Saturday, February 09, 2008

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத்த கோரிக்கை!

கடலூர் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களை சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் வழிபடக்கூடாது என்று தீட்சிதர்கள் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்புக் மையம் அனைத்துக் கட்சி, இயக்கங்களை ஒருங்கிணைத்துப் போராடி வருகிறது. அதோடுமட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனை முன்னின்று அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் விருத்தாசலம் இராஜு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் கொலை, கொள்ளை, பாலியல் விவாகாரங்கள் என அனைத்து சட்டவிரோதமான செயல்களிலும் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணக்கு உத்தரவிட வேண்டுமென ஒரு வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்சொன்ன போராட்டங்களில் கலந்துக் கொள்வதற்காக அடிக்கடி சிதம்பரம் சென்று வந்த போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் நடத்தும் தனி ராஜ்யம் பற்றி பல தகவல்கள் கிடைத்தன. அவை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தாலும், புனித்தின் பிறப்பிடமாக கருதப்பட்ட காஞ்சி சங்கர மடத்தில் நடந்த விவாகரங்களை ஒத்த விவகாரங்கள் நடராஜர் கோயிலிலலும் நடந்துள்ளன.

கோயிலின் உள்ளேயே கொலை உட்பட அனைத்து சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளும் அரங்கேறியுள்ளன. கடவுளின் அவதாரங்கள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் தீட்சிதர்கள் குற்ற செயல்களிலும் ஈடுபட்டுள்ளனர். மிதிவண்டி திருடிய குற்றத்திற்காக தீட்சிதர்கள் மீது 6 வழக்குகள் சிதம்பரம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் தீட்சிதர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புனிதம், ஆச்சாரம் என்றேல்லாம் பேசும் பார்ப்பன தீட்சிதர்களின் சேட்டைகள் கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்களையும் ஏமாற்றும் துரோகமாகும்.

சிதம்பரத்தில் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் சிதம்பரம் நகர மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், முன்னாள் இந்து அறநிலைய துறை அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் ஆகியோர் நிறைய தகவல்களைக் கூட்டங்களில் பேசி வெளிப்படுத்தி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயிலை மரபுக்கு புறம்பாக தங்கள் வசம் கொண்டு வந்து ஏராளமான முறைகேடுகளிலும், ஊழல்களிலும் தீட்சிதர்கள் தொடந்து ஈடுபட்டு வருவதாக அனைத்துக் கட்சி, இயக்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக அரசு உடனடியாக நடராஜர் கோயிலை இந்து அறநிலைய துறை கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திப் போராடி வருகின்றனர்.

இதுபற்றி, சிதம்பரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் இளங்கோ, தமிழக முதலமைச்சர், உள்துறை செயலர் ஆகியோருக்கு விரிவான புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகார் உட்பட பல்வேறு ஆதாரங்கள் அடிப்படையிலேயே தீட்சிதர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இனி அவர் அளித்த புகார் மனுவை அவரது சொற்களிலேயே தந்துள்ளேன்:

சிதம்பரம் நடாஜர் கோயில் தீட்சிதர்கள் யாருக்கும் அந்த சமூகத்திற்குச் சொந்தமல்ல என்று 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் பெஞ்ச் தீர்ப்பளித்திருக்கிறது. இருந்தாலும் பெரிய கோயிலை, தீட்சிதர்கள் தங்கள் சமூகத்திற்குச் சொந்தமான சொத்துபோல் தீட்சிதர்கள் கோயிலின் 4 கோபுர வாயிற் கதவுகளையும் பிறகு 2-வது உட்பிரகார கதவுகளையும் இரவில் மூடிக்கொண்டு, கோயில் வெளிப்பிரகாரத்திலும் உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

திடுக்கிடும் 2 அல்லது 3 கொலைகளையும் நடத்தி, அதை குடித்துவிட்டு இறந்து விட்டார்கள் என்று மறைத்துவிட்டார்கள். அந்த ரௌடி தீட்சிதர்களும் நல்ல பணக்காரர்கள். சாமி பைத்தியம் பிடித்தவர்களிடம் குளத்தை தூர் வார வேண்டும். திருப்பணி செய்ய வேண்டும் என்று பணத்தைக் கணிசமாக வசூல் செய்து, ஆளுக்கு ஒரு செல் போன் வைத்துக்கொண்டு, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தங்களுக்கு முதலமைச்சரும் சில அமைச்சர்களும் வேண்டியவர்கள் என்று சொலலிக்கொண்டு, போலீசைப் பயமுறுத்துகிறார்கள்.

