still some people are trying to lend hands for this prisoners.
Personally i have come across their sufferings and agonies.

Nesakumar&co. should understand that nobody is asking to release them if they are proved to be criminals.
They are suffering in prisons just with allegations and the case is prolonging for past 9 years.
All they seek is quick trial and justice.

Should we beleive that 'appaviiii' RSS people are suffering in Prisons without any justified crime???

Anonymous said...

Thanks for the post Mr. Sukumaran.
It is really good to see that still some people are trying to lend hands for this prisoners.
Personally i have come across their sufferings and agonies.

Nesakumar&co. should understand that nobody is asking to release them if they are proved to be criminals.
They are suffering in prisons just with allegations and the case is prolonging for past 9 years.
All they seek is quick trial and justice.

Should we beleive that 'appaviiii' RSS people are suffering in Prisons without any justified crime???

கரு.மூர்த்தி said...

நன்றி நேசகுமார் , கோவை குண்டு வெடிப்பால் பாதிக்கப்ட்ட என்னாலேயே இவ்வளவு தெளிவாக நிகழ்வை சொல்ல இயலவில்லை ,

ஆனால் நீங்களும் நானும் இப்படி எடுத்து சொல்வதால் இவர்கள் திருந்தபோகிரார்களா ? புதுவையிலும் குண்டு வெடித்து இவர்களின் குழ்ந்தைகளை பறிகொடுத்தால் மட்டுமே வலி புரியும் சுகுமாரனுக்கு .

Anonymous said...

Kottai Amir, a muslim who refused to accept islamic fundamentalism
was brutally killed by the exterme elements in muslim society.Amir was a secular politician.Meetings like this will create more tension and animosities.Coimbatore does not need this.This will not help the muslim community also. Getting bail or not is a legal issue and treat it so. Please do not mix up religious politics with this question of granting bail.Stop sowing more seeds of islamic fundamentalism and terrorism.
The organisers have collected
lots of money in the name of
muslim prisoners.Let them do
what they want for their community.
Others should not fall victims of their tatics.

Anonymous said...

//Thanks for the post Mr. Sukumaran.
It is really good to see that still some people are trying to lend hands for this prisoners.
Personally i have come across their sufferings and agonies.


Nesakumar&co. should understand that nobody is asking to release them if they are proved to be criminals.
They are suffering in prisons just with allegations and the case is prolonging for past 9 years.
All they seek is quick trial and justice.

Should we beleive that 'appaviiii' RSS people are suffering in Prisons without any justified crime??? //


அய்யா அனானி,


நான் எழுதியிருப்பதைத் தயவு செய்து மீண்டும் ஒரு முறை படியுங்கள். குண்டு வைத்தவர்களின் குடும்பங்கள் கஷ்டப்படுகிறது என்றால், குண்டால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் நிலையை எப்படி விவரிப்பது.

கோவையில் வறுமைக் கோட்டிற்குக் கீழேயிருக்கும் ஒரு குடும்பத்தில் மகனைக் கொன்றார்களென்று தாயார் சாட்சி சொல்லப்போனால், அங்கிருந்த முஸ்லிம் தீவிரவாதிகள் அவரைப் பார்த்து நகைத்து எக்காளமிட்டிருக்கின்றனர். போலீஸாரே அந்தப்பெண்மணியின் மீது பரிதாபப்பட்டு இனிமேல் இங்கே சாட்சி சொல்ல வரவேண்டாம் என்று அனுப்பிவிட்டனராம்.

இந்தக் குடும்பங்களின் வேதனையும் துயரமும், மதக்கொழுப்பில் குண்டு வைத்து , ஜெயிலுக்குள்ளும் ஜிகாத் நிகழ்த்திக்கொண்டிருக்கும் மதவெறியர்களின் குடும்பத்தாரின் வேதனையோடு ஒப்புக்கு ஒப்பிடுவது கூட அநியாயம்.

