Thursday, October 25, 2007

பத்திரிகையாளர் ஞானிக்கு தமிழக எழுத்தாளர்கள் கண்டனம் - ஒலி வடிவம்

தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியைக் கொச்சைப்படுத்தி, ஆனந்த விகடனில், பத்திரிகையாளர் ஞானி "விருப்பப்படி இருக்க விடுங்கள்" என்ற தலைப்பில் எழுதியதை அனைத்துத் தரபினரும் கண்டித்துள்ளனர்.

இதனிடையே, ஞானியின் அநாகரீகமான எழுத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி கண்டனக் கூட்டம் நடத்தியுள்ளனர். 'தீம்புனல்' சார்பில் சென்னை வாணி மகாலில் 20.10.07 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் ஆரம்பித்து இரவு 10 மணிவரையிலும் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கவிஞர் இளையபாரதி வரவேற்று பேசினார். கவிஞர் தமிழச்சி முகவுரை ஆற்றினார். பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். கவிஞர் அறிவுமதி, கவிஞர் கரிகாலன், பேராசிரியர் அ.மார்க்ஸ், கவிஞர் சல்மா, எழுத்தாளர் இமயம், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார், பேராசிரியர் வீ.அரசு, தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன், பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ். மணி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் பிரபஞசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறையன்பன் குத்தூஸ் சிறப்புப் பாடல் பாடினார்.

கூட்டத்தில் பேசிய அனைவரும் ஞானியின் பார்ப்பன சார்பை கடுமையாக கண்டித்தனர். ஞானியின் கட்டுரையை வெளியிட்ட ஆனந்த விகடன் பத்திரிகையையும் கண்டித்தனர்.

சேது சமுத்திரத் திட்டத்தை முன்வைத்து இந்து மதவெறிக் கும்பல்கள் ‘இராமர் பாலம்’ பிரச்சனையைக் கிளப்பி அரசியல் லாபம் தேட முயற்சி செய்கின்றன. இதை எதிர்ப்பதில் கருணாநிதி உறுதியாக இருப்பதைக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் பாராட்டிப் பேசினர்.

மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை எதிர்த்துவரும் கருணாநிதிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர். மதவெறியை முறியடிக்க தமிழக மக்கள் கருணாநிதியின் பக்கம் நிற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.

கருணாநிதியின் கருத்துக்கள், செயல்பாடுகள் மீது கடும் விமர்சனம் கொண்ட தமிழக எழுத்தாளர்கள் பலரும் ஒன்றுகூடி இக்கூட்டம் நடத்தியதும், மதவாதத்திற்கு எதிராக பேசிவரும் கருணாநிதியை இந்நேரத்தில் ஆதரிப்பதும் பாராட்டப்பட வேண்டியது.

இக்கூட்டத்தில் பேசியவர்களின் பேச்சைக் கேட்க
கீழ்காணும் வலைப்பூவின் முகவரியைக் "கிளிக்" செய்யவும்:

எண்ணங்கள்

1 comment:

சிங்காரம் said...

கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்....
இதோ விமர்சனங்கள்.......

முகப்புரைக்கேற்ற - தமிழச்சி
தனி மனிதக் கண்டனக் கூட்டம்
தேவை தானா ! என நாங்கள் நினைத்த
பொழுது- புரிந்தும் புரியாமலும்
விளக்கி- நீ என்ன மாமானா மச்சானா
என்ற கேள்வியோடு முடித்து கொண்டார்

தொரப்பாடி ஜெயிலுக்குள்ளே! - அறிவுமதி
பாவம் பெரியாரின் முகத்தைப் பெரியவரிடம்
காண்கிறார்! - சரி இருக்கட்டும்
தொண்ணூற்று மூன்றாம் வயதிலும்
போராடிய பெரியாரின் தியாகத்தை - நினைத்து
கம்முகிறார்! விம்முகிர்றார்!- ஆனால் வெளிவரும் கண்ணீர்
பெரியவருக்காக?- என வைத்துக்கொள்வோம்!
உணர்ச்சி வசப்படுதல் என்பது - தற்காலிகமானது
என்று உங்களுக்குத் தெரியாதா என்ன?