நடராஜர் கோயிலுக்குள் பஞ்சமா பாதகம் செய்து, போலீஸ் மற்றும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் முக்கிய தீட்சிதர்கள் பெயர்கள்: (1) தில்லை தீட்சிதர் த.பெ. கீர்த்திவாசக தீட்சிதர், சபாநாயகர் கோயில் தெரு (2) ராஜா தீட்சிதர் த.பெ. குப்புசாமி தீட்சிதர், கீழரத வீதி (3) பட்டு தீட்சிதர் த.பெ. கோபால் தீட்சிசதர், வடக்கு சந்நதி (4) கனகு தீட்சிதர் த.பெ. வைத்திநாத தீட்சிதர், கீழ வீதி, (5) குப்புசாமி தீட்சிதர் த.பெ. சிச்சுவடி மணி தீட்சிதர், கீழரத வீதி (6) முருக தீட்சிதர், (7) அமர்நாத் தீட்சிதர், கீழ வீதி முதலாவோர்.

சிதம்பரம் டவுன் கீழ ரத வீதியில் உள்ள வேம்பு தீட்சிதர் மகன் மூர்த்தி தீட்சிதரை சுமார் ஒரு வருடத்திற்கு முன் நடராஜர் கோயில் உள் பிரகாரத்திற்குள் கருங்கல் தூண் அல்லது சுவற்றில் மோதி, தீட்சிதர்கள் கொன்றுவிட்டார்கள். மேல கோபுர வாசல் வழியாக கோயில் முதல் பிரகாரத்திலிருந்து, கற்பகிரகம் உள்ள உள் பிரகாரத்திற்குள் செல்லும் மேல் புறமுள்ள கதவு, காலை 6.3.4 மணியாகியும் ஒரு நாள் திறக்காமல், கோயிலுக்குள் பக்தர்கள் போக முடியாமல் திணறிக்கொண்டு இருந்தார்கள்.

அப்பொழுது ப.சிதம்பரம் கட்சியைச் சேர்ந்த திரு. நாகராஜன், இன்னும் சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, கீழ சந்நதி வழியாக ஒரு ஆட்டோ வந்தது. மேல்புறம் கோயில் கதவு திறக்கப்பட்டு, மேலே கண்ட தீட்சதர்கள் மூர்த்தி தீட்சிதரை ரத்தம் ஒழுக ஒழுக துக்கி வந்ததைப் பார்த்து, கொலை நடத்திருக்கும் என்று சந்தேகப்பட்டு, ராஜ்குமார் மேலரத வீதி போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் புகார் செய்திருக்கிறார். போலீஸ் கொலை கேசு என்று தெரிந்ததும், உடனே வராமல் ராஜ்குமாருடன் வாதம் செய்து, டி.எஸ்.பி.க்குப் புகார் செய்வேன் என்று தெரிவித்த பிறகு வேண்டாவெறுப்புடன் போலீசுடன் குற்றம் நடந்த இடத்திற்குப் போனபோது, ஆட்டோ டிரைவரை விசாரித்தால் யார் அவரை அழைத்து வந்த தீட்சிதர் என்பதும் மற்றும் என்ன நடந்தது என்பதும் தெரியும்.