விசாரணை தேவையென்றால், சுகுமாரன் போன்றவர்கள் அனைத்து விசாரணைக் கைதிகளுக்காகவும் போராட வேண்டியதுதானே? நீதிமன்றங்களில் வழக்குகள் தாமதமாவதால், டிலேய்ட் ஜஸ்டிஸ் இஸ் டினைய்டு ஜஸ்டிஸ் என்பதால் இந்தியாவில் பெரும்பாலோர்க்கு நீதி மறுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. உடனே இணைய இஸ்லாமிஸ்டுகள் ஷரீயத்து நீதிமன்றங்களைக் கோரவேண்டாம், பக்கத்திலிருக்கும் பாகிஸ்தானிலும் இதே நிலைதான். எங்கோ இருக்கும் சவுதியிலும், விசாரணையின்றி அடைபட்டுக் கிடப்பவர்கள் ஏராளம். அனைத்து பின் தங்கிய நாடுகளுக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினை இது.

இதற்காக, நீதிமன்றங்களில் வழக்குகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி கோருங்கள், இது போன்று சிறையில் விசாரணையே இல்லாமல் இருபது வருடங்களாக வாடுகிறவர்கள் கூட இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு இந்த மதவெறியர்களுக்காக போராடுவதன் மூலம் என்ன சமிக்ஞை போகிறது இந்த மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து? மீண்டும் வெளியே வந்து குண்டு வை, எங்கள் நாட்டில் தேங்கியிருக்கும் வழக்குகள் காரணமாக, உனது கொடூரங்கள் காரணமாக உன் மீது விசாரணை தாமதப்படும் அல்லது உன் மீதான குற்றங்களை நிரூபிக்க முடியாது. மீண்டும் நாங்கள் போராடி உன்னை வெளியில் கொண்டு வருவோம். ஜிகாதை சுதந்திரமாக நடத்து, காஃபிர்களை வெட்டி சாய் - இதுதானா இந்த 'மதச்சார்பற்றவர்கள்' சொல்லும் செய்தி?


சுகுமாரன்,


உங்களுக்கு மனச்சாட்சி என்று ஒன்று இருந்தல், கோவையில் சென்று முஸ்லிம் பகுதிகளில்(கோட்டை, கோட்டை மேடு) இருக்கும் ஓரிரு இந்துக்களிடம் பேசிப்பாருங்கள் - தினம் தினம் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அஞ்சி அஞ்சி வாழ்கின்றார்கள். உண்மையில் என்ன நிகழ்ந்ததென்று எந்தக் கட்சி சார்பும் இல்லாத தெருவோர இந்துக்களைக் கேட்டுப் பாருங்கள். குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சென்று பாருங்கள். குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டு சிறைக்குள்ளே இருப்பவர்களிடம் ஜிகாது செய்வது சரிதானா என்று கேட்டுப் பாருங்கள் - பின்பு முடிவெடுங்கள்.

Anonymous said...

H.Suresh is an ex-judge of Mumbai High Court.He is not a judge now.

ஜடாயு said...

சுகுமாரன்,

2006 மும்பை குண்டுவெடுப்புக்குப் பிறகு நான் எழுதிய திண்ணை கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தேன்.


