Tuesday, October 23, 2007

கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்


குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 19-10-2007 அன்று, சி.என்.என்.-ஐ.பி.என். தொலைக்காட்சியில் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில், கரண் தாப்பருக்கு நேர்காணல் அளித்தார். நேர்காணல் தொடங்கி நான்கரை நிமிடத்திற்குள் பதிலளிக்க முடியாமல் வெளியேறினார். குஜராத்தில் முசுலீம் மக்களுக்கு எதிராக மிகப் பெரும் இனப் படுகொலையை நடத்திய நரேந்திர மோடி, இது குறித்த கரண் தாப்பரின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியது, அவரது இந்துத்துவ பாசிச கொடூர முகத்தை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்திக் காட்டியது. மேலும் அவர் கரண் தாப்பர் பேச விரும்புவதை எல்லாம் நான் பேச விரும்பவில்லை என்று அவேசமாக கூறிவிட்டு வெளியேறினார். தி இந்து பத்திரிகை 22-10-2007 அன்று வெளியிட்டுள்ள அவரது நேர்காணல்:

திரு.நரேந்திர மோடி, உங்களைப் பற்றியதிலிருந்து தொடங்குவோம். இந்த ஆறு ஆண்டுகளும் நீங்கள் குஜராத்தின் முதல்வராக இருக்கிறீர்கள். இராஜீவ் காந்தி பவுண்டேசன் குஜராத் மாநிலத்தை சிறந்த நிர்வகிகப்படும் மாநிலமாக அறிவித்துள்ளது. இந்தியா டூடே இரண்டு சந்தர்ப்பங்களில் உங்களைச் சிறந்த முதல்வராக அறிவித்தது. இதற்கெல்லாம் அப்பால் மக்கள் உங்களை மாபெரும் கொலைக்காரர் என்று அழைக்கின்றனர். மேலும் முசுலீம்களுக்கு எதிரான மனிநிலை உடையவர் என்றும் கூறுகின்றனர். இதனால், உங்களுடைய பிம்பம் பாதிக்கவில்லையா?

நான் நினைக்கிறேன் அவர்கள் மக்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஒன்று அல்லது இரண்டு பேர் தான் இதுபோன்ற பதங்களைப் பயன்படுத்துகின்றனர். நான் சொல்கிறேன் கடவுள் அவர்களை அசிர்வதிப்பார்.

இது, ஒன்று அல்லது இரண்டு பேர்களின் சதி என்று சொல்கிறீர்களா?

நான் அப்படி சொல்லவில்லை.

அனால், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பேர் தான் என்று சொல்கிறீர்களா?

என்னிடம் இந்த தகவல்தான் இருக்கிறது. மக்களின் குரலும் இதுதான்.

நான் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். செப்டம்பர் 2003-இல் உச்சநீதிமன்றம் குஜராத் அரசு மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறியதே? ஏப்ரல் 2004-இல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கூறினார், ஆதரவற்ற குழந்தைகளும் பெண்களும் எரிக்கப்பட்ட போது, நீங்கள் ஒரு நவீன நீரோ போல் இருந்தீர்களே என்று. உச்சநீதிமன்றம் உங்களோடு பிரச்சனை ஏற்படுத்திக் கொண்டதுபோல் தெரிகிறதே?

நான் ஒரு சிறிய வேண்டுகோள் வைக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். அதில் எழுத்துமூலம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நான் இதுபற்றி தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

நீங்கள்சொல்வது சரி. எழுத்துமூலம் எதுவுமில்லை. அது உச்சநீதிமன்றத்தின் பார்வையாயிற்றே?

அது தீர்ப்பில் இருக்குமானால் நான் மகிழ்ச்சியாக உங்களுக்கு பதில் அளிப்பேன்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, நீதிமன்றத்தில் விமர்சித்ததுப் பற்றி கவலைப்பட தேவையில்லையா?

என் சிறிய வேண்டுகோள். தயவு செய்து தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். நீங்கள் குறிப்பிடும் சொற்றோடரைக் கைவிடுங்கள், மக்களுக்கு அதுபற்றி தெரிந்துக் கொள்ளட்டும்.

ஆகஸ்ட் 2004-இல் உச்சநீதிமன்றம் ஏறக்குறைய 4600-இல், 2100 வழக்குகளை மறுவிசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது ஏறக்குறைய 40 சதவீதம். அவர்கள் அப்படி செய்ததற்குக் காரணம் குஜராத்தில் நீதி வழங்கப்படவில்லை என்று நம்பியதால் தானே?

எனக்கு மகிழ்ச்சிதான். இறுதியாக நீதிமன்ற சட்டம் தீர்ப்பை எடுத்துக் கொள்ளட்டும்.

ஆனால், இதற்காகத்தான் உங்களை இந்தியா டூடே சிறந்த முதல்வராக அறிவித்தது, இராஜீவ் காந்தி பவுண்டேசன் சிறந்த நிர்வகிக்கப்படும் மாநிலமாக அறிவித்தது, கோடிக் கணகாணவர்கள் மோடி முசுலீம் மக்களுக்கு எதிரான மனநிலை உடையவர் என்று கூறியது. இதனால்தான் நான் கேட்கிறேன், உங்களுடைய பிம்பத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டதா?

உண்மையிலேயே என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. நான் எப்போதும் என் வேலையில் பிசியாக இருப்பதற்கு இதுவேகூட காரணம். நான் குஜராத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். அர்ப்பணித்துக் கொண்டவன். நான் என் பிம்பம் பற்றி சிந்தித்ததே கிடையாது. என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது. குழப்பங்கள் இருக்கலாம்.