ஆனால், ராஜ்குமார் போலீசிடம் சொல்லி, புலன் விசாரணை செய்ய சொல்லிவிட்டுப் போய்விட்டார். பிணத்தை வேம்பு தீட்சிதர் வீட்டில் போட்டுவிட்டு, குற்றம் செய்தவர்கள் போய்விட்டார்கள். பணத்தை வசூல் செய்து, பங்கு பிரித்துக் கொள்வதில் மூர்த்தி தீட்சிதர் சரியாக கணக்கு வரவு செலவு காட்டாமல் ரூ.50000-க்கு மேல் மறைத்துவிட்டதாக தகராறு செய்ததால் மற்ற தீட்சிதர்கள் கல் தூணில் மோதி கொன்றுவிட்டதாகத் தகவல். மூர்த்தி தீட்சிதருக்கு கே.அடுரிலிருந்துதான் ஒரு ஆதிதிராவிடர் கள்ளச் சாராயம் கொண்டு வந்து கொடுத்து, அதை சொம்பில் ஊற்றி வைத்துக்கொண்டு, நடராஜப் பெருமாள் உள்ள பொற்சபையிலேயே வைத்துக்கொண்டு, தீர்த்தம் சாப்பிடுவது வழக்கமாம்.

கே.ஆடூரில் மளிகைக் கடை வைத்திருந்த செல்வராஜ் மனைவியை சிதம்பரம் கோயிலுக்கு அழைத்துவந்து அனுபவிப்பதில் தகராறு ஏற்பட்டு, செல்வராஜை சிதம்பரத்தில் கொன்று, ஆட்டோவில் ஊருக்குக் கொண்டு போனார்கள். இறந்து போன செல்வராஜ் மனைவி சிதம்பரத்தில் தான் இருக்கிறார். அவள் பெயர் ராஜகுமாரி.

போலீஸ், டிபூடி கலெக்டருக்குச் சொல்லி, பினத்தைப் பரிசோதனை செய்திருக்க வேண்டும். சந்தேகப்பட்ட கொலை வழக்கு என்று பதிவு செய்து, சம்பந்தப்பட்ட தீட்சதர்களை விசாரித்திருந்தால் உண்மை தெரியும். இறந்துபோன மூர்த்தி தீட்சிதர் குடித்துவிட்டு குடும்பத்தில் தொல்லை கொடுத்து வந்ததால் கொலை கேசு புகார் செய்ய பயந்து, போஸ்மார்டம் பண்ணுவதைத் பெரிய தீட்சிதர்கள் முயன்று கொலை குற்றத்தை மறைக்க முயன்றிருக்கலாம்.

ஆனால், கோயில் பொது இடம், புனிதமான இடம். பக்தர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய இடம். அதற்குள் கொலை நடக்க போலீஸ் அனுமதிக்கக்கூடாது. மூர்த்தி கொலை நடந்த இரவுக்கு முன்னாள் மாலை, காலம் சென்ற மக்கள் தலைவர். ஜி.கே.மூப்பனாருக்கு, அம்மன் கோயிலில் உள்ள சித்திரகுப்தருக்கு, இ.காங்கிரஸ் நிர்வாகிகள் திரு. நாகராஜன், திரு.ராஜன் போன்றவர்கள் இறந்துபோன மூர்த்தியை வைத்துதான் விசேஷ பூஜை செய்திருக்கிறார்கள். எனவே, சிதம்பரம் டவுன் போலீஸ் இதற்குமுன் கோயிலில் நடந்த ராயர் கொலையையும் புலன் விசாரிக்காமல் விட்டுவிட்டதால், நடராஜர் கோயிலின் புனிதத்தையும் அங்கு வருகிற வயதானவர்கள் மற்றும் பக்தர்கள் உயிர் உடமைகளைக் காப்பாற்றவும் முதலமைச்சர் சி.பி.சி.ஐ.டி. மூலம் விசாரனை நடத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கோர்டில் நிறுத்த அரசு உத்தரவிட வேண்டும்.

