Friday, September 17, 2010

சென்னையில் "இந்தியாவும் மதசார்பின்மையும் - கருத்தரங்கம்"


மதசார்பற்றோர் மாமன்றம் மற்றும் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மையம் இணைந்து 18.09.2010 சனியன்று, மாலை 4.30 மணியளவில், சென்னை லயோலா கல்லூரியிலுள்ள லாரன்ஸ் சுந்தரம் அரங்கில் "இந்தியாவும் மரசார்பின்மையும் - கருத்தரங்கம்" நடைபெற உள்ளது.

மதசார்பற்றோர் மாமன்றத்தின் நிறுவுநர் வீரபாண்டியன் வரவேற்புரையும், இணைப்புரையும் ஆற்றுகிறார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமைத் தாங்குகிறார்.

'உலகப் பார்வையில் இந்திய மதசார்பின்மை' என்ற தலைப்பில் பண்பாடு பல்சமய உரையாடல் ஆராய்ச்சி மைய செயல் இயக்குநரும், லயோலா கல்லூரி செயலர் - தாளாளருமான  முனைவர் ஜோ.ஆருண் தொடக்கவுரை ஆற்றுகிறார்.

'குஜராத் - என்ன நடக்கிறது' என்ற தலைப்பில் புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன், 'காவிமயமும் கோட்சேக்களும்' என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கத்தின் பொறுப்பாளர் பேராசிரியர் அருணன், 'இந்திய மதசார்பின்மையும், நமது கடமையும்' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

தோழமையின் இயக்குநர் தேவநேயன் நன்றியுரை ஆற்றுகிறார்.

1 comment:

Anonymous said...

இந்து சிறுபான்மையினர் தம் உரிமைக்காக போராடிய போது மலேசிய அரசுக்கு ஆதரவாக பேசியவர்கள் மதச்சார்பின்மை பற்றி மாமன்றம் வைத்திருக்கிறார்களா.
தமுமுக போன்ற அடிப்படைவாத தலிபானிய அமைப்புகளுடன் கைகோர்ப்பவர்கள் அவர்களை விமர்சிக்க மறுப்பவர்கள் மதச்சார்பின்மை பற்றி முழுங்குகிறார்களா.
சாத்தான் வேதம் ஒதுவது என்பது இதுதான்.