Sunday, September 30, 2007

இந்து மதவெறி பிடித்த வேதாந்தி உருவ பொம்மை எரிப்பு - 150 பேர் கைது - படங்கள்

புதுச்சேரியில், 28-09-2007 அன்று, பெரியார் தி.க. முன்முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்து, இராமர் பாலம் என்ற பெயரில் தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான பார்ப்பன, இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக சவப்பாடை ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தின் முடிவில் இந்து மத வெறிபிடித்த வேதாந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

உத்திரபிரதேசம் விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த ராம் விலாஸ் வேதாந்தி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையையும், நாக்கையும் துண்டிக்க வேண்டுமென "பட்வா" கட்டளை பிறபித்தார். இதற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைக் கண்டித்தும், மதவெறி சக்திகளுக்கு எதிராகவும் பெரியார் தி.க. தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, பகுஜன் சமாஜ் கட்சி, தமிழர் தேசிய இயக்கம், புரட்சியாளர் அம்பேத்க்ர் தொண்டர் படை, செந்தமிழர் இயக்கம், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம், புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை, செம்படுகை நன்னீரகம், சமூக நீதிப் போராட்டக் குழு, வெள்ளையணுக்கள் இயக்கம் ஆகியவை இணைந்து இப்போராட்டத்தை நடத்தின.

ஊர்வலத்திற்கு பெரியார் தி.க. தலைவர் லோகு.அய்யப்பன் தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புச் செயலாளர் அரசு.வணங்காமுடி, மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கத் தலைவர் பா.சக்திவேல், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை அமைப்பாளர் சி.மூர்த்தி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகரி, புரட்சிப் பாவலர் இலக்கியப் பாசறை தலைவர் பொ.தாமோதரன், சமூக நீதிப் போராட்டக் குழு சார்பில் அ.மஞ்சினி, வெள்ளையணுக்கள் இயக்கம் சார்பில் பாவல், செம்படுகை நன்னீரகம் செயலாளர் பார்த்திபன் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

பெரியார் தி.க. அமைப்பாளர் இர.தந்தைபிரியன், செயலாளர் சு.விசயசங்கர், பொருளாளர் வீரமோகன், துணைத் தலைவர் இரா.வீராசாமி, இளைஞர் அணித் தலைவர் சா.சார்லசு, செயலாளர் செ.சுரேசு, செய்தி தொடர்பாளர் ம.இளங்கோ உட்பட ஏராளமான தோழர்கள் கலந்துக் கொண்டனர்.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வேதாந்தியை கடுமையான சட்டத்தில் கைது செய், இந்துமத-பார்ப்பன அமைப்புகளான பா.ஜ.க., இந்து முன்னணி, விசுவ இந்து பரிசத், பஜ்ரங்தள், சிவசேனா போன்ற அமைப்புகளைத் தடை செய் என்று முழக்கமிட்டனர்.

ஊர்வலத்தைத் தடுத்த காவல்துறையினரோடு மோதல் ஏற்பட்டது. காவல்துறை தடுத்தையும் தாண்டி ஊர்வலத்தினர் முன்னேறி வேதாந்தியின் உருவ பொம்மையை எரித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

7 comments:

Anonymous said...

very good, keep it up

இரா.சுகுமாரன் said...

தமிழகத்துக்கு இணையாக தனது பணியை புதுவையும் செய்கிறது என்பதற்கு இதுவும் ஒரு பதிவு.

யாத்ரீகன் said...

கண்டிக்கும் விதமாய் பேசிய வேதாந்தியை கைது செய்ய முடியவில்லை, நியாயமான முறையில் போராட்டத்தை செய்த தோழர்களை கைது செய்கின்றார்கள்

மாசிலா said...

//யாத்திரீகன் a dit...
கண்டிக்கும் விதமாய் பேசிய வேதாந்தியை கைது செய்ய முடியவில்லை, நியாயமான முறையில் போராட்டத்தை செய்த தோழர்களை கைது செய்கின்றார்கள்//

நான் இதையே மறு மொழிகிறேன்.

கொலை வெறியை தூண்டிய தறுதலையை முதலில் போய் கைது செய்யட்டும்.

தமிழர் தலைவருக்கு ஆதரவு குரல் கொடுக்கும் புதுவை தமிழர்களுக்கு நன்றி.

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்புத் தோழர்கள் இரா.சுகுமாரன், யாத்திரிகன், மாசிலா ஆகியோருக்கு நன்றி.

மதவெறி குறித்து என்னைப் போன்ற மனித உரிமை ஆர்வலர்கள் கவலைப்படாமல் இருக்க முடியாது.

இதை வெறும், தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் வேதாந்திக்கும் நடக்கும் பிரச்சனையாக பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.

மதவெறி எத்தன்மையது என்பதை மும்பையில், குஜராத்தில், கோவையில்...என இந்தியாவின் பல்வேறு பகுதியில் நடந்த வன்முறையின் ரத்த சாட்சியாக இருக்கும் பல்வேறு ஆணையங்கள், மனித உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கைகள் கூறும் உண்மைகளே போதும்.

மதவெறிக்கு எதிரான போராட்டம் தற்போது மிக மிக அவசியம்.

Anonymous said...

யாரோ ஒரு மதவெறியன் உளறுகிறான் என்று நினைத்துவிட்டு முதல்வர் தனது வேலையை பார்க்கப் போயிருந்தால் இந்த வேதாந்தியின் பிரச்சினை எப்பொழுதோ முடிந்திருக்கும்.

Anonymous said...

Why do you bring in brahmins in this. Why do you need some one with
poonool in this agitation. RSS-BJP-VHP are supported by many Hindus
including OBCs. This is a political issue, dont bring in caste politics in this. I think you are wantonly bringing in brahmins and thereby showing your perverse attitude.You hate brahmins.You are not even a liberal.