மூர்த்தி கொலைக்கு முன் வீட்டு புரோக்கர் ராயர் என்ற ஒரு ஏழை சில தீட்சிதர்களால் 1/4 பிராந்தி பாட்டிலை கீழவீதியிலுள்ள ஆட்டோ ரிக்ஷாக்காரர்களில் ஒருவர் பிடுங்கிக் கொண்டதால் அவர் அன்று டவுன் போலீஸ் சர்க்கிளாக இருந்த இப்ராகிம் ராவுத்தரிடம் பிடிபட்டு, தீட்தர்கள் தான் பிராந்தி பாட்டில், பரோட்டா, சிக்கன் எல்லாம் வாங்கிவரச் சொன்னார்கள் என்று கீழகோபுர வாசலில் தீட்சதர்களைக் காட்டிக் கொடுத்தாலும் ராயரை உதைத்து கொன்று, கோபுர வாசலுக்குள் போட்டுவிட்டார்கள் என்று தகவல்.

கீழ கோபுர வாசலில் பிராந்தி, பாட்டில், பரோட்டா, சிக்கன் பொட்டலத்துடன் வந்தவரைப் பிடித்த டவுன் போலீஸ் ஏன் அதில் சம்பந்தப்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குத் தொடரவில்லை? அல்லது ராயர் இறந்த பிறகாவது சந்தேகப்படவில்லை? சந்தேகப் பட்ட கொலை என்ற ராயர் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என்பது முக்கியமாக கவினிக்க வேண்டிய விஷயம்.

இதுவும் பொதுஇடம். புனிதமான இடம். கோயிலுக்குள் நடந்த கொலை. கடந்து 1 வருடத்தில் கோயிலுக்குள் இரண்டு பெண்கள் மர்மமான முறையில் இறந்திருக்கின்றனர்.

ராயர் கொலை நடந்த இரவு பல்லாக்கு திருவிழா. மூர்த்தி கொலை, ராயர் கொலைக்கு முன் ஒருவர் கோயிலுக்குள் வந்து, அம்மன் கோயிலில் குடித்துவிட்டு தூங்கும் ஒருவரை தீட்சிதர்கள் பங்கு மாமுல் கேட்டு, கொடுக்காததால், சிவகங்கை குளத்திற்கு அருகில் கொன்றுவிட்டதாக ஒரு தகவல். சிதம்பரம் டவுனில் தீட்சிதர்கள் மீது புகார் கொடுக்கவே பயப்படுகிறார்கள் என்று எனக்கு கிடைத்த தகவல்களை முதலமைச்சருக்கும் உள்துறை செயலாளருக்கும் உரிய நடவடிக்கைக்கு அனுப்புகிறேன்.

மதிப்புக்குரிய குமாஸ்தாக்கள் சங்கத் தலைவர் திரு.ராஜ்குமார், காங்கிரஸ் தலைவர் திரு. நாகராஜ், திரு.ராஜு முதலியவர்களை விசாரித்தால் விளக்கமாகச் சொல்வார்கள்.

தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்.

வேலுர் ஜலகண்டேஸ்வரர் கோயிலை அரசு எடுக்க எவ்வளவு காரணங்கள் உண்டோ, அதைவிட 1000 காரணங்கள் இருக்கின்றன. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க கொள்ளையர்கள், கொலைக்காரார்கள், ஆணவக்காரர்கள், சர்வாதிகாரிகள் கடாராமாக விளங்கும் கோயிலை, மனித உரிமைகளும், இந்திய அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளையும் மதிக்காமல் மிதிக்கும் சில தீட்சிதர்கள் பிடியில் இருந்து மீட்டு, அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரணைக்கு உத்தரவிட வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.

இதுதான் சிதம்பர ரகசியமோ?

15 comments:

Unknown said...

"கொலை-கொள்ளை" போன்ற "புனித" செயல்களில் ஈடுபடுவது பார்ப்பன தீட்சிதர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இது போன்ற போலிகள் அம்பலப்படுத்தப்பட்டு சட்டத்தால் எவ்வித நிபந்தனையும் இன்றி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.
தகவலுக்கு நன்றி தோழர்..

Anonymous said...

உங்க மேல போலீஸ்ல புகார் கொடுத்தா அதுக்கு "பொய்க்கேஸ்"-னு முழம் நீளப் பதிவு போடுவீங்க..