... இதற்கு முன் 2002 மும்பை காட்கோபர் குண்டு வெடிப்பின்போது போலீசாரால் கைப்பற்றப் பட்ட அரபு மொழியில் இயற்றப் பட்ட "அல்-கொய்தா தீவிரவாத கையேடு" பற்றிய தகவல்களை 'தி வீக்' வார இதழ் வெளியிட்டுள்ளது [4]. சமீபத்திய குண்டு வெடிப்பைத் திட்டமிட்டவர்கள் இந்தக் கையேட்டின் வழிகாட்டலை இம்மி பிசகாமல் பின்பற்றி இருப்பதாகவும் இந்தக் கட்டுரை கூறுகிறது.. குண்டுகள் தயாரிப்பு, தற்கொலைப் படைகள் அமைத்தல், தீவிரவாதிகள் பயிற்சி போன்ற ஜிகாத் பற்றிய 'அடிப்படை' விஷயங்கள் மட்டுமன்றி கருத்து மற்றும் சமய சுதந்திரம் நிலவும் நாடுகளில் இவற்றின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தீவிரவாதத்தை வளர்ப்பது எப்படி என்பதையும் இந்தக் கையேடு கூறுகிறது. வன்முறைகள் நடந்தபின் அரசு குற்றவாளிகளுக்கான வேட்டையில் இறங்கி ஜிகாதிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தேடும், கைது செய்யும்.. அப்போது "ஐயோ, முஸ்லீம்கள் மீது பழி.. எங்கள் சமய உரிமைகள் பறிக்கப் படுகின்றன.. நாங்கள் முஸ்லீம்கள் என்பதால் பழி வாங்கப் படுகிறோம்" என்றெல்லாம் மதத்தின் பெயரால் கூச்சல் எழுப்ப வேண்டும்.. இதற்கு நல்ல பலனும் அரசியல் ஆதரவும் கிடைக்கும் - இந்த 'டெக்னிக்'கை கையேடு புட்டுப் புட்டு வைக்கிறது.. "இது பலிக்காவிட்டால் மனித உரிமை என்ற பெயரில் கூச்சல் எழுப்ப வேண்டும்.. நாமே எதிர்பார்க்காமல் மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்தெல்லாம் இதற்கு ஆதரவு வரும்" - இது எப்படி?? கோவை குண்டு வெடிப்பைத் திட்டமிட்டு நடத்திய கயவன் அப்துல் நசீர் மதானியை விடுவிக்கக் கோரி கேரள "செக்யூலர்" அரசியல் கட்சிகளும் அரசும், தமிழக அரசை நிர்ப்பந்திப்பதன் பின்னணி இது தான்.. POTAல் கைது செய்யப் பட்ட மும்பை 2002 குண்டு வெடிப்பு குற்றவாளிகள் மிகல் சுலபமாக வெளியே வந்து தங்களைத் துணிச்சலுடன் கைது செய்த காவல் அதிகாரி ரோஹிணி சாலியான் (பார்க்க: [4]) மீதே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரும் அளவுக்கு சுதந்திர நாட்டின் உரிமைகள் துஷ்பிரயோகம் செய்யப் படுகின்றன.. கடுமையான சட்டம் என்று கருதப் பட்ட POTA-வையும் ஒழித்து, செக்யூலர் அரசும் கட்சிகளும், அல்-கொய்தாவின் எதிர்பார்ப்புக்கிணங்க ஜிகாதி தீவிரவாதம் ஓங்கி வளரப் பேருதவி புரிந்து வருகின்றன..

சாய் சுரேஷ் [4] கூறுவது சிந்தனைக்குரியது - "சமூக சுதந்திரம் என்பது சமூகத்தின் நலனையும், சுதந்திரத்தையும் மதிக்கும் குடிமக்களுக்கு மட்டும் தானே தவிர, மனிதத் தன்மை இல்லாமல் அப்பாவி மக்களை ஜிகாத் என்ற பெயரில் கொன்று கொவிக்கும் அரக்கர்களுக்காக அல்ல".. அரசு, தீவிரவாதத்தை ஒடுக்கும் போது இதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.. பஞ்சாப் தீவிரவாதத்தை முனைந்து ஒடுக்கி, பஞ்சாபில் மீண்டும் அமைதியை நிலை நாட்டியதில் முன்னணி வகித்த மாவீர காவல் அதிகாரி கே.பி.எஸ்.கில் அவர்களும், இதே கருத்தைத் தான் வலியுறித்தி வருகிறார்.


