Saturday, November 18, 2006

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை

மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதை மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டி மரண தண்டனை ஒழிப்பை வலியுறுத்தி வருகின்றனர். இதற்குச் சான்றாக “மக்கள் கண்காணிப்பகம்“ சார்பில் வெளிவரும் “மனித உரிமைக் கங்காணி“ இதழ் சில தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடாவில் 1975-ஆம் ஆண்டு வரை மரண தண்டனை முறை இருந்தது. ஆனால், அப்போது 1 லட்சம் பேர்களுக்கு 3.09 நபர்கள் வீதம் கொலை மரணங்கள் இருந்தன. அதற்கு அடுத்த ஆண்டு அந்நாட்டில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. அதன் பின்னர், 2003-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் கொலை மரணங்கள் 1.73 ஆகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

2000-ஆவது ஆண்டு “நியூயார்க் டைம்ஸ்“ நடத்திய கணிப்பின்படி மரண தண்டனை ஒழிக்கப்பட்ட பகுதிகளைவிட மரண தண்டனை செயலிலிருக்கும் பகுதிகளில் 48 முதல் 101 விழுக்காடுவரை கொலை மரணங்கள் அதிகமாக உள்ளன.

அமெரிக்காவில் நடக்கும் கொலை மரணங்களின் எண்ணிக்கை மரண தண்டனை ஒழிக்கப்பட்ட ஐரோப்பாவைவிட நான்கு மடங்கு அதிகமாக உள்ளன.

1988 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் ஐ.நா. அவையால் நடத்தப்பட்ட அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மரண தண்டனையால் குற்றங்கள் குறையவில்லை என்பதையே காட்டுகின்றன.

இந்தியாவில் இதுவரையில்...

சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் : 55 பேர்.

முதன்முதலில் தூக்கிலிடப்பட்டவர் : நாதுராம் கோட்சே (காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்).

கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் : தனஞ்சய் சாட்டர்ஜி (மேற்கு வங்கம்).

மரண தண்டனையைக் குறைக்கக் கேட்டு குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்துக் காத்திருப்பவர்கள் : 21 பேர்.

2003-ஆம் ஆண்டு சிறைத்துறைப் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர்.

நவம்பர் 2006 கணக்குப்படி கடந்த 9 மாதங்களில் 32 வழக்குகளில் மரண தண்டனை பெற்றவர்கள் : 56 பேர்.

17 comments:

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

என் புது இடுகையை தமிழ்மணத்தில் இடும்போது


புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

சன்னலை மூடு

என்று வந்தது

தமிழ் மணத்தின் முதல் பக்கத்தில் இந்த இடுகை வரவில்லை எனவே இந்த பின்னூட்டத்தை இடுகிறேன்

We The People said...

//2003-ஆம் ஆண்டு சிறைத்துறைப் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் மொத்தம் 333 கைதிகள் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறையில் வாடுகின்றனர். //

சுதந்திர போராட்ட வீரர்கள் பாவம் வாடுகிறார்கள். யாரு பா அது, அந்த தியாகிகளை ரீலீஸ் பண்ணுங்கபா??

தண்டனைகளாலும் குற்றங்கள் குறையவில்லை. அதனால கோர்ட், தண்டனைகள் என எல்லா குப்பை மேட்டர்களையும் ஒழிச்சு கட்டுங்க பா. யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கொல்லலாம், கொள்ளை அடிக்கலாம் என்று சட்டம் கொண்டுவாங்க பா. குற்றம் முழுசா குறைந்துவிடும் :))))))

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Despite all laws,courts and punishments ranging from simple
imprisonment to capital punishment
many crimes are committed.So shall
we abolish all laws and courts and
declare that no offence will be
punished ?

ஜயராமன் said...

சுகுமாரன் ஐயா,

தூக்கில் போடுவதால் குற்றம் குறையவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

தூக்குதண்டனை இல்லாத நாடுகளும் குற்றங்களை அதிகமாக காண்கின்றனவே, அது ஏன்?

உலகம் முழுதும் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கலாம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?

உங்கள் லாஜிக் படி பார்த்தால்,தூக்கு தண்டனையை மட்டும் ஏன் நிறுத்தவேண்டும்? மற்ற குற்றங்களையும் ஏன் தடை செய்யக்கூடாது? அதனாலும்தான் குற்றங்கள் குறையவில்லை?