அடுத்தவன் கொடுத்த புகாரில் எந்த அளவு உண்மையிருக்குன்னு (பதிவு போடுவதற்கு முன்பு) ஆராய்ச்சியெல்லாம் பண்ண மாட்டீங்களா?

உங்களுக்கெல்லாம் ஒரு சமூக சேவகர்-னு முகமூடி வேறே..

அந்த முகமூடீல இருந்துகொண்டு.. பார்ப்பன் எதிர்ப்புதானே செஞ்சுக்கிட்டிருக்கீங்க..

அந்தப் புகார்ல என்ன உண்மையிருக்குன்னு நீங்க நெனக்கிரீங்க..

சிக்கன் சாப்ப்பிடறதெல்லாம் ஒரு புகாரா.. அதுவும் சட்டப்படி ஒரு புகார் தருமளவுக்கு ஒரு பெரிய குற்றமா.. நீங்கள் எல்லாம் ஒரு சமூக சேவகர் பட்டம் வேற..

காரூரன் said...

எந்த இனம் முன்னுக்கு வர வேண்டுமானாலும் முதல் விழிப்புணர்வு என்பது முக்கியம். விழிப்புணர்வுக்கு போதிய கல்வியறிவு, பொறுப்புள்ள ஊடகங்களின் நியாயமான தகவல் போன்றவை தேவைப்படுகின்றன. உங்கள் தமிழ் மண்ணில் 7 வருடங்களை கழித்த அனுபவம் எனக்கு உண்டு. உங்கள் கட்டுரையில் " சிதம்பர ரகசியமோ" என்று தொக்கி நிற்கின்றது. உங்கள் ஆதங்கம் புரிகின்றது.
மேற்குலகில் அடிக்கடி சொல்வார்கள் " உனக்கு என்ன தெரியும் என்பதை விட, யாரை உனக்கு தெரியும் என்பதில் பெரிய பங்கு தங்கியிருக்கின்றது". அதனால் தான் அதிகமான பிரச்சனைகள் மக்களை சென்றடையாமலும், தீர்க்கப்படாமலும் இருக்கின்றன. இப்படியான கட்டுரைகள் "தமிழ் நாதம்" போன்ற இணையத்தளங்களில் வரவேண்டும்.

நட்சத்திர வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

உலகையே ஆட்டுவிக்கும் நடராஜரின் சபையிலேயே
உங்கள் அரசியலாட்டத்தை அரங்கேற்ற அவாப் படும்
மடமையை என்னென்பது.

ஆசைக்கும் அளவுண்டு.

Anonymous said...

எல்லா சமூகங்களிலும் குற்றம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தவறு செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை கிடைக்கத்தான் வழி செய்யவேண்டும்.
அதை விடுத்து, கிடைத்த சந்தடி சாக்கில் ஒட்டுமொத்த சமூகத்திற்கு அவப்பெயர் தருவதுபோல பதிவு எழுதிவது எந்த விதத்தில் நியாயம்?
கேட்க யாருமில்லை, சிறுபான்மையோர்தானே அந்த சமூகத்தினர் என்கிற இறுமாப்புதானே?
முதலில் சமூக பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்ள முயலுங்கள்.

thiru said...

நடராஜரை காணவேண்டும் என்ற அளவற்ற ஆவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த நந்தன் சிதம்பரம் கோயிலில் நுழைந்த போது உயிரோடு எரித்து 'சொர்க்கத்திற்கு' அன்றைய அனுப்பியவர்கள் தீட்சிதர்கள். பார்ப்பனிய ஆதிக்கம் இறுக்கமாக இருக்கும் சிதம்பரம் கோயில் வாசல் நீதியின் முன் திறக்கப்பட வேண்டிய அவசியம் பல நூறு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.

சிதம்பரம் கோயிலில் பணம் கையாடல், கொலை, பாலியல் குற்றங்கள் நடந்ததா என்பதை ஆராய விசாரணைகள் நடைபெற வேண்டும்.

