Friday, November 16, 2007

ஒரு கைதியின் கடிதம்...

கடும் அடக்குமுறை ஏவப்படும் புதுச்சேரி மத்திய சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 12-11-2007 முதல் சிறைவாசிகள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து ஆயுள் தண்டனை சிறைவாசி சு.மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதம் இது. தற்போது இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

வெளி உலகம் அறிய முடியாத சிறைச்சாலைப் பற்றி இந்த சிறைவாசி எழுதியுள்ள கடிதம் அதிகாரத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்துகிறது...

சட்டம் அனைவருக்கும் சமம் எனில், இந்தப் புகார் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையான கண்ணீர் மனு.

ஐயா,

நான் புதுவை மத்திய சிறையில் மிகவும் நல்ல முறையில் இருந்து வருகிறேன். நீதிமன்றம் ஒரு குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள். அதன்பின் அந்த குற்றவாளி திருந்தினானா என்று எந்த நீதிபதிகளும், நீதிமன்றங்களும் பார்ப்பதில்லை. அதற்கு காரணம் சிறை அதிகாரிகள் மேல் உள்ள நம்பிக்கைதான். ஆனால், புதுவை மத்திய சிறையில் நிலைமை தலைகீழ். குற்றவாளியை திருத்த வேண்டிய அதிகாரியே குற்றவாளியாக இருந்தால் நாங்கள் எப்படி எங்கள் தவறை உணர்ந்து திருந்துவது?

இ.பி.கோ. சட்டப் பிரிவில் ஒரு பகுதியில் சொல்வது என்னவென்றால், உயர் பொறுப்பில் உள்ள அதிகரிகள், தான் பணிபுரியும் இடத்தில் இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்க கூடாது என்று சட்டப் பிரிவு சொல்கிறது. அதன் நோக்கம், உயர் அதிகாரிகள் தனக்கு கீழ் உள்ளவர்களைக் காழ்ப்புணர்ச்சி காரணமாக நசுக்குவதற்கும், பழிவாங்குவதற்கும் தனது பதவியை பயன்படுத்தலாம் என்பதற்காகத்தான். அது எவ்வளவு உண்மை என்பது இங்கு நடக்கும் பழிவாங்கும் நடவடிக்கையில் இருந்து நன்றாக தெரிகிறது. சிறையில் உள்ள வேறு குற்றவாளி எனக்கு தொல்லை கொடுத்தால் சிறை உயர் அதிகாரியிடம் புகார் கூறுவேன். ஆனால், புகாரே சிறை அதிகாரி மீதுதான் எனும் போது நான் உங்களிடம் புகார் செய்கிறேன்.

பிச்சை புகினும் கற்கை நன்றே! என்று பெரியவர்கள் கூறுவார்கள். மேலும் படித்தவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல இடம் உண்டு. அது வெளியில் உள்ளவர்களுக்கே பொருந்தும். சிறையில் அது செல்லுபடியாகாது. அதுவும் எனக்கு மேல் உள்ள அதிகாரிகளுக்குப் பிடிக்காத பட்சத்தில் சொல்லவே வேண்டாம். நான் திருந்திவிட்டேன் என்று வாய் மொழியாக சொன்னால் நீங்களும் நம்பமாட்டீர்கள். சமுதாயம் ஏற்காது. இதற்காகவே என் நிலையை மாற்றிக் கொள்ள நினைத்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழி மூலம் பி.பி.ஏ. படித்து பட்டம் பெற்றுள்ளேன். மேலும் எனக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள திரைப்பட கல்லூரி மூலமாக டி.எப்.டி. படித்து பட்டம் வாங்கினேன். ஒரு நல்ல இதயம் உள்ள அதிகாரியாக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். ஆனால், இங்குள்ள கண்காணிப்பாளர் திரு.ஜெயகாந்தன் அவர்கள் என்னை தேசத் துரோகி போல் பார்க்கிறார். நானென்ன இவர்கள் சம்பள பணத்திலா என்னை படிக்க வைக்க வேண்டும் என் சொல்கிறேன்.

மேலும், சிறையில் உள்ள அடிப்படை வசதி குறைகளை மற்றும் அடக்குமுறைகளை இதுநாள்வரை வெளியில் சொன்னது கிடையாது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருந்தேன். ஆனால், பழிவாங்கும் படலம் உச்சத்திற்குச் சென்றுவிட்டதால் தங்களிடம் என் மன குமுறல்களை இறக்கி வைக்க விரும்பி இதை எழுதுகிறேன்.

தொடரும்...

2 comments:

Anonymous said...

//குற்றவாளியைத் தண்டிப்பதின் முக்கிய நோக்கமே சம்பந்தப்பட்ட குற்றவாளி, தான் செய்த தவறை நினைத்து வருந்தி திருந்த வேண்டும் என்பதற்காக தான் என்று தங்களைப் போன்ற சட்டம் படித்த பெரியவர்கள் சொல்கிறார்கள்.//
தண்டனையின் முக்கிய நோக்கம், இது மற்றவர்களுக்கும் பாடமாக அமைந்து அதனால் சமூகத்தில் மீண்டும் இது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க வேண்டும் என்பதாக அமைய வேண்டும். தண்டனை பெற்றவனும் அத்தண்டனை மூலம் திருந்துவது என்பது கூடுதலான பலனாக தான் உணர பட வேண்டுமே தவிர அது முதன்மை பலனாக அறியப்பட்டால் சமூகம் படிப்பினை பெறாமல் போகும். இதனால் குற்றங்கள் அதிகரிக்க காரணம் ஏறபடும் என்பது எனது கருத்து.
"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதியன் மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பி இருப்பினும் இறைவனுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள். அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் (உண்மைக்கே சாட்சி கூறுங்கள்) ஏனெனில் இறைவன் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன். எனவே நியாயம் வழங்குவதில் மனோயிச்சையை பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றி கூறினாலும் அல்லது புறக்கணித்தாலும், நிச்சயமாக இறைவன் நீங்கள் செய்பவற்றை எல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அத்தியாயம் 4: வசனம் 135)"