-------
இப்போது கோவை விஷயத்தில் இதே தந்திரத்தைத் தான் தீவிரவாதிகள் பயன்படுத்துகிறார்கள். சந்தேகமே இல்லை. மனித உரிமை ஆர்வலர்கள் என்ற பெயரில் தெரிந்தோ, தெரியாமலோ இவர்களுக்கு உதவி செய்பவர்கள் நாட்டிற்குப் பெரும் தீங்கையே விளைவிக்கிறார்கள்.

தயவு செய்து இதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

Anonymous said...

I really appreciate your story buliding capability Nesakumar.
We already know about your perverted mind. So, no need to prove it again!!!!

Can you justify your bluff?
What jihad you see in the jail. If you yell out with a big comment it doesn’t imply that whatever you bluff is true.

I know so many youg people in 19/ 20 years of age. They are in jail for past 9 years, so just understand at what age they came here.

I again re-iterate that nobody ask to rleease them if they are proved to be ciriminals. Run the trial and prove each and every person’s crime.
Can you? Just bluffing around that they are so called Jihaid’, will not help.

Anonymous said...

எவராக இருப்பினும் தவறிழைப்போர் தண்டிக்கப்படவேண்டும். ஆனால் ஆதாரமில்லாது குற்றம் சுமத்தப்பட்டவர்கள் விடுவிக்ககப்பட வேண்டும். இல்லையேல் சந்தேகத்தின்பேரில் நாம் அனைவரும் சிறைக்கைதிகளாக வாழவேண்டிய சூழல் ஏற்படும்.

Anonymous said...

அன்பு நண்பரே,

//I really appreciate your story buliding capability Nesakumar.
We already know about your perverted mind. So, no need to prove it again!!!!

Can you justify your bluff?
What jihad you see in the jail. If you yell out with a big comment it doesn’t imply that whatever you bluff is true.

I know so many youg people in 19/ 20 years of age. They are in jail for past 9 years, so just understand at what age they came here.

I again re-iterate that nobody ask to rleease them if they are proved to be ciriminals. Run the trial and prove each and every person’s crime.

Can you? Just bluffing around that they are so called Jihaid’, will not help. //


எதை perversion என்கிறீர்கள்? ஜிகாதிகள் செய்துவரும் அட்டூழியங்களைப்பற்றி பேசுவதையா? எதை bluff என்று சொல்கிறீர்கள் கோவையில் குண்டு வைத்தவர்கள் மதவெறி பிடித்த முஸ்லீம்கள் என்பதையா?

நீங்கள் வேண்டுமானால், எல்லா இடத்திலும் யூதர்கள் குண்டு வைத்து அமைதி மார்க்கத்தினரின் மீது பழி போடுகிறார்கள் என்று தக்கியா செய்யலாம், அந்த தக்கியாவிலேயே மயங்கிப் போய் அப்படியே நம்பக்கூடச் செய்யலாம். ஆனால், என்ன செய்வது, முஸ்லிமாக இல்லாத காரணத்தினால், எங்களுக்கு புலன்கள் அனைத்தும் இன்னமும் முழுமையாக வேலை செய்கிறது. மதியும் மார்க்கப்பித்தேறி மயங்கிடாது இருக்கின்றது.

மேலே நான் சொன்ன அனைத்திற்கும் ஆதாரங்கள் உண்டு. தினசரி செய்திப் பத்திரிகைகளைப் படித்தாலே இந்த விபரங்கள் கிட்டும். ஜெயிலரைக் கொலை செய்தது, ஜெயிலுக்குள் ஏனைய தமிழ்க்கைதிகளை அடித்து மிரட்டுவது, உள்ளேயே ஜிகாத் படை போன்று செயல்படுவது, இவ்வளவு ஏன், தங்களுக்குள்ளேயே குழுவாகப் பிரிந்து அடித்துக் கொள்வது என்று எல்லாவற்றையும் செய்த இவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக தமிழ் ஊடகங்கள் எழுதுகின்றனவே. இதில் கோபாலின் நக்கீரனும் அடங்கும்.

