Sunday, July 12, 2009

அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது
























பேராசிரியர் அ.மார்க்ஸ் எழுதியுள்ள "காஷ்மீர்: என்ன நடக்கிறது அங்கே?" நூல் வெளிவந்துவிட்டது.

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி சார்பில் வெளிவந்துள்ள இந்நூல் மொத்தம் 200 பக்கங்கள். விலை ரூ. 100.

அகில இந்திய அளவிலான உண்மை அறியும் குழுவில் காஷ்மீர் சென்று அங்குள்ள நிலைமைகளை கண்டறிந்து அவற்றை தொகுத்து அளித்துள்ளார் அ.மார்க்ஸ்.

'எல்லை தாண்டிய பயங்கரவாதம்' தான் இந்தியா எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவால் என இந்திய அரசியல்வாதிகள் முன்வைக்கின்றனர். இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் வேர் காஷ்மீர் பிரச்சினையில் பதிந்துள்ளதை நாம் அறிவோம்.

'காஷ்மீர் பிரச்சினை' என்பது உண்மையில் "காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கு மாறாகவும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு எதிராகவும் இந்திய அரசு ஜம்மு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொண்டதால் ஏற்பட்ட பிரச்சினை" என்பதன் சுருக்கமே.

காஷ்மீர் பிரச்சினையின் வரலாற்றை, அங்கு தீவிரவாதம் உருப்பெற்றதில் இந்திய அரசின் பங்கை, தன் நேரடிக் கள அனுபவங்களுடன் இணைத்து ஒரு புனைவுக்குரிய விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் அ.மார்க்ஸ்.

2009 தேர்தல் வரை காஷ்மீர் வரலாற்றை சொல்லும் நூலாசிரியர் புதிய சூழலில் மேலெழும் பல புதிய கேள்விகளை வழக்கம் போல் முன்வைக்கிறார். இக்கேள்விகள் காஷ்மீருக்கு மட்டுமல்ல தென் ஆசியாவில் நடைபெற்று வரும் இதர விடுதலைப் போராட்டங்களுக்கும் பொறுத்தமானவையே.

நூல் கிடைக்குமிடம்:

புலம்,
332/216, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
செல்: 97898 64555, 98406 03499.
மின்னஞ்சல்: pulam2008@gmail.com

1 comment:

raafi said...

அ.மார்க்ஸின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வருக

எழுத்தாளர் அ.மார்க்ஸ் எழுதிய காஷ்மீர் என்ன நடக்கிறது அங்கே? என்ற தொடர் மக்கள் உரிமையில் வெளியாகி அனைத்து தரப்பு வாசகர்களின் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இந்த நூலின் வெளியிட்டு விழா சென்னை பென்ஸர் பிளாஷாவிற்கு எதிரோ உள்ள் புக் பாயிண்டில் நாளை (19-08-09) மாலை 6-மணியளிவில் நடைபெறுகிறது.