1992 என்று நினைக்கிறேன். கோவை இராமகிருட்டினன் தடா சட்டத்தில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தடாவில் சிறையில் உள்ளவர்களை அவரது ரத்த உறவுடைய உறவினர்கள் மட்டுமே சந்திக்க முடியும் என்று தமிழக அரசு உத்தரவு ஒன்றை போட்டிருந்தது. திமுகவைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் மீது தடா வழக்குப் போடப்பட்டு அவர் வேறொரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை நேர்காண வேண்டுமென திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக் கேட்டதற்கு மேற்சொன்ன காரணத்தைக் கூறி அனுமதி மறுத்தது அப்போதைய ஜெயலலிதா அரசு. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் கருணாநிதி. ரத்த உறவுகள் மட்டுமே நேர்காண முடியும் என்ற தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இந்த உத்தரவு நகலை எடுத்துக் கொண்டு வழக்கறிஞர் சிராஜீதினும் நானும் கோவை மத்திய சிறைக்கு இராமகிருட்டினன் அவர்களைச் சந்திக்க சென்றோம். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைச் சந்தித்தோம். உறவினர்கள் தவிர நண்பர்கள் என்ற அடிப்படையில் முதன் முதலில் அவரைச் சந்தித்தவர்கள் நாங்கள்தான்.
சிறையின் முதன்மை வாசல் அருகே கைதிகளை நேர்காண வருபவர்கள் மனு அளித்து விட்டு காத்திருக்கும் பகுதியில் ஒரு செக்கு போன்ற ஒன்றின் மீது மக்கள் உட்கார்ந்துக் கொண்டு கதைப் பேசிக் கொண்டு இருந்தார்கள். சிலர் அதன் மீது உட்கார்ந்துக் கொண்டு டீ குடித்தார்கள், வெற்றிலைப் பாக்குப் போட்டு எச்சிலை அங்கேயே துப்பினார்கள், சிறுவர்கள் மலம், ஜலம் கூட கழித்தர்கள். என்னதான் அது என்ற ஆர்வ மிகுதியில் அங்கு சென்று பார்த்த போது எனக்கு பெரும் அதிர்ச்சி. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அனைவராலும் பெருமையுடன் அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் சுதந்திரப் போரில் ஈடுபட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்ட போது இழுத்த செக்குதான் அது. தன் குருதியை வியர்வையாய் சிந்தி இழுத்து இழுத்து தேய்ந்த அவரது உடல் போல, தேய்ந்துக் கிடந்த வரலாற்று சிறப்பு மிக்க செக்கு என்று எண்ணிய போது என் மனது கனத்தது. வரலாற்று உணர்வு எந்தளவுக்கு மங்கிப் போயுள்ளதற்கு இதைவிட என்ன எடுத்துக்காட்டு கூற முடியும் என்று எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டேன்.
அப்போது உடனடியாக கோவையில் எனக்குத் தெரிந்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தகவல் தெரிவித்தேன். ஜீனியர் விகடன் பத்திரிகை விரிவாக செய்தி வெளியிட்டிருந்தது. விழித்துக் கொண்ட தமிழக அரசு அதனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்தது. அதனைச் சுற்றி இரும்பு வேலி அமைத்து மேல் கூரை எல்லாம் போட்டுப் பாதுகாத்தது. இன்றைக்கும் அந்த ‘வரலாற்று செக்கு’ பாதுகாப்பாக உள்ளது.
இன்று (செப்டம்பர் 5) வ.உ.சி.யின் 141வது பிறந்த நாள். அவரை நினைத்த போது மேற்சொன்ன நிகழ்வுகள் என் நினைவுக்கு வந்தன. வ.உ.சி. என்றாலே சிவாஜி கணேசன்தான் நினைவுக்கு வரும் இத்தமிழ்ச் சமூகத்தில் வ.உ.சி. யாருடைய நினைவில் இருக்கப் போகிறார்.
Wednesday, September 05, 2012
கோவை சிறையும், வ.உ.சி. இழுத்த செக்கும்
Friday, August 31, 2012
சிறைப் பறவை பூமணி!