போகட்டும், நான் உங்களைப் போன்ற மதவெறிபிடித்த முஸ்லிம்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முடியாது. ஆனால், நான் கோரிக்கை விடுப்பது கோ.சுகுமாரன் போன்றவர்களிடம். அதுவும், ஒரே கோரிக்கைதான். அப்படி நீங்கள் போராடினால், ஜாதி-மத வித்தியாசமின்றி தமிழகத்தின் அனைத்துச் சிறையிலும் அடைபட்டுக் கிடக்கும் விசாரணைக் கைதிகளுக்காகப் போராடுங்கள். ஜிகாதிகளுக்காக மட்டும் பரிந்து பேசாதீர்கள் - இந்த ஒரே வேண்டுகோளைத்தான் அவர் முன் வைக்க விரும்புகின்றேன்.

Anonymous said...

if you see 'innocent' RSs people suffering in jail, why dont you take this to Human Rights commission and fight for them.
Or Until now, what have you done for them to relieve from their agonies.
Without doing this constructive work, why do you want to wash your dirt linen in public?

Why do you always want to show your prejudice and perversions
We pretty well know about you and your hatred.
Whenever you get a chance you will start screaming about Islam and Muslims...
If you call me 'மதவெறிபிடித்த மு'
then who are you? What all you writings and thoughts indicate, your social concerns?!!!!!

Like i said before, there are people who are there in 17,18, 19 years. what jihad they did before 9 years?
OR what Jihad they are doing now in Jail, Is police just keep watching their Jihad in Jail?

If you want to help you people, take it in a right way.
You can render Mr.Sukumaran or his organization's help in a direct way.
Without, dont try to display your filthy itch ....



Mr.Sukumaran,

Thanks for your efforts and participation
and My Best wishes.

நல்லடியார் said...

நேசகுமார்,

அனைத்து சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படணும் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. சந்தேகத்தின்பேரில் குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டு சட்டப்படி நிரூபிக்கப்பட்டிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய தண்டனைக் காலத்தைவிட சற்று அதிகமாக சிறையில் இருப்பவர்கள் ஜாமினில் விடுவிக்கப் படவேண்டும் என்றுதான் கோருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்தால் மீண்டும் குண்டு வைப்பார்கள் என்பதெல்லாம் உங்களின் இந்துத்துவா பார்வையையே காட்டுகிறது. அது எப்படி ஐயா குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் இன்னும் பிறவிடங்கெலில்லாம் மாபாதகம் செய்த இந்துத்துவா பரிவாரங்கள் மட்டும் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே விடுவிக்கப் படுகிறார்கள்? 1991 இல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்த படுகொலைகளின் வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து அல்லது விசாரணையில் இருந்து வருகிறது; அதற்குப் பிறகு பாராளுமன்ற தாக்குதல் வழக்கு உலக சாதனையாக குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு தண்டனையும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. அப்சல் குருவைத் தண்டிக்க விழித்துக் கொள்ளும் "கூட்டு மனசாட்சி" ஏன் மற்ற குற்றவாளிகளைத் தண்டிக்க மட்டும் விழிக்க மறுக்கிறது? காஞ்சி சங்கராச்சாரியார் பதைபதைத்து "வேண்டுகோலிட்ட நீங்கள், அவர் ஜாமினில் விடப்பட்டதையும் இன்றும் அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதையும் கண்டித்திருக்கிறீர்களா?

நீங்கள் உண்மையில் நியாயத்தைப் பேசுபவராக இருந்தால், வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் உள்பட அனைவருக்கும் ஜாமின் கொடுக்கக் கூடாது என்று குரல் கொடுத்திருக்கலாமே!

மீண்டும் ஒருமுறை சொல்கிறோம், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சட்டப்படி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் சுமத்தப் பட்டவர்கள் சட்டம் வழங்கியுள்ள உரிமைப் படி ஜாமினில் வந்து வழக்கைச் சந்திக்கட்டும்! அது முஸ்லிம் அப்ஷல் குருவாக இருந்தாலும் இந்து மத ஜகத் குருவாக இருந்தாலும் சரியே!!

