Tuesday, October 17, 2006

அப்சலின் மரண தண்டனையை குறைக்க வேண்டும்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் கோ.சுகுமாரன்,13.10.2006 அன்று புதுச்சேரியில் வெளியிட்ட அறிக்கை.

பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் காஷ்மீரைச் சேர்ந்த முகமது அப்சல் குருவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைக்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

உலக அளவில் இதுவரையில் 127 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துள்ளன. அண்மையில்கூட பிலிப்பைன்ஸ் மரண தண்டனையைக் கைவிட்டுள்ளது. இந்தியா மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் பலகாலமாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் அப்சலுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மரண தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. மேலும், குற்றவாளிகள் திருந்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது. மரண தண்டனை மனித உரிமைகளுக்கு எதிரானது.

இந்திய சிறைகளில் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கும் 50-க்கும் மேற்பட்டவர்களின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் நிலுவையில் உள்ளதாக அறிகிறோம். நிலுவையில் உள்ள அனைவரின் கருணை மனுக்களையும் ஏற்று, மரண தண்டனையைக் குறைக்க, குடியரசுத் தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

இது குறித்து, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் 7.10.2006 அன்று தில்லியில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களிடம் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அகிம்சையை வலியுறுத்திய காந்தி பிறந்த மண்ணில், மரண தண்டனையை முற்றிலுமாக நீக்க வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறோம்.

20 comments:

Anonymous said...

அடங்கமாட்டீங்களா நீங்க எல்லாம்?..

மணிப்பக்கம் said...

தங்களுடைய அமைப்பு தேசவிரோத அமைப்பு போல தெரிகிறது. தீவிர விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய அமைப்பு! எனது பதிவை படியுங்கள், தங்களை போன்றோற்க்கு எழுதியது!

ரவி ஸ்ரீநிவாஸ் said...

I disagree.Afzal deserves that
punishment.See my blog for posts
on this issue.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

அப்சலுக்கு மரண தண்டனையை உறுதி செய்திருப்பதன் மூலம் உச்சநீதிமன்றம் மனித உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை செலுத்தவில்லை என்பதையே காட்டுகிறது.

அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர். “ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Supreme Court had not convicted Geelani.It had given
a judgment that is fair and
just.Death Sentence is awarded
in rarest of the rare cases.
The accusations against Supreme
Court are meaningless.

Anonymous said...

"குறைந்த பட்ச தண்டனையா நெஞ்சுல சுடாம, தொப்புள்ள சுடட்டுமா"

-அப்பு (அபூர்வ சகோதரர்கள்)

bala said...

பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது//

சுகுமாரன் அய்யா,

இனிமே அருந்ததி ராயைக் கேக்காம,

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு சொல்லக்கூடாதுன்னு ஒரு கோரிக்கையை உங்க கும்பல் முன் வைக்கலாமே.

நம்ம முஷாரஃப் அண்ணன் கிட்ட ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா உங்க குழுவுக்கு பணம்/பொருள் எல்லாம் கொடுத்து ஊக்கப்படுத்துவார்.செய்ங்க..

பாலா

வஜ்ரா said...

ஏங்க, சீரியசாத்தான் இந்த மாதிரி பதிவு போடுறீங்களா, இல்ல சீண்டிவிட்டுப்பார்க்குறதுக்கு எழுதுறீங்களா? புதுவை சுகுமாரன் famous ஆக இது ஒரு வழியா...?

நேரா யோசிக்கத் தெரியாதவனுக்கும் வேணும்ன்னுட்டே திருக்கா யோசிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு...

If you want to call it freedom of speech, its fine. But, there is a right to remain silent also. Why dont you excercise that for a change?

Anonymous said...

//If you want to call it freedom of speech, its fine. But, there is a right to remain silent also. Why dont you excercise that for a change?//

(RSSஇன் குறைகளை ஒருவர் எழுதும் போது) அமைதியாக இருக்கும் உரிமையை நீங்களும் அனுசரிப்பதாக இருந்தால்....

தருமி said...

மதானிக்கும், அப்சலுக்கும் தண்டனைக் குறைப்பு வேண்டுமென்ற உங்கள் இரு பதிவுகளைப் படித்தபின், உங்கள் மீதும் நீங்கள் சார்ந்துள்ள அமைப்பின் மீதும் உள்ள மரியாதை மிகவும் குறைந்துவிட்டது.

காரணம் இங்கே

Anonymous said...

Will you call for abolition of death sentence and killings by groups and movements also.Will you
oppose fatwas that ask/give permission to kill.If state has
no right to carry out death
sentence how can non-state
actors have it.If you take
that stand it makes sense.
Otherwise it is not.

Anonymous said...