நான் 1988-ல் மதுரை அரசரடியிலுள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது எனக்கு மிகவும் இளைய வயது. அந்த வயதிற்கே உரிய துடிப்பு இருந்தளவிற்கு போதிய அரசியல் தெளிவு இருந்ததாக சொல்ல முடியாது. இன்றைக்கு அரவாணிகள், திருநங்கைகள் மதிப்புடன் அழைக்கப்படவும், நடத்தப்படவும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அன்றைக்கு கிடையாது. அலிகள், ஒன்பதுகள், நேப்கள் (பிரெஞ்சு மொழியில் ஒன்பது) என்று கேவலமாக அழைக்கப்பட்ட காலமிது. நானும் இந்த மாதிரியான பார்வையில் இருந்து தப்பவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
நான், பொழிலன், தமிழ் முகிலன் மூவரும் நள்ளிரவு சிறையில் அடைக்கப்பட்டோம். விடியற்காலை எழுந்தவுடன் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தவர் பூமணி. அவர் முகத்தில்தான் முழித்தோம். சிறிய கூந்தல் வைத்து அதில் கொஞ்சம் பூ வைத்து இருந்தார். அதனால்தான் பூமணி என்ற பெயரோ என்று தெரியவில்லை. எதுவுமில்லாமல் இருந்த எங்களுக்கு பல் துலக்க பற்பொடி கொடுத்து உதவினார். உங்களுடையை இன்னொரு ஆள் அங்கே இருக்கார். லாக் அப் திறந்தவுடன் சந்திக்கலாம் என்று கூறி நம்பிக்கை ஊட்டினார். அதிலிருந்து நாங்கள் சிறையை விட்டு வெளியே வரும் வரையில் அவர் மிகவும் அன்புடனும், நட்புடனும் பழகியது என் வாழ்நாளில் மறக்க முடியாதது.
ஒரு சிறிய வழக்கொன்றில் சிக்கிச் சிறைக்கு வந்த அவருக்கு இந்த சிறைதான் சொந்த வீடானது. அதிலிருந்து வெளியே செல்ல மனமில்லாமல் சிறைக்குள்ளேயே வாழ்ந்தார். தண்டனைக் காலம் முடிந்து விடுதலைச் செய்யப்பட்டாலும், நேரே காவல்நிலையம் சென்று ஏதாவது ஒரு வழக்கில் அவரை சேர்க்க சொல்லி உள்ளே வந்து விடுவார். எங்கோ பிறந்த பூமணிக்கு மதுரை சிறைதான் புகுந்த வீடு.
இளம் வயதுடையவர்களாக நாங்கள் இருந்ததும், சராசரி குற்றம் செய்துவிட்டு வந்தவர்களைக் காட்டிலும், ஒரு தீவிர அரசியல் வழக்கில் சிறை புகுந்ததாலும் பூமணிக்கு எங்கள் மீது அதிகப் பிரியம்.
நாங்கள் நீதிமன்றங்களுக்கு செல்வதற்காக எங்களின் துணிமணிகளைத் துவைத்துக் காய வைப்போம். அவை திடீரென காணாமல் போகும். அந்த உடைகளை எங்களைக் கேட்காமல் எடுத்துச் சென்று, தன் வசமிருக்கும் ஒருசில பீடிகளைக் கூலியாக கொடுத்து, சிறைக்குள் இருக்கும் சலவையகத்தில் தேய்த்து மடிப்பு மாறாமல் கொண்டு வந்து தருவதில் பூமணி அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது. அவரின் முகத்தில் அந்த மகிழ்ச்சி வழிந்தோடும். படித்தவர்களாக இருக்கும் நாங்கள் அழுக்காக உடையுடுத்தி அதனால் எங்களுக்கு நீதிமன்றத்திலோ வெளியிலோ அவமரியாதை வந்துவிடக் கூடாது என்ற அவரது நல்லெண்ணத்திற்கு ஈடு ஏதுமில்லை. இப்படி எத்தனையோ நிகழ்ந்த கதைகளைக் கூற முடியும்.