நல்லடியார் said...

நேசகுமார்,

அனைத்து சிறைக்கைதிகளும் விடுவிக்கப்படணும் என்று எவரும் சொன்னதாகத் தெரியவில்லை. சந்தேகத்தின்பேரில் குற்றம் மட்டுமே சுமத்தப்பட்டு சட்டப்படி நிரூபிக்கப்பட்டிருந்தால் கிடைத்திருக்கக் கூடிய தண்டனைக் காலத்தைவிட சற்று அதிகமாக சிறையில் இருப்பவர்கள் ஜாமினில் விடுவிக்கப் படவேண்டும் என்றுதான் கோருகிறார்கள். ஜாமினில் வெளியே வந்தால் மீண்டும் குண்டு வைப்பார்கள் என்பதெல்லாம் உங்களின் இந்துத்துவா பார்வையையே காட்டுகிறது. அது எப்படி ஐயா குஜராத்திலும், ஒரிஸ்ஸாவிலும் இன்னும் பிறவிடங்கெலில்லாம் மாபாதகம் செய்த இந்துத்துவா பரிவாரங்கள் மட்டும் குற்றம் நிரூபிக்கப்படாமலேயே விடுவிக்கப் படுகிறார்கள்? 1991 இல் பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்த படுகொலைகளின் வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து அல்லது விசாரணையில் இருந்து வருகிறது; அதற்குப் பிறகு பாராளுமன்ற தாக்குதல் வழக்கு உலக சாதனையாக குறுகிய காலத்தில் விசாரித்து முடிக்கப்பட்டு தண்டனையும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டது. அப்சல் குருவைத் தண்டிக்க விழித்துக் கொள்ளும் "கூட்டு மனசாட்சி" ஏன் மற்ற குற்றவாளிகளைத் தண்டிக்க மட்டும் விழிக்க மறுக்கிறது? காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டபோது பதைபதைத்து "சக இந்துக்களுக்கு" வேண்டுகோலிட்ட நீங்கள், அவர் ஜாமினில் விடப்பட்டதையும் இன்றும் அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதையும் கண்டித்திருக்கிறீர்களா?

நீங்கள் உண்மையில் நியாயத்தைப் பேசுபவராக இருந்தால், வெவ்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட அத்வானி, ஜோஷி, உமாபாரதி, வினய் கட்டியார் மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் உள்பட அனைவருக்கும் ஜாமின் கொடுக்கக் கூடாது என்று குரல் கொடுத்திருக்கலாமே!

மீண்டும் ஒருமுறை சொல்கிறோம், குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள் சட்டப்படி கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். குற்றம் சுமத்தப் பட்டவர்கள் சட்டம் வழங்கியுள்ள உரிமைப் படி ஜாமினில் வந்து வழக்கைச் சந்திக்கட்டும்! அது முஸ்லிம் அப்ஷல் குருவாக இருந்தாலும் இந்து மத ஜகத் குருவாக இருந்தாலும் சரியே!!

Velusamy said...

These guys engage in riots, arson and violence since independence. They are aided and abetted by the so called 'human right activists'. Nesakumar is right in questioning the selective support rendered by these self declared humanists.


I have my sympathies for the pathetic anonymous scum who has abused nesakumar above.On the one hand these guys oppose portraying the Ms as Ts(M for u know what...T for Terrorists), they at the same time you heap abuses on those who dare to criticise this violent creed in a peaceful way.


Thousands are reading these blogs everyday. The behaviour of these Mlimgoons only send out one message and that is these are lunatics, who are filled with religion to the core. These guys have a filthy itch and that itch is nothing but their religion, which they wear in their sleaves all the time.

Discard your filthy itch first and then accuse others of smearing your community's name.