மரண தண்டனை எந்த மாதிரி சூழ்நிலையில் அளிக்கப்ப்டுகிறது? எல்லா குற்றங்களுக்குமா? சட்டமும், நீதிமன்றமும் அதை மானாவாரியாக பயன்படுத்துகிறார்களா?

இதெற்கெல்லாம் விடை எதிர்பார்க்கிறேன்.

நன்றி

Anonymous said...

//மரண தண்டனை எந்த மாதிரி சூழ்நிலையில் அளிக்கப்ப்டுகிறது?

எல்லா குற்றங்களுக்குமா? சட்டமும், நீதிமன்றமும் அதை மானாவாரியாக பயன்படுத்துகிறார்களா?//

எல்லாக்குற்றங்களுக்கும் மரணதண்டனையை ஒரு தண்டனையாக அளிக்க முடியாது. ஆனால், குற்றம் சரியாக நிரூபிக்காமலேயே காவல்துறையினர் வழக்கை முடிக்கவேண்டும் என்பதற்காக போடப்பட்ட பொய் வழக்குகளுக்கு மோசமான தீர்ப்பு உண்மைக்கு மாறான தீர்ப்பு வழங்கப்படுகிறது

We The People said...

உங்க போராட்டத்துக்கும், சாப்பாட்டுக்கும் யாரு காசு தறாங்கன்னு நான் தெரிஞ்சுக்களாமா தலைவா கொ.சு?

உங்கள் சேவையை என்ன சொல்லறதுன்னு தெரியலை... சட்டம் எல்லாருக்கும் பொது அவன் ஹிந்துவாக இந்தாலும் சரி, முஸ்லீமாக இருந்தாலும் சரி. நீங்க ஏன் இன்னும் தாராசிங்கிற்க்கு விதித்த தூக்கு தண்டனைக்கு எதிராக இன்னும் போராட வரலைன்னு நான் தெரிந்துக்கொள்ளலாமா?? இதற்காவது உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கலாமா?

Anonymous said...

உங்க போராட்டத்துக்கும், சாப்பாட்டுக்கும் யாரு காசு தறாங்கன்னு நான் தெரிஞ்சுக்களாமா தலைவா கொ.சு?

கொச்சைப்படுத்தும், இழிவு படுத்தும் கேள்விகளுக்கு பதில் சொல்வது இல்லை.


நான்

இரா.சுகுமாரன்

We The People said...

கொச்சை படுத்தல தலைவா, இதுவரைக்கு நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவே இல்லை??? ஏன்னு தெரிந்துக்கொள்ளலாமா? பதில் இல்லையா?? இல்ல சொன்னா பிரச்சனைவருமா??

Anonymous said...

// We The People said...
கொச்சை படுத்தல தலைவா, இதுவரைக்கு நான் கேட்ட ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லவே இல்லை??? ஏன்னு தெரிந்துக்கொள்ளலாமா? பதில் இல்லையா?? இல்ல சொன்னா பிரச்சனைவருமா?? //

நண்பருக்கு வணக்கம், நண்பர் கோ.சுகுமாரன் பல்வேறு பணிகள் காரணமாக வெளியூர் சென்றுவிடுவார் உங்களின் கேள்விகளுக்கு பதில் ஏதும் சொல்லக்கூடாது என்பதல்ல. நேரம் கிடைக்கும் போது ஒட்டுமொத்தமாக பதில் தருவார். என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். பதில் தரவில்லை என்பதற்காக நீங்கள் கொ.சு? என்று அவரை நீங்கள் கொச்சைப்படுத்தி இருப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள இயலாது.

Anonymous said...

மரண தண்டனைக்கு மரண தண்டனை.

அருமையான கட்டுரை.வாழ்த்துக்கள் அய்யா.

Barath said...

கொலைகாரன்களை ஜெயில்ல போடாம, இந்த மாதிரி மனித உரிமை பேசுற முற்போக்குவாதிகளோட வீட்டுல, அவங்க பொண்டாட்டி, குழந்தைகளோடு வச்சிக்க சொல்லனும். அப்புறம் எப்படி இவங்க வெளியே வந்து கருத்து சொல்றாங்கன்னு பார்த்துடலாம். நோய்டாவில பிடிச்ச ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம் சுகுமாரன்? தூக்குல போடலாமா இல்லை ஸ்கூல் போற சின்ன வயது குழந்தைகளோடு விளையாட விடலாமா? மனுஷனுக்கு தேவையான அடிப்படை அறிவு கூட இல்லாதவங்களுக்கு எல்லாம் வக்காலத்து வாங்க வந்துட்டீங்க. உங்களை தான் முதல்ல ஜெயில்ல போடனும்.