24 ஆண்டுகள் கழிந்த பின்னரும் அந்த முகம் இன்றைக்கும் என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு அற்புதமான மனிதர்கள் மத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பதற்குப் பூமணியே சான்று.
பூமணி இப்போது என்ன ஆனார். உயிரோடு இருக்கிறாரா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அந்த சிறைப் பறை இன்னும் என்னுள் சுழன்றுக் கொண்டுதான் இருக்கிறது. நான் சுழலும் வரை அந்த நினைவு இருக்கும்.
Sunday, August 19, 2012
புத்தர் சிலையை திரும்பவும் ஒப்படைக்க கண்டிரமாணிக்கம் கிராம சபையில் தீர்மானம்!
சென்ற
ஜூலை 23 அன்று,
திருவாரூர் அருகேயுள்ள கண்டிரமாணிக்கம் என்ற கிராமத்தில் ஐந்தரை அடி
உயரமுள்ள 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று நிலத்திற்கு
அடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கிராம மக்கள் அந்த
புத்தர் சிலையை ஊருக்கு நடுவே வைத்து சுத்தம் செய்து, எண்ணெய்
பூசி, விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதை அறிந்த
வருவாய் துறையினர் உடனடியாக அங்கு வந்து புத்தர் சிலையை எடுத்துச் செல்ல முற்பட்டனர்.
அதற்கு அந்த கிராம மக்கள் திரண்டு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே நீண்ட
போராட்டத்திற்குப்பின் அச்சிலையை எடுத்துச் சென்றனர். தற்போது
அந்த சிலை திருவாரூர் தியாகராஜ சாமி கோயில் வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த
நாங்கள் (நான்,
அ.மார்க்ஸ், சிவகுருநாதன்,
அமானுஷன், காளிதாஸ்), சென்ற
ஜூலை 28 அன்று, திருவாரூர் அருங்காட்சியகத்தில்
வைக்கப்பட்டு இருந்த புத்தர் சிலையை காணச் சென்றோம். அங்கு வைக்கப்பட்டிருந்த
புத்தர் சிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தோம். கோயில் நுழைவு வாயிலுக்கு
நேரெதிரே அருங்காட்சியகத்திற்கு அருகேயுள்ள மேடையில் சிலை தெரியாமல் இருக்க முன்புறம்
தட்டி ஒன்றை வைத்து மறைத்தும், சிலையை சிவப்புத் துணிப் போட்டு
மூடியும் வைத்திருந்தனர். அதுபற்றி அங்கிருந்த அருங்காட்சியக
பொறுப்பாளரிடம் கேட்டதற்கு, அவர் ‘கோயில்
நிர்வாகத்தினர் சிலையை இங்கு வைக்க எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். அதனால் மூடி வைத்திருக்கிறோம்’ என்று கூறினார்.
பின்னர் ஓரிரு தினங்களில் அப்பகுதி காலைக்கதிர், தினமலர் நாளேடுகளில் இதுகுறித்து செய்தி வெளியானவுடன் தட்டியை அகற்றியும்,
துணியை நீக்கி புத்தர் சிலையை சுத்தப்படுத்தியும் வைத்துள்ளனர்.
இதுவொரு
புறமிருக்க சென்ற ஆகஸ்ட்
15, சுதந்திர தினத்தன்று, கண்டிரமாணிக்கம் கிராம
சபைக் கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் காளிமுத்து அவர்கள் தலைமையில் நடந்துள்ளது.
அக்கூட்டத்தில் புத்தர் சிலையை திரும்பவும் ஊருக்குக் கொண்டு வந்து வழிபட
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளனர்.
கிராம
சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
25வது தீர்மானம்:
“நமது ஊரில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
அது தற்போது திருவாரூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
அதை ஊருக்குக் கொண்டு வந்து தியான மண்டபம் கட்டி, அரசு விதிகளின்படி வழிபாடு செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அவர்களை அனுகி கேட்பதற்குத்
தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.”
இத்தீர்மானத்தின்
நகலை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து அளித்து நிறைவேற்ற வலியுறுத்தியுள்ளனர்.