பேராசிரியர் அ.மார்க்ஸ் பேச்சு அக்மார்க்
பெரியவர் புராணம் இல்லை
ஞாநியின் வஞ்ச இகழ்ச்சியினை
தெளிவு பெற எடுத்துக்காட்டி
கனிமொழியிடம் சில கேள்விகளையும்
தொடுத்து- மொழியின் மவுனத்தைக்
கலைக்க வேண்டுமெனக் கூறி
கலகலத்தார் - நாங்களுந்தான்

பிழைக்கக் கற்று கொண்ட - ரவிக்குமார்
பெரியாரையே பழித்த பெரியவர் இவர்?- ஆக
பெரியவர் புராணத்தையும் படிகத்தவறவில்லை
அக மகிழ்ந்தார்! புகழ்ந்தார்! ஆர்ப்பரித்தார்- பிறகு
நாட்டையே மாற்றும் வண்ணப் பெட்டியைக் கொடுப்பவரல்லவா!
தமிழகப் பெரியவர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும்
சட்டத்தைக் கொண்டுவந்தவரல்லவா- நடைமுறைப்டுபத்தாமல்
பேசாமல் நீவிர் பெரியவர் கழகத்திலேயே தஞ்சம் அடையலாம்!
தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்கிறீரோ
அதுவும் சரிதான்......

வானம் வசப்படும்- பிரபஞ்சதிட்டம்
பெரியார் புராணமும் பாடவில்லை
பெரியவர் புராணமும் இல்லை
சுயப்புராணம் ஒன்றே இவருக்கு தெரிந்தது
ஞாநி யார்? ஞானி யார்?
என்று புரிய வைத்தது இவர் தானாம்
இந்த ஞாநிக்கு அஞ்ஞாநி என்று
பெயர் வைத்ததும் இவர் தானாம் - என்கிறது
இவர் புராணம்.

உலகப் பத்திரிகையாளர்-ஏ.எஸ்.பன்னீர் செல்வம்- ஏனோ
இவரிடம் அவாள் வாடை வீசுகின்றது
படிச்சுண்டு! சொல்லிண்டு! கேட்டுண்டு!
ஞாநியை சிவப்பு சட்டைப் போட்டுக்கொண்டு- காவி
வார்த்தை பேசாதே என்றார்.
கருத்தில் தெளிவு- ஆனாலும்
இட ஒதுக்கீடு- பகுத்தறிவு போட்ட பிச்சை
என்று கொச்சை வார்த்தை பேசிக் காயப்படுத்தினார்.

இவை எல்லாம் இருக்கட்டும்
ஞாநி வார்த்தை கண்டனத்திற்கு உரியதே!

வேட்டி யில் மூத்திரம் போய்விட்டதாக
ஓலமிடுகிராயே - முதலில் நீ உன்
கோவணத்தை சுத்தமாக வைத்துக்கொள்
மற்றவரிடம் இருக்கும் பொது நற்குணத்தைப்
பார்க்காமல்- உடற்கோளாரைப் பற்றி
சொல்கிறாயே- இதுதான் அறிந்தும் அறியாமலும்
நீ அறிந்து கொண்டதா.....
உனது பக்கங்கள் ஓ பக்கங்கள் அல்ல!
ஓட்டைப் பக்கங்கள்!

தீம்புனல் படைப்பாளிகள் அமைப்பு
வேதாந்தியிடம் வேதம் கற்கச்
சென்றிருந்ததோ-ஃபத்வா வின் பொழுது
உன் தீ என்ன கனலாக இருந்ததோ! மூடர்களே
உங்களுக்குத்
தெரியாதா! தீயின் கனல் தான்
பெருந்தீயை உருவாக்குமென்று!- ஓ
அந்த ஆரியத் தீயை இந்தத் தீயால்
எரிக்க முடியாதென்ற அறியாமையோ!!!!!!