நான் சொல்கிறேன், பிரச்சனை என்னவென்று. 2002-இல் குஜராத் படுகொலைகள் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனபின்பும், கோத்ரா பேய் உங்களைச் சுற்றி சுற்றி வருகிறது. நீங்கள் ஏன் அந்தப் பேயைத் தணிக்க முயற்சிக்கவில்லை?

இதை கரண் தாப்பர் போன்ற பத்திரிகையாளர்களுக்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் அனுபவிக்கட்டும்.

நான் ஏதாவது ஆலோசனைக் கூறலாமா?

எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை.

நடந்த கொலைகளுக்காக வருந்துவதாக நீங்கள் ஏன் சொல்லக் கூடாது? முசுலீம்களைப் பாதுகாக்க அரசு கூடுதலாக ஏதாவது செய்திருக்கலாம் என்று சொல்லலாமே?

நான் என்ன சொல்ல வேண்டுமென்பதை அந்த நேரத்திலேயே சொல்லிவிட்டேன். நீங்கள் என்னுடைய அறிக்கைகளில் தேடிப் பார்க்கலாம்.

திரும்பவும் சொல்லவும்...

2007-இல் நான் அதைப் பற்றிப் பேச தேவையில்லை, அதாவது நீங்கள் பேச விரும்புவதை எல்லாம்.

அனால், அதைப் பற்றி திரும்பச் சொல்லாமல், குஜராத்தின் நலனுக்கு எதிராக உள்ள பிம்பத்தைத் தொடர்ந்து நீட்டிக்க அனுமதிப்பது பற்றி நீங்கள் மக்களுக்குச் சொல்லியாக வேண்டும். அதை மாற்ற வேண்டியது உங்கள் கையில்...

மோடி ஒலிவாங்கியை (மைக்கை) நிறுத்திவிடுகிறார்.

எனக்கு ஓய்வு தேவை. எனக்கு கொஞ்சம் தண்ணீர் தேவை.

தண்ணீர்...

நட்பு தொடர வேண்டும். அவ்வளவுதான். நான் மகிழ்ச்சி அடைவேன். நீங்கள் இங்கு வந்தீர்கள். அதற்கு உங்களுக்கு என் நன்றி, மகிழ்ச்சி. நான் இந்த நேர்காணலை தொடர முடியாது. சரியா? இதெல்லாம் உங்களுடைய கருத்து, நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டே இருக்கிறீர்கள், தொடர்ந்து செய்கிறீர்கள். மூன்றுநான்கு கேள்விகள், நான் ரசித்தேன்.

இல்லை, கரண்.

மோடி சாப்...

கரண் நான் நட்புறவைக் தொடர விரும்புகிறேன். நீங்கள் அதை நோக்கி முயற்சி செய்யுங்கள்.

அய்யா, எந்த தவறு செய்வதைப் பற்றியும் நான் பேசவில்லை. நான் சொல்கிறேன், ஏன் நீங்கள் உங்கள் பிம்பத்தை மாற்றிக் கொள்ளக் கூடாது.

அதற்கு இது நேரமல்ல. அதற்கு நீங்கள் என்னை 2002-இல் சந்தித்திருக்க வேண்டும், 2003-இல் சந்தித்திருக்க வேண்டும். நான் அதை எல்லாம் செய்திருப்பேன்.

4 comments:

Anonymous said...

He could have avioded this interview as he knew fully well that 2002 riots would always figure in such interviews.Perhaps
he wanted to give these 'secularists' some smug satisfaction by walking out in the
middle.This will have no impact in
his home state or with Gujaratis
who support him.

மாசிலா said...

//கரண் தாப்பரிடம் இருந்து தப்பியோடிய மோடி: சீழ்ப் பிடித்து நாறும் இந்துத்துவ முகம்//

இது மட்டுமா? போகும்போது வழிநெடுக கழிஞ்சினுல்ல போனான்! இது இதைவிட கேவலம்க!!!

இந்த மாதிரியான வெட்கங்கெட்ட நாயிங்க இருக்கிறதவிட செத்து தொலையலாம்க! அதுதான் ஒரே முடிவுங்க.

இவனெல்லாம், எந்த மூஞ்சிய வெச்சினு பொண்டாட்டி புள்ளைங்கள பாக்குறான்கன்னு தெரியல.

பாவம் செய்ஞ்ச பூமியடா சாமி!
இந்த ஜடங்களை எல்லாம் தாங்கவேண்டிய பாவபூமியேதான் போங்க.

சிறையில் கிடக்க வேண்டிய கொலையாளிக எல்லாம் பொதுமேடை வரைக்கும் வந்து பேசுறாங்க.

என்னே இந்த சனநாயகத்தின் அயகு!
என்னே இந்த நீதிகளின் அயகு!
வாள்க ஒருதலை பட்ச இந்தியா!!!

சீனு said...

//தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பைப் படித்துப் பாருங்கள். அதில் எழுத்துமூலம் ஏதாவது சொல்லப்பட்டிருக்கிறதா? நான் இதுபற்றி தெரிந்து கொள்ள மகிழ்ச்சியாக இருக்கிறேன்.//

ஆகா, இதுக்கு பேரு தான்யா ஜல்லிங்கிறது.

//நான் குஜராத்திற்காக என்னை ஒப்படைத்துக் கொண்டவன். அர்ப்பணித்துக் கொண்டவன். நான் என் பிம்பம் பற்றி சிந்தித்ததே கிடையாது. என் பிம்பத்திற்காக நான் ஒரு நிமிடம்கூட செலவிட்டது கிடையாது.//

அமாமா...கொலைகள் செய்யவே நேரம் இல்லையே. இதுக்கு எப்படி?

ம்...காந்தி பிறந்த மண்ணில் இந்த கொடுமைகள்.

Anonymous said...

மோடி போன்ற நாய்களை "கண்ட" இடத்தில் சுட வேண்டும்