கண்டிரமாணிக்கத்தின்
மக்களின் உணர்வு பெரிதும் போற்றப்பட வேண்டியது. அவ்வூரில் தற்போது யாரும் பெளத்த மதத்தைச் சார்ந்தவர்கள்
இல்லை என்றாலும், தங்கள் ஊரில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிலையைக்
கோயில் கட்டி வழிபட தீர்மானித்துள்ளது நெகிழ்ச்சி அளிக்கிறது.
Friday, August 10, 2012
பொன்விழா காணும் எங்கள் தாகூர் கலைக் கல்லூரி – கோ.சுகுமாரன்
நேற்றைய முன்தினம் (08.08.2012) புதுச்சேரி லாசுப்பேட்டையில் அமைந்துள்ள தாகூர் கலைக் கல்லூரியின் பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. அவ்விழாவில் கலந்துக் கொண்ட முதல்வர் ரங்கசாமி அவர்கள் இக்கல்லூரி வளாகத்தில் மாநிலப் பல்கலைக்கழகம் ஒன்று துவங்கப்படும் என அறிவித்துள்ளார். நான் பயின்ற, அதாவது எங்கள் இளமைக்கால அத்தனைக் குறும்புகளையும் அரங்கேற்றிய எங்கள் கல்லூரி வளாகம் பல்கலைக்கழகமாக மாறப்போகிறது என்ற மகிழ்ச்சி ஒருபுறம். இந்திய ஆளுமையின் பிம்பமாக திகழும் இரபீந்திரநாத் தாகூர் பெயரில் அமைந்துள்ள எங்கள் கல்லூரி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது என்கிற மகிழ்ச்சி மறுபுறம்.
நான் இக்கல்லூரியில் 1986 முதல் 1989 வரை இளம் அறிவியல் கணிதவியல் பயின்றேன். பயின்றேன் என்பதைவிட படிப்பை மறந்துப் போராட்டங்களில் ஈடுபட்டேன் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். எங்களின் கல்லூரி அனுபவங்கள் பற்றி அடுத்தப் பதிவுகளில் எழுத உள்ளேன். தற்போது எங்கள் கல்லூரி தொடங்கப்பட்ட வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.
பொன்விழாவை முன்னிட்டு கல்லூரி சார்பில் விழா மலர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். ஆங்கிலத் துறைத் தலைவர் முனைவர் இராஜா அவர்கள் இம்மலரைத் தொகுத்துள்ளார். இதில் அரிய பல தகவல்கள் அடங்கியுள்ளன. ஆசிரியர்கள் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதியுள்ளனர். வழக்கம் போல் மாணவர்களின் சுத்திகரிக்கப்படாத படைப்புகள் இடம்பெற்றுள்ளன. எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டுமென்ற தேடல் நிறைந்த எனக்கே தெரியாத பல தகவல்கள் இதில் அடங்கியுள்ளன.