வஜ்ரா said...

நீங்க என்ன அனார்க்கிஸ்டா ?

உங்கள மாதிரி நிறைய பேர் இருந்தாத்தான் ஜனநாயகம் வேலை செய்யுதுன்னு அர்த்தம்.

உங்க பருப்பெல்லாம், சவூதி, ஈரான் போன்ற நாடுகளில் வேகாது.!!

தூக்கு தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என்று decree கொண்டு வந்து உங்கள முச்சந்தியில வெச்சு தலைய வெட்டிருவானுங்க. போதாத குறைக்கு அத டீ வி ல லைவ் ரிலே செஞ்சு குழந்தைகளுக்கெல்லாம் காட்டுவார்கள்.
(ஆனா இங்க இணையத்தில் உலவும் இஸ்லாமிஸ்டுகள் தேவைக்கு உங்களைப் பயன் படுத்திக் கொள்வார்கள்!

"என்ன கொடுமை சுகுமாரன் இது!")

வாழ்க வளமுடன்.

Anonymous said...

இந்தியாவில் இதுவரையில்...

சுதந்திரத்துக்குப் பின் தூக்கிலிடப்பட்டவர்கள் : 55 பேர்.

முதன்முதலில் தூக்கிலிடப்பட்டவர் : நாதுராம் கோட்சே (காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்).

கடைசியாக தூக்கிலிடப்பட்டவர் : தனஞ்சய் சாட்டர்ஜி (மேற்கு வங்கம்)./

சுகுமாறன் அய்யா,

60 ஆண்டுகளில் 55 பேர் தானே தூக்கில் போடப்பட்டனர்?காஷ்மிரில் நடந்த தீவிரவாத போரில் மட்டும் இதுவரை 41,000 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனரே? அவர்கள் உயிருக்கெல்லாம் என்ன மதிப்பு? மசூத் அசாரை விமான கடத்தல் நடத்தி விடுவித்தனரே,அதுபோல் நாளை அப்சலுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? தீவிரவாதிகளை சிறையில் வைத்திருப்பது மடியில் நெருப்பை கட்டி அலைவது போல. இந்தியா மாதிரி தீவிரவாதத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் மரண தண்டனை அவசியம்.

We The People said...

ஐயா கோ.சு அவர்களே!

போன தடவை வல்லினம் போட மெல்லினம் போட்டதால கொச்சை படித்திட்டா நினைத்துக்கொண்டீர்கள் சாரிங்க!

இப்ப நான் வந்தது எதுக்குன்னா? நம்ம தர்மபுரி மாணவர்கள் உயிரோடு எரித்த வழக்கில் மூன்று பேருக்கு தூக்கு கொடுத்து இருக்காங்க! இதற்கு ஏதாவது பதிவு வருமா?? அவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்! ஏதாவது கொஞ்சம் எழுதி உங்க சமூக அக்கறைய காட்டுங்க!

Anonymous said...

Yes....I agree Death sentence not reducing any crime. I thing people who does crime like 'Killers from Noida - delhi' not eligible to live in the world so 'DEATH SENTENCE' is very very required.

-Kunnathooran

Anonymous said...

I missed something in the above one...Also the people who done the Dharmapuri Killings also not eligible for living in the world. I thing they living in their bonus days...The world is making another mistake by not killing them right away.

Human rights people may expect everyone in the world to be like jesus but there will be only one jesus...

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

நண்பர் போஸ்டன் பாலா அவர்களுக்கு,

தருமபுரி வழக்கு மட்டுமல்ல எந்த வழக்கிலும் மரண தண்டனை கொடுப்பதை எதிர்ப்பவன் நான். தருமபுரி வழக்கு தீர்ப்பு விவரங்கள் கிடைக்கவில்லை. விரைவில் என் கருத்துக்களை எதிர்ப்பார்க்கலாம். நன்றி.