Will you call for abolition of death sentence and killings by groups and movements also.Will you
oppose fatwas that ask/give permission to kill.If state has
no right to carry out death
sentence how can non-state
actors have it.If you take
that stand it makes sense.
Otherwise it is not.

Anonymous said...

நான் இரா. சுகுமாரன்

கோ. சுகுமாரன் அல்ல

அம்னெஸ்டி இண்டர்நேசனல் / மரணதண்டனை

மரணதண்டனைகள் பற்றிய தகவல்கள்

தளங்களைப் படிக்கவும், தங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் விரைவில் கிடைக்கும் என நான் நம்புகிறேன். பொதுவாக அவர் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் பலர் இத்தனை எதிர்ப்பு பதிவு செய்கிறார்கள் போல் தெரிகிறது.

Anonymous said...

நான் இரா. சுகுமாரன்

கோ. சுகுமாரன் அல்ல

அம்னெஸ்டி இண்டர்நேசனல் / மரணதண்டனை

மரணதண்டனைகள் பற்றிய தகவல்கள்

தளங்களைப் படிக்கவும், தங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் விரைவில் கிடைக்கும் என நான் நம்புகிறேன். பொதுவாக அவர் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் பலர் இத்தனை எதிர்ப்பு பதிவு செய்கிறார்கள் போல் தெரிகிறது.

நாடோடி said...

//தளங்களைப் படிக்கவும், தங்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் விரைவில் கிடைக்கும் என நான் நம்புகிறேன். பொதுவாக அவர் முஸ்லீம் இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் பலர் இத்தனை எதிர்ப்பு பதிவு செய்கிறார்கள் போல் தெரிகிறது.//

அதேதான் அவர் முஸ்லீம் என்பதற்காக ஓட்டு பொருக்கிகள் இப்போது மட்டும் கூக்குரலிடுகிறார்கள்.

இங்கே பார்க்கவும்

வஜ்ரா said...

//
(RSSஇன் குறைகளை ஒருவர் எழுதும் போது) அமைதியாக இருக்கும் உரிமையை நீங்களும் அனுசரிப்பதாக இருந்தால்....
//

அனானியை எல்லாம் மதித்து பதில் எழுதனுமா என்று ஒரு எண்ணம்...இருந்தாலும் சொல்கிறேன்.

இப்ப பேசும் புதுவை சுகுமாரன், இதற்கு முன் பல தூக்கு தண்டனையையும், பல பேர் கைது செய்யப் பட்டு வழக்கு விசாரணையின்றி காவலில் வாடியபோதும் அந்த அமைதியாக இருக்கும் உரிமையை தாராளமாக அனுசரித்தார், இப்பவும் அதே உரிமையை அனுசரிக்காமல் ஏன் வாயைத் திறக்கிறார் என்பது தான் கேள்வி. மற்ற படி அவர் பேசுவதற்கு அன்று இருந்த உரிமை தான் இன்றும் உள்ளது.

புரியாத மரமண்டை அனானி, இப்ப புரிஞ்சுக்குங்க.

RSS பற்றி எதுவேண்டுமானாலும் சொல்லும் உரிமை உள்ளது. அதற்காக போகிற போக்கில் சேற்றை வாரி இரைக்கும் உரிமையை புத்தியுள்ளவர்கள் பயன் படுத்துவதில்லை. அப்படி சேற்றை வாரி இரைப்பவருக்கு பதில் கொடுப்பதில் தவறேதுமில்லை. மண்டையில் உங்களுக்கு மூளை என்று ஒன்று இருந்தால் இவ்வளவு விளக்கம் இங்கு தேவையில்லை.

Kodees said...

///மரண தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை//

தண்டனை வழங்குவதனால் குற்றங்கள் குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை, எனவே அனைத்து தண்டனைகளையும் நீக்கி விடலாம்

///உயிரைப் பறிக்கும் அதிகாரம் அரசுக்கும் நீதித்துறைக்கும் கூடாது///

உயிரைப் பறிக்கும் அதிகாரம் தனி மனிதனுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் மட்டுமே உரியது.

///“ஒட்டுமொத்த வழக்கும் தவறான சாட்சியங்கள், திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்தது” என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.///

வழக்கின் சாட்சியங்கள் தவறானவையா?, திரிக்கப்பட்ட கதைகள் நிறைந்ததா என இனிமேல் பிரபலங்கள் முடிவு செய்வார்கள், வக்கீல்கள், நீதிபதிகள் தேவையில்லை

///அப்சல் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி கீழ்நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை முறையாக விசாரிக்கவில்லை என அவரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ள கருணை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்///

தன் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி நீதிமன்றம் முறையாக விசாரித்துத்தான் தீர்ப்பு கொடுத்தது என எத்தனை பேரது குடும்பத்தினரும் அவருக்காக வாதாடிய வழக்கறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனர்?