1961, ஜூன் 30ல் தற்போது மிஷன் வீதியில் அமைந்துள்ள ‘கல்வே காலேஜ்’ (அப்போது அரசு உயர்நிலைப் பள்ளி) கட்டிடத்தில் ‘அரசுக் கலைக் கல்லூரி (Government Arts College)’ என்ற பெயருடன் இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. அப்போதைய பிரஞ்சு இந்திய தலைமை ஆணையர் எஸ்.கே. தத்தா இக்கல்லூரியை முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். அப்போது சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் செயல்பட்டுள்ளது. முதலில் பி.யூ.சி. (Pre University Course) வகுப்புகள் மட்டுமே தொடங்கப்பட்டன. 1961–1962 கல்வியாண்டில் மொத்தம் 160 மாணவர்கள் பயின்றுள்ளனர். இதில் 35 மாணவர்கள் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துள்ளனர். இக்கல்லூரிக்கு முறையான கட்டிடம் கட்ட அப்போது 1 லட்சத்து 96 ஆயிரத்து 553 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு தனியார் வசம் கட்டிடப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
1961-1962ல் இரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டை முன்னிட்டு (1861-1941) இக்கல்லூரிக்கு ‘தாகூர் கலைக் கல்லூரி” என பெயர் சூட்டப்பட்டது. இக்கல்லூரியின் முதல் முதல்வராக சென்னை மாநிலக் கல்லூரியின் முதல்வராக இருந்த டி. பாலகிருஷ்ணன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். கணிதவியல் துறை பேராசிரியராக வி. பாலக்கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
1962, மே 21ல், இளங்கலை பொருளாதாரம், பிரஞ்சு மற்றும் இளம் அறிவியல் கணிதவியல், தாவரவியல் ஆகிய பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கென அரசிதழில் அறிவிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது (No. F. 25.96/62-EDM, General Administration Department, Government of Pondicherry. Dated 21st May 1962). இதற்கென விண்ணபிக்க விரும்புவோர் 50 நயா பைசா மணியார்டர் செய்து விண்ணப்பம் மற்றும் கையேடு பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிக்கையை அப்போதைய அரசுத் துறை செயலர் சுர்ஜித் சிங் மமக் வெளியிட்டுள்ளார். 1970ல் இக்கல்லூரியில் முதுகலை, முதுஅறிவியல் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
1963, ஜூன் 13ல், அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு தற்போது கல்லூரி அமைந்துள்ள இலாசுப்பேட்டையில் இக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டியுள்ளார். பின்னர் கட்டிடப் பணிகள் அனைத்தும் முடிந்து புதிய கட்டிடத்தை அப்போதைய இந்திய கல்வி அமைச்சர் ஶ்ரீமாலி திறந்து வைத்துள்ளார். இதன் முதல் ஆண்டு விழாவில் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்க்காடு லட்சுமணசாமி முதலியார் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்துள்ளார்.
நீண்ட வரலாறு கொண்ட தாகூர் கலைக் கல்லூரி இன்று பல்வேறு துறைகளாக பல்கிப் பெருகியும், முதுகலை மற்றும் முதுஅறிவியல் வகுப்புகளுக்கென ‘பட்ட மேற்படிப்பு மையம்’ தனியே துவங்கப்பட்டும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
தமிழுக்குப் பங்களிப்பு செய்து வரும் மா.இல.தங்கப்பா, க.பஞ்சாங்கம், ராஜ் கெளதமன், பசுபதி, நா.இளங்கோ என பலரும் இங்கு பணியாற்றி உள்ளனர், பணியாற்றியும் வருகின்றனர்.
பரந்து விரிந்த, மரங்கள் நிறைந்த வளாகத்தில் அமைந்துள்ள எங்கள் கல்லூரியின் கம்பீரம் இன்றைக்கும் என்னை ஈர்த்த ஒன்று. பொன்விழா காணும் எங்கள் கல்லூரியின் இனிமை நிறைந்த அந்த நாட்கள் என் கண்முன் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

Tuesday, August 07, 2012
கடலூர் மாவட்ட ஈழ அகதிகள் முகாம்களின் நிலை - உண்மை அறியும் குழு அறிக்கை
கடலூர் செய்தியாளர் மன்றத்தில் இன்று (7.8.2012) காலை 11 மணியளவில் வெளியிடப்பட்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கை:
| குள்ளஞ்சாவடி முகாம் நிலைமையை விளக்கும் தலைவர் |
1. பேரா. அ. மார்க்ஸ், மனித உரிமைகளுக்கான மக்கள் கழகம் (PUHR), சென்னை
2. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு (FPR), புதுச்சேரி
3. சத்யா சிவராமன், பத்திரிகையாளர், டெல்லி
4. இரா. பாபு, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, கடலூர்
5. சு. காளிதாஸ், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி
டெல்லி பத்திரிக்கையாளர் சத்யா சிவராமன், அ.மார்க்ஸ், கோ.சுகுமாரன், காளிதாஸ் ஆகிய நால்வரும் மூன்று ஈழ அகதிகள் முகாம்களுக்கு ஆகஸ்ட் 3 அன்று சென்று வந்தோம். புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்ப்புத்துப்பட்டு, குள்ளஞ்சாவடிக்கு அருகில் உள்ள அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி ஆகிய ஊர்களில் உள்ள முகாம்கள் இவை. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் 452 குடும்பங்கள் (சுமார் 1500 பேர்கள்) உள்ளன. குள்ளஞ்சாவடியில் 125 குடும்பங்கள் (414 பேர்கள்) உள்ளன. குறிஞ்சிப்பாடியில் 167 குடும்பங்கள் (530 பேர்கள்) உள்ளன.
