Showing posts with label தந்தை பெரியார். Show all posts

Friday, October 26, 2012
தந்தை பெரியார் தி.க.வினர் கைதைக் கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்!
திருச்சி சீறிரங்கத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தலைமையில் கடந்த 20 அன்று ‘பிராமணாள் கபே’ பெயர் அழிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கோவை இராமகிருட்டிணன் உட்பட 112 தோழர்கள் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு, அனைவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில் புதுச்சேரி தந்தை பெரியார் தி.க.வைச் சேர்ந்த வீரமோகன், ம.இளங்கோ, சுரேஷ், தீனதயாளன் மற்றும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் சேர்ந்த காளிதாஸ் உட்பட 19 பேர் அடங்குவர்,
தமிழக அரசின் அடக்குமுறையை கண்டித்து தந்தை பெரியார் தி.க. சார்பில் சுதேசி பஞ்சாலை அருகில் இன்று (26.10.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியர் தி.க. பொருளாளர் பாலமுருகன் தலைமைத் தாங்கினார். இரா.அழகிரி (தமிழர் தேசிய இயக்கம்), கோ.சுகுமாரன் (மக்கள் உரிமைக் கூட்டமைப்பு), ஜெகன்நாதன் (மக்கள் வாழ்வுரிமை இயக்கம்), இரா.முருகானந்தம் (மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்), பா.சக்திவேல் (மனித உரிமை கவுன்சில்), கோ.செ.சந்திரன் (சிங்காரவேலர் முன்னேற்ற கழகம்), எம்.ஏ.அஷ்ரப் (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்), ச.சத்தியவேல் (இந்திய ஜனநாயக கட்சி), கோ.பிரகாஷ் (தமிழர் களம்), அபுபக்கர் (இந்திய தவ்ஹுத் ஜமாத்), கே.சத்தியானந்தம் (புதுச்சேரி மக்கள் நல முன்னணி), மு.ப.நடராஜன் (தமிழர் தி.க.), கோகுல்காந்திநாத் (பெரியார் திராவிடர் விடுதலைக் கழகம்), தந்தை பெரியார் தி.க. இளைஞர் அணிச் செயலாளர் ரவி, துணைச் செயலாளர் ராஜசேகர், மாணவரணித் தலைவர் சக்திவேல், அரியாங்குப்பம் தொகுதித் தலைவர் பாஸ்கரன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Labels:
கோ.சுகுமாரன்,
சிறை,
தந்தை பெரியார்
Sunday, July 29, 2012
ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், குற்றமிழைத்தப் போலீசார் தப்பித்தலும்
நேற்றைய தினம் (28.7.2012) தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாங்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நடவடிக்கை போதாது என்பதுதான் மனித உரிமையில் அக்கறை உடையோரின் கருத்து. மேலும், இந்த அறிவிப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கமாக என்கவுன்டர் நடக்கும் போது, அதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். ஆனால், இந்த முறை வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவில் - நெல்லை நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் நான்கு மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வானமாமலை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். மேலும், வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வானமாமலையின் மனைவி மஞ்சுவிற்கு அரசு வேலை என நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர். வைகோ பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததோடு, அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில்தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பில் குற்றமிழைத்தப் போலீசார் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. வெறுமனே பணியிடை நீக்கம், துறை சார்ந்த விசாரணை என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம், வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.
ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். 5 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி தற்போது “போலீஸ்” ஆட்சியாகவே நடக்கிறது.
போலீஸ் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும் போது அதை மழுங்கடிக்க முதலமைச்சர் மேற்சொன்னபடி அறிவிப்புகள் மூலம் அதை திசைத் திருப்பி விடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு துணைநின்று அறிவுரை வழங்குகின்றனர்.
பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 தேவேந்திரர்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார்கள். திருக்கோவிலூர் போலீசாரால் இருளர் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது, வேறு வழியில்லாமல் பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசாரை பணியிடை நீக்கம்கூட செய்யாமல், வெறுமனே இடமாற்றம்தான் செய்துள்ளனர்.
திருக்கோவிலூரில் 4 இருளர் பெண்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நிலைமை இன்னமும் மோசம். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி அளித்து அறிவித்தார். உடனடியாக குற்றமிழைத்தப் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரையில், போலீசார் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘போலீசாரை ஏன் கைது செய்யவில்லை’ என தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் இதுவரையில் போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றமிழைத்தப் போலீசாரை கைது செய்ய உத்தரவிடாமல், அரசைக் கண்டித்துக் கொண்டே இருக்கும் உயர்நீதிமன்றத்தின் போக்குக் கொடுமையிலும் கொடுமை. அதிகாரத்தின் கரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை நீதிமன்றங்கள் அணுகும் போக்குக் குறித்துப் பிறகுப் பார்ப்போம்.
சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் எருதாட்டத்தைத் தடை செய்ததன் விளைவாக நடந்த மோதலில், கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய கொடிய தடியடித் தாக்குதல் பற்றி அறிவோம். போலீசாரை தாக்கியதாக கூறிப் போடப்பட்ட வழக்கில் தற்போது பொதுமக்கள் 79 பேர் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தை முழுவதையும் நியாயப்படுத்தி போலீஸ் உயரதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் மக்களைத் தாக்கிய போலீசார் மீது எந்தவித சிறிய நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கிருஷ்ணகிரியில் பெரியார் தி.க. பிரமுகர் பழனி என பல கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர உருப்படியான திட்டம் தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தென்படுவதாக தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்துப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உண்மை நிலைமைகளை அறிந்து வெளிப்படுத்தி வருகிறோம். வெற்று அறிவிப்புகளால் அரசு இவற்றை எதிர்க்கொண்டு வருகிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் ‘விடாது கறுப்பு’ போல செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
‘சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம்’ என்ற தந்தை பெரியாரின் வாசகத்துடன் நாட்காட்டி என் அறையில், கண்முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Friday, December 24, 2010
தந்தை பெரியார் 37-வது நினைவு தினம்: மக்கள் உரிமைக் கூட்டமைப்பு அஞ்சலி
தந்தை பெரியார் 37-வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் தலைமையில் அமைப்புக் குழு உறுப்பினர்கள் பா.மார்கண்டன், சீ.சு.சாமிநாதன், சு.காளிதாஸ், ஏ.கலைவாணன், பா.காளிதாஸ், கி.சரவணன் ஆகியோர் கலந்துக் கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சதீஷ் (எ) சாமிநாதன் தலைமையில் விக்னேஷ் குமார், முருகன், மதிவாணன், ராஜா, பரணி, விக்னேஷ் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
Sunday, March 28, 2010
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா - வீடியோ!
Labels:
தந்தை பெரியார்,
நிகழ்வுகள்,
வே.ஆனைமுத்து
Sunday, March 14, 2010
பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் நூல் தொகுப்பு வெளியீட்டு விழா
Labels:
தந்தை பெரியார்,
நிகழ்வுகள்,
வே.ஆனைமுத்து
Sunday, December 17, 2006
பெரியார் சிலை சேதம் : கண்டனம்
மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 08-12-2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் சுயமரியாதையை மீட்டெடுக்கப் பாடுபட்ட தந்தை பெரியாரின் சிலையைத் திட்டமிட்டுச் சேதப்படுத்திய இந்துத்துவ சக்திகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வற்புறுத்துகிறேன்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இச்செயலைச் செய்தவர்கள் காட்டுமிராண்டிகளாகவே கருத வேண்டியுள்ளது.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி கிடைத்திட வழிவகுத்தவர் பெரியார். இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்ட போதெல்லாம் வடஇந்தியாவில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால், தமிழகத்தில் ஒருசிறு சலனம்கூட ஏற்படவில்லை. இது பெரியாரின் உழைப்புக்கு கிடைத்த பலன் என இந்தியாவே வியந்தது. தற்போது வடஇந்தியா முழுவதும் பெரியாரின் கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
மதவெறியைத் தூண்டி அரசியல் லாபம் தேடும் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் காலூன்ற முடியாமல் போனதற்குக் காரணம் பெரியார். இந்துத்துவ சக்திகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஒரே தலைவர் பெரியார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாத்திகரான பெரியார் ஆத்திகர்களை மதிக்கத் தவறியதில்லை. குன்றக்குடி அடிகளாரோடு அவர் கொண்டிருந்த நட்பே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த வரலாற்று உண்மைகளை அறியாமல் இந்துத்துவ சக்திகள் இக்கொடூர செயலைச் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்துத்துவ சத்திகளின் தாக்குதல் பெரியார் கொள்கையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். பெரியாரின் கொள்கையைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வதே இதற்குப் பதிலடியாக அமையும். மானமும் அறிவும் மனிதற்கு அழகு என்று பெரியார் கூறியுள்ளதை இந்துத்துவ சக்திகளுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

Subscribe to:
Posts (Atom)