கடைசியாக வஜ்ரா சொன்னதேதான். நான் நினைத்ததை என்னைவிடச் சரியாகச் சொல்லியுள்ளார்.

///ஏங்க, சீரியசாத்தான் இந்த மாதிரி பதிவு போடுறீங்களா, இல்ல சீண்டிவிட்டுப்பார்க்குறதுக்கு எழுதுறீங்களா? புதுவை சுகுமாரன் famous ஆக இது ஒரு வழியா...?

நேரா யோசிக்கத் தெரியாதவனுக்கும் வேணும்ன்னுட்டே திருக்கா யோசிக்கிறவனுக்கும் வித்தியாசம் இருக்கு. ///

Anonymous said...

//இப்ப பேசும் புதுவை சுகுமாரன், இதற்கு முன் பல தூக்கு தண்டனையையும், பல பேர் கைது செய்யப் பட்டு வழக்கு விசாரணையின்றி காவலில் வாடியபோதும் அந்த அமைதியாக இருக்கும் உரிமையை தாராளமாக அனுசரித்தார், இப்பவும் அதே உரிமையை அனுசரிக்காமல் ஏன் வாயைத் திறக்கிறார் என்பது தான் கேள்வி. மற்ற படி அவர் பேசுவதற்கு அன்று இருந்த உரிமை தான் இன்றும் உள்ளது. //

வஜ்ரா சொல்வதைப் பார்த்தால் சுகுமாரன் பற்றி எல்லாம் தெரிந்தவர் போல் பேசுகிறார்.

1996 ஆம் ஆண்டு மரணதண்டனை ஒழிப்பு மாநாடு ஒன்றை அவர் புதுச்சேரியில் நடத்தினார். மனித உரிமைத் தொடர்பான பல்வேறு பணிகளை நிறைவேற்றும் பணிகளை செய்துள்ளார்.

ராசீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு வழங்கிய போதும் அதற்காக தொடர் இயக்கங்கள் நடத்தியுள்ளார்.

அத்தியூர் விசயா வழக்கில் புதுவை காவல் துறையினர் 7 பேருக்கு தண்டனை பெற்று தந்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு.

எனவே எல்லாம் தெரிந்தது போல் பேசும் வஜ்ரா தெரியாததை தெரிந்தது போல் காட்டி உங்கள் அறியாமையால் பொய் பிரச்சாரம் செய்ய வேண்டாம்.

Anonymous said...

நாலு பார்ப்பனர்களுக்கு மரண தண்டனை வழங்கப் பட்டால் இவர்கள் எல்லாரும் மரண தண்டனை ஒழிக்க வேண்டும் என்று பேசுவார்கள்.

கோத்ரா வழக்கில் இரயிலுக்கு தீவைத்த நான்கு பார்ப்பனர்களை பிடித்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.

வஜ்ரா said...

என் அறியாமையை நான் ஒத்துக் கொள்கிறேன். அப்பவும் பேசிய புதுவை கொ. சுகுமாரன் இப்பவும் பேசட்டும். But, I have the right to disagree. என்னைப் பொருத்தவரை தூக்கு தண்டனை இருப்பதே நல்லது. And Afzal guru deserves such punishment. I would have also disagreed with him in Rajeev gandhi case.

Anonymous said...

//
கோத்ரா வழக்கில் இரயிலுக்கு தீவைத்த நான்கு பார்ப்பனர்களை பிடித்து மரண தண்டனை கொடுக்க வேண்டும்.
//

ஊரே கூடி நின்னு கும்மியடிச்ச கூட்டத்துல இருந்துகிட்டு பார்ப்பான் வெச்சான்னு சொன்னா ? போயி கோத்ரால கேட்டுப் பாரு, இத்தப் பெருமையா சொல்லிக்கிறாங்க.

மனப்பிரழ்ச்சியில் கஷ்டப்படும் மனித நேயத்தைப் தப்பாகப் புரிந்துகொண்ட மனித நோயாளிகள் வேண்டுமென்றால் நம்புவார்கள். மூளையுள்ளவன் நம்பமாட்டான்.
..

ஏங்க...கொடூரமான முறையில் கற்பழித்துக் கொலையும் செய்த சந்தோஷ் சிங் என்பவருக்கு தூக்கு வழங்கியிருக்கிறார்களே. அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசாமல், மதானியை விடுதலை செய்யவேண்டும், அப்சலை தூக்கில் போடக்கூடாது என்கிறீர்களே.

இது உங்கள் நோக்கத்தைச் சந்தேகப் படவைக்கிறது. சந்தோஷ் சிங் விஷயத்தில் உங்கள் நிலையைத் தெளிவு படுத்தவேண்டுகிறேன்.