எங்கள் அமைப்புகள் சார்பாக ஈழ அகதிகள் முகாம்களுக்கு நாங்கள் சென்று வருவது இது நான்காவது முறை. இம்முறை எங்களுடன் குழுவில் பங்கேற்ற சத்யா சிவராமன் உலக அளவில் அகதிகள் பிரச்சினையில் அக்கறை உள்ளவர். பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு இன மக்களுக்கான முகாம்களுக்கும் சென்று வந்தவர்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மொத்த முகாம்கள் நான்கு. மற்ற இரண்டும் விருதாசலத்திலும் காட்டுமன்னார்குடியிலும் உள்ளன. இவை இரண்டிற்கும் ஆகஸ்ட் 4, 5 ஆகிய தேதிகளில் எங்கள் குழுவைச் சேர்ந்த கடலூர் பாபு சென்று வந்தார். விருத்தாசலம் முகாமில் 65 குடும்பங்கள் (239 பேர்கள்) உள்ளன. காட்டுமன்னார்குடியில் 74 குடும்பங்கள் (246 பேர்கள்) உள்ளன.
தமிழக அளவிலுள்ள ஈழ அகதிகள் முகாம்களின் நிலைமை, இங்குள்ள மக்களின் அவல நிலை ஆகியன குறித்து எங்களின் முந்தைய அறிக்கைகளில் விரிவாகப் பேசியுள்ளோம். தி.மு.க, அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளில் ஈழ அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித் தொகை முதலியன அதிகரிக்கப்பட்டதன் பின்னணியில் எங்களின் அறிக்கைகளுக்கும் ஒரு பங்குண்டு.
அகதிகள் முகாம் நிலைமைகளைத் திருத்துவதற்கான கோரிக்கைகள் குறைந்தபட்சம் மூன்று மட்டங்களில் வைக்கப்பட வேண்டும். இந்திய அளவில், தமிழக அளவில் மற்றும் மாவட்ட அளவில் இக்கோரிக்கைகள் அமைகின்றன. இவை தவிர குறிப்பான அந்த கிராம அளவிலும் கூட கோரிக்கைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் ஒரு அகதிகள் கொள்கையை (National Policy on Refugees) உருவாக்குதல், ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை (Dual Citizenship) வழங்குதல் ஆகிய கோரிக்கைகளை நாம் மத்திய அரசை நோக்கி வைக்க வேண்டும். உதவித் தொகைகளை உயர்த்துதல், இடஒதுக்கீடு அளித்தல் ஆகியவற்றிற்கு நாம் மாநில அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும். உதவிகளை வினியோகிப்பதில் உள்ள குறைபாடுகள் முதலானவற்றிற்கு மாவட்ட நிர்வாகத்தை அணுகவேண்டும்.
மைய அரசை நோக்கி வைக்கிற கோரிக்கைகள் அப்படியே இருக்கின்றன. அகதி உரிமைகளை அங்கீகரிப்பதில் மைய அரசு இம்மியும் முன்னே நகரவில்லை. ஈழ அகதிகளுக்கு மாநில அளவில் அளிக்கும் உதவிகள் முதலானவற்றை முந்திய அரசும் இந்த அரசும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளன. முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு மாநில அரசு அளிக்கும் உதவித் தொகையை ஈழ அகதிகளுக்கும் நீட்டித்து ஜெயலலிதா அரசு ஆணை வழங்கியுள்ளது. உயர் கல்வியில் இடஒதுக்கீடு குறித்தும் இப்போது ஒரு ஆணை இடப்பட்டுள்ளது. இவை வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்க முடியாது.