காஞ்சி வரதராஜபெருமாள் கோயிலில் சங்கராச்சாரியாரல் 'ஏவப்பட்டு' கோயில் ஊழியர் சங்கரராமன் கொல்லப்பட்ட தகவல்கள் வந்த போது பார்ப்பனீயர்கள் பதறியடித்து மறைத்தனர். கடுமையான அரசியல், ஊடக நெருக்கடிக்களுக்கு பின்னர் விசாரணைகள் உண்மையை வெளிக்கொண்டு வந்தன.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மூது சுமத்தப்படுகிற குற்றங்கள் விசயத்திலும் வழக்கம் போல 'அனாமதேய' பார்ப்பனீயர்கள் பதற்றம் பல செய்திகளை சொல்லுகிறது.

சிதம்பரம் கோயில் 'இரகசியத்தை' அரசும், காவல்துறையும் கவனிக்குமா?

Anonymous said...

//உட்பிரகாரத்திற்குள்ளும் சுமார் 10 தீட்சிதர்கள் அடங்கிய கும்பல்கள், கள்ள சாராயம், அயல்நாட்டு மதுபானங்கள் சகலத்தையும் குடிப்பதும், பரோட்டா, சிக்கன், மட்டன், ஆம்லட், அவிச்ச முட்டை சகலமும் சாப்பிட்டு விட்டு, வெற்றிலை, பீடி, சிகரெட், பான்பராக் போட்டுக்கொண்டு, பெண்களுடன் உறவு கொண்டு, சொர்க பூமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.//

அவாளும் மனுசாள் தானே, பகவானே ஓளிஞ்சிண்டு குளிக்கிற பொம்முனாட்டிய துணிய எடுத்துண்டு லீலை பண்ணி இருக்காரு இல்லையான்னோ ?

Anonymous said...

If you are so confidient that these allegations are true go to court and seek courts' orders to police to file FIRs and conduct investigation.By asking for a CBI investigation you are making it clear that you have no faith in the tamil nadu state police.Who rule Tamilnadu, that brahmin hater,
anti-Hindu Karunanidhi whose son
is an accused in a murder case.
The same Chidambaram city witnessed the murder of Uthaya Kumaran, on the eve of Karunanidhi being 'jonoured' with a doctorate by Annamalai University. The father was forced to deny his sons
death. There are many instances where DMK cadres have indulged in killing and violence.Where were you
when they killed three persons in the attack on Dinakaran office.

The Chidambaram
temple is in the hands of Deekshitars.You people want it to be brought under state's control so that you can allow officials and politicians to share the income
and change the traditions there.

Anonymous said...

//கேட்க யாருமில்லை, சிறுபான்மையோர்தானே அந்த சமூகத்தினர் என்கிற இறுமாப்புதானே?//

எம்மைக்கருவியாக வைத்து அவனே எல்லாம் செய்விக்கிறான் என்பதை உள்ளத்தில் உறுதியாகக் கொள்ளுங்கள்.
எல்லாம் அவன் விளையாட்டே,

அன்று பாண்டவர்கள் தாங்கள் சிறுபான்மையினர் என்று தளர்ந்திருந்தால் தர்மத்தை நிலைநாட்டி இருக்க முடியுமா??........

குற்றங்கள் குறைகள் எல்லாம் இவர்கள் ஜோடிப்புகளே.......

கோ.சுகுமாரன் Ko.Sugumaran said...

அன்பு நண்பர்களுக்கு, வணக்கம்.

உண்மையான சமூக சேவகன் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவர்:

//உங்க மேல போலீஸ்ல புகார் கொடுத்தா அதுக்கு "பொய்க்கேஸ்"-னு முழம் நீளப் பதிவு போடுவீங்க..// என்று கூறியுள்ளார்.

அந்த சம்பவம் குறித்து முதலில் புகார் கொடுத்தது நான். அதன்பின்னாள் ஒரு புகாரைப் பெற்று பொய் வழக்குப் போட்டுள்ள்ளனர். எனவே, தீட்சிதர்கள் விவகாரம் வேறு என்னுடையது வேறு.

