Saturday, June 30, 2007

தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்


பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என தன் வாழ்நாளை தமிழ்ச் சமூகத்திற்கு ஈகம் செய்த புலவர் கு.கலியபெருமாள் 16-05-2007 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார். அவருக்கு எம் வீரவணக்கம்.

புலவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில் அவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் விதைக்கப்பட்டது. 22-2-1970-இல் தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் வீரமரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் விதைக்கப்பட்டுள்ளது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது.

01-07-2007 ஞாயிறன்று மதியம் 3-00 மணியளவில் சௌந்தரசோழபுரம் `செங்களத்தில்' புலவர் கு.கலியபெருமாள் அவர்களுக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கல்லறை கல்வெட்டு திறப்பு, படத்திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

மாலை 6 மணியளவில் பெண்ணாடம் வானொலித் திடலில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சிகளில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழின உணர்வாளர்கள், முற்போக்குச் சிந்தனையாளர்கள், அவரது குடும்பத்தினர் என பலதரப்பினர் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்த உள்ளனர்.

தானும், தன் குடும்பத்தினரும் கடும் அடக்குமுறையைச் சந்தித்தும் உறுதிகுலையாமல் இறுதிவரை ஓர் போராளியாக வாழ்ந்த புலவர். கு.கலியபெருமாள் போன்ற புரட்சியாளர் தமிழகத்தில் இதுவரையில் எவரும் இருந்ததில்லை. வரும் காலங்களில் தோன்றுவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

தூக்குக் கயிறு எந்நேரமும் தன் கழுத்தை இறுக்கிக் கொல்லலாம் என்ற சூழலில்கூட கொள்கையில் உறுதியாக இருந்தவர் புலவர்.

``ஓர் அடிப்படைச் சமூக மாற்றத்திற்காகப் போராளியாக உருவெடுத்த என்னால், என் உயிரைக் காக்க கருணை மனு கொடுக்கும் அளவுக்கு தாழ்ந்து போக முடியவில்லை...''

- புலவர் கு. கலியபெருமாள்.


தமிழகப் புரட்சியாளர்கள் அனைவரும் தங்கள் தந்தையை இழந்து நிற்கின்றனர்.

``சாவிலிருந்துதான் வாழ்வு பிறக்கிறது''

- லியோனார்ட் பெல்டியர்.


(செவ்விந்திய பழங்குடியின மக்களின் உரிமைக்காகப் போராடி 35 ஆண்டுகளாக அமெரிக்க சிறையில் வாடிக் கொண்டிருப்பவர்.)

4 comments:

கவிமதி said...

அய்யா திரு.கலியப்பெருமாள் அவர்களை
நானும் வாசித்திருக்கிறேன்.

அவரின் இழப்பு ஈடுசெய்ய இயலாததுதான்

அய்யா அவர்களுக்கு என் சார்பிலும்
அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை
துவக்கு இலக்கிய அமைப்பு
மற்றும் அனைத்து தமிழ் அன்பர்கள் சார்பிலும்

வீர வணக்கங்களை

தெரிவித்துக்கொள்ளகிறேன்.

துபாயிலிருந்து

கவிமதி

புதுவை.

Anonymous said...

நண்பர் சுகுமாறனுக்கு,

புலவர் போல தியாகம் நிறைந்த மனிதர்கள் பற்றி எழுதுங்கள். இளைய தளைமுறையினருக்கு அவர்கள் பற்றய அறிமுகம் தேவை.

வெற்றி said...

அன்பின் சகோதரர் சுகுமாரன்,
தகவல்களுக்கு மிக்க நன்றி.
தமிழ்த்தேசியப் போராளி அமரர் கலியபெருமாள் அவர்களுக்கு என் அஞ்சலிகள். அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரின் சுற்றத்தார்க்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

"மாண்ட வீரர் கனவு பலிக்கும்
மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்"

Anonymous said...

My red salute to Mr. Kaliaperumal. I know him thro his book.