//சிக்கன் சாப்ப்பிடறதெல்லாம் ஒரு புகாரா.. அதுவும் சட்டப்படி ஒரு புகார் தருமளவுக்கு ஒரு பெரிய குற்றமா.. //

நண்பருக்கு, சிக்கன் சாப்பிடுவது தவறு அல்ல தான். ஆனால், தீட்சிதர்களை கடவுளின் அவதாரம் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு துரோகம் செய்யக் கூடாது.

சிக்கன் சாப்பிட்டுவிட்டு பெண்களைத் தள்ளிக் கொண்டு வந்து கோயிலுக்குள்ளேயே உறவுக் கொள்வது சட்டப்படி குற்றம். வெறும் சிக்கனோடு நிறுத்தினால் அது குற்றமாகாது.

தீக்ஷிதர் என்ற பெயரில் பின்னூட்டம் இட்டவர்:

//கிடைத்த சந்தடி சாக்கில் ஒட்டுமொத்த சமூகத்திற்கு அவப்பெயர் தருவதுபோல பதிவு எழுதிவது எந்த விதத்தில் நியாயம்?//

நான் ஒட்டுமொத்த சமூகத்திற்கே அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தோடு பதிவிடவில்லை. குற்றமிழைக்கும் தீட்சிதர்களைப் பற்றிதான் பதிவிட்டுள்ளேன்.

கடும் பார்ப்பன எதிர்ப்பாளாராக இருந்த தந்தை பெரியார் கூட இராஜாஜி போன்ற பார்ப்பனரோடு உறவு கொண்டுருந்ததை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அனானி:

//If you are so confidient that these allegations are true go to court and seek courts' orders to police to file FIRs and conduct investigation.By asking for a CBI investigation you are making it clear that you have no faith in the tamil nadu state police.//

தமிழ்நாடு போலீஸ் அது எந்த ஆட்சி நடந்தாலும் தீட்சிதர் விவகாரங்கள் பற்றி கண்டு கொள்வதே இல்லை. தீட்சிதர்கள் மேல் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் பல அதிமுக ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் நடந்தவை.

அதனால்தான் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறோம். இந்த விவகாரங்கள் பொறுத்தவரையில் அது கருணாநிதி போலீசோ, ஜெயலலிதா போலீசோ எல்லாம் ஒன்றுதான்.

//The Chidambaram
temple is in the hands of Deekshitars.You people want it to be brought under state's control so that you can allow officials and politicians to share the income
and change the traditions there.//

தீட்சிதர்கள் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு. இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்குச் சொந்தமானது அல்ல. இதுபற்றி பிறகுப் பார்ப்போம்.

தவறுகளைச் சரிசெய்ய வேண்டுமென்றால் அரசுக் கட்டுபாட்டில் இருப்பதுதான் நல்லது. அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் பல கோயில்கள் நல்ல நிலையில் இருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

....பின்னுட்டமிட்டவர்கள் இவ்வளவு தீட்சிதர்களுக்குப் பரிந்து பேசுகிறீர்களே..
தீட்சிதர்களைத் குற்றம் செய்யாமல் இருக்க சொன்னால் நாங்கள் ஏன் பதிவிடப் போகிறோம்.

Sathiyanarayanan said...

சுரண்டிக் கொழுத்து வாழும் பார்ப்பனப் பன்னாடைகளைத் தோலுரித்து தொங்கவிட்டமைக்கு நன்றி தோழரே

Anonymous said...

சி.பி.ஐ மீது உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா :). சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று கோருவது நடைமுறையில் எளிதல்ல.மாநில அரசு காவல் துறை விசாரணையே போதும் என்று வாதிடும். உங்கள் ‘குற்றச்சாட்டுகளை' காவல் துறை விசாரிக்க மறுத்தது என்றால் நீதிமன்றம் சென்று வழக்கு பதிவு செய்து விசாரிக்க கோருவதே
எளிதானது. உங்களுடைய பதிவுகளைப்
படிக்கும் போது உங்களை இந்தப் பிரச்சினையில் நடுநிலையாளர் என்று
ஏற்பது கடினமாக இருக்கிறது. இது
இந்த இடுகையின் நம்பகத்தன்மையை
கேள்விக்குள்ளாக்குகிறது.

தீட்சிதர்கள் தவறே செய்திருக்க மாட்டார்கள், 100% புனிதர்கள் என்பதல்ல என் கருத்து. இங்கு காவல்
துறை சரியாக நடந்து கொள்ள வேண்டும், பாரபட்சமின்றி செயல்பட
வேண்டும். நிலைமை அப்படியல்ல
என்று நீங்கள் கூறலாம், அதை
முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.
அதே சமயம் சி.பி.ஐ விசாரணை
கோருவது சரியான தீர்வாகக் தோன்றவில்லை. சி.பி.ஐ பல
வழக்குகளில் சொதப்பியிருக்கிறது.
போபார்ஸ் வழக்கில் எப்படி நடந்து
கொண்டது. சி.பி.ஐ தீட்சிதர்கள்
மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று முடிவு செய்தால் என்ன
செய்வீர்கள்?. சி.பி.ஐ எல்லா வகை
குற்றங்களையும் விசாரிக்காது. நீங்கள்
முன் வைக்கும் குற்றச்சாட்டுகள் பல
சி.பி.ஐ விசாரிக்கும் குற்றங்கள் பட்டியலலில் வராது.சி.பி.ஐ விசாரணை குறித்த கோரிக்கை ஏற்க்கப்படுவதும்
கேள்விக்குறியே. மாநில காவல்
துறைக்கு அழுத்தம் கொடுத்து
விசாரிக்க வைப்பதே நல்ல முடிவாக
இருக்கும்.

Anonymous said...

சி.பி.ஐ வேறு, சி.பி.சி.ஐ.டி வேறு.
முன்னது மைய அரசின் கீழ் வருவது,
பின்னது மாநில காவல் துறையின் ஒரு பிரிவு. நீங்கள் யார் விசாரிக்க
வேண்டும் என்று கோருகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை.

Anonymous said...

"தயவுசெய்து தீட்சிதர்கள் தாட்சண்யத்திற்காகவோ, தீட்சதர்கள் மீது வழக்குப் போட்டால் தெய்வ குற்றம் ஏற்படும் என்று பயந்தோ, வழக்கு சி.பி.சி.ஐ.டி.மூலம் விசாரிக்காமல் விட்டால் மனித உரிமை மீறல் குற்றத்திற்காக மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்".

இது சரியான காமெடி, மனித உரிமை
கமிஷனின் அதிகார வரம்புகள் உங்களுக்குத் தெரியாதா?. நீங்கள்
குறிப்பிடும் விவகாரங்களில் அதால்
செய்யக் கூடியது குறைவு. அப்படி இருக்க ”மனித உரிமைக் கமிஷனுக்குப் புகார் செய்ய வேண்டிவரும்" என்றா குறிப்பிடுவார்கள். சரி அப்படியே செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி
விட்டால் என்ன செய்வீர்கள்.சொந்தச்
செலவில் சூன்யம் என்பது இப்படி
‘மிரட்டுவது'தான்.

மேலும்
புகார் மனு சில தீட்சிதர்கள் மீதான
சி.பி.சி.ஐ.டி விசாரணையுடன் நின்றிருக்க வேண்டும். அரசு கோயிலை
எடுத்துக் கொள்வதை இங்கு கொண்டுவந்திருக்கக் கூடாது.அதில்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தீட்சிதர்களுக்கு எதிரான இதில்
வேகம் இருக்கிற அளவிற்கு விவேகமோ, செயல் யுக்தி குறித்த
புரிதலோ இல்லை.

Anonymous said...

You are not a tamil but a shit eating pig to write such an article.

Read the history of tiruvanamalai , there was thug who took over the temple, Lord Shiva punished him and he died a horrible death.

Anyone who tries to destroy the traditions of any Shiva temple will suffer such horrible fate.

Read Tirumular , He has stated that anyone who tries to destroy any Shiva temple will be himself destroyed.

Political stooges and rascals like you should suffer even greater pain and dishoner.

See your own life...