ஆனால் இவை யாவும் யானைப் பசிக்குச் சோளப் பொறி போடுவது போலத்தான் என்பதை எங்களின் முந்தைய அறிக்கைகளைப் படிப்போர் விளங்கிக் கொள்ளலாம். பத்தடிக்குப் பத்தடி (10’*10’) என்கிற அளவில் தார்ப்பாய்க் கூரைகளுடன் அமைத்துத் தரப்பட்ட வீடுகள் இன்று தகர அல்லது ஆஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் காட்சியளிக்கின்றன. வெயில் நேரத்தில் ஐந்து நிமிடங்கள் கூட உள்ளே யாரும் இருக்க இயலாது. ஆனால் இவற்றில்தான் இந்த ஏதிலியர் கடந்த பல ஆண்டுகளாக வசிக்கின்றனர்.
| பாதுகாப்பற்ற வீட்டில் ஈழத்தமிழ் மூதாட்டி |
ஆஃபர் (OFFER), அட்ரா (ADRA), ஜே.ஆர்.எஸ் (JRS) முதலான தொண்டு நிறுவனங்கள் சில முகம்களில் கூரை வேய்வதற்கு உதவியுள்ளன. காட்டுமன்னார்குடியில் மட்டும் தொண்டு நிறுவன உதவிகளுடன் 100 சதுர அடிக்கு கான்கிரீட் கூரை போடப்பட்டுள்ளது. குள்ளஞ்சாவடி முகாமைத் தத்து எடுத்துள்ள ஜூனியர் விகடன் இதழ் குழந்தைகளுக்கான பாலவாடியைக் கட்டிக் கொடுத்துள்ளது. மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்தப் போகிறார்களாம். இப்படிப் பத்திரிகைகள், வங்கிகள், அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் முதலியன தமிழகத்தில் உள்ள 110 முகாம்களையும் தத்து எடுத்துக் கொண்டால் கூட ஓரளவு நிலைமை சீராகும் எனத் தோன்றியது.
| பயன்படாத கழிவறைகள் |
| பால்வாடி அருகில் திறந்த வெளியில் சுடுகாடு |
| நான்கு மாதங்களாக முதியோர், விதவைத் தொகை கிடைக்கவில்லை என புகார் |
இந்த முகாம்கள் தொடங்கப்பட்டபோது போடப்பட்ட மின் இணைப்புகள் புதுப்பிக்கப்படவே இல்லை. முறையாகக் கம்பம் நட்டு மின் கம்பிகள் வழியாக மின்சாரம் வீடுகளுக்கு வினியோகிக்கப்படாமல் வெறுமனே கம்பங்கள் இல்லாமல் ஒயர்கள் மூலம் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதை குறிஞ்சிப்பாடியில் பார்த்தோம். தாணே புயலுக்குப் பின் தார்பாய்களும், கூரைகளும் அகற்றப்பட்டு தகரக் கூரைகள் போடப்பட்டுள்ளன. இதில் மின் கசிவு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது குறித்த கவலையை மக்கள் வெளிப்படுத்தினர்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு முகாமும் ஒரு கிராமம் அளவு மக்கள் தொகையைக் கொண்ட போதிலும் முறையான சாலை வசதிகள் எந்த முகாம்களிலும் கிடையாது. கழிவு நீர் வெளியேறும் வசதியும் கிடையாது. குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி முதலிய முகாம்கள் சரியான களிமண் தரையில் அமைந்துள்ளன. மழைக்காலத்தில் உள்ளே நடக்க இயலாது. அதேபோல பல இடங்களில் முகாம்களை ஒட்டித் தனியார் சாகுபடி நிலங்கள் அமைந்துள்ளன. இது பாதுகாப்பின்மைக்கும் பாம்பு முதலியன முகாம்களுக்குள் வருவதற்கும் காரணமாகிறது.
கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் இருந்த சுடுகாட்டுப் பிரச்சினை குறித்துச் சென்ற அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது அது ஓரளவு தீர்க்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ள அந்த முகாமில் இறக்கும் கிறிஸ்தவர்களைப் புதைக்க அங்குள்ள பாதிரியார் தங்களுக்கான கல்லறைத் தோட்டத்தில் இடம் தருகிறாராம். மற்றவர்களைப் புதைக்க குழந்தைகள் பயிலும் பால்வாடிக்கருகில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முகாமுக்கு மத்தியில் இப்படியான ஒரு சிறு இடத்தை ஒதுக்க நமது அதிகாரிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததெனத் தெரியவில்லை. சிறிய இடமாகையால் குழி தோண்டும்போது பழைய உடல்களின் சிதைந்த எலும்புகளை அப்புறப்படுத்திவிட்டுத்தான் புதைக்க வேண்டியுள்ளதாம்.
முந்தைய அறிக்கைகளில் நாங்கள் குறிப்பிட்டிருந்த ஒரு முக்கிய பிரச்சினை இன்னும் தொடர்கிறது. முப்பதாண்டுகளாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் சில இப்போது இரண்டு குடும்பங்களாகியுள்ளன. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் மட்டும் இவ்வாறு 125 புதிய குடும்பங்கள் உருவாகியுள்ளன. இவர்களுக்கு வீடுகள் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகளிடம் முறையிட்டால், இந்த தாலுக்காவிலேயே இடம் கிடையாது, நீங்களே ஏதாவது இடம் பார்த்துச் சொல்லுங்கள் என்கிறார்களாம். அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற பதிலுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. எந்த அடிப்படையில் இந்த ஏதிலியர் புதிய இடத்தைக் தேடிக் கண்டுபிடிக்க இயலும்? உரிய ஆவணங்களைக் கையில் வைத்துள்ள வருவாய்த் துறையின் பொறுப்பு அது, நமது கிராமங்களில் இந்த ஏதிலி மக்களுக்கு அளிக்க இடமே இல்லை என்பது எத்தனை பெரிய பொய்?
இன்னொரு புதிய பிரச்சினையும் தற்போது எழுந்துள்ளது. போர் முடிந்ததனால் முகாம்களில் உள்ளவர்கள் திரும்பிப் போக ஐ.நா. அகதிகள் ஆணையம் சில உதவிகளைச் செய்கிறது. விமான டிக்கட், சிறு உதவித் தொகை முதலியவற்றைத் தருகிறார்கள். மிகச் சில குடும்பங்கள் அவ்வாறு போயுள்ளன. இந்த முகாம் வாழ்வைக் காட்டிலும் அங்கே நிலமை மோசம் என்பதால் பெரிய அளவில் யாரும் போவதில்லை. ஒரு சில குடும்பங்களில் குடும்பத் தலைவர் அல்லது யாரேனும் ஒருவர் நிலைமையைப் பார்த்து வருவதற்கோ, விட்டுச் சென்ற வீடு முதலியவற்றின் கதி என்னாயிற்று என்று பார்ப்பதற்கோ நாடு திரும்புகின்றனர். போர்ச் சூழலில் முறையான பயண ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள் இவர்கள். திரும்பிச் செல்ல பாஸ்போர்ட் எடுக்க வேண்டுமானால். இங்கே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அகதிகள் அட்டையிலிருந்து அவர்களின் பெயரை நீக்குவதை ஒரு விதியாக வைத்துள்ளது இந்திய அரசு. இப்படிச் சென்றவர்கள் வேலை முடிந்த பின்போ, அல்லது அங்கு இருக்க முடியாமலோ, அல்லது இங்கே படித்துக் கொண்டிருக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதற்கோ திரும்பி வந்தால் அவர்களுக்கு மீண்டும் அகதி அட்டையில் இடம் கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்கு அளிக்கப்படும் அகதி உரிமைகள், உதவித் தொகைகள் எல்லாம் ரத்தாவதை விடப் பெரிய கொடுமை என்னவெனில் அவர்களை முகாம்களில் உள்ள தம் குடும்பத்தோடு வாழ்வதற்கும் நமது ‘கியூ’ பிரிவு போலீசார் அனுமதிப்பதில்லை. குள்ளஞ்சாவடியில் உள்ள இப்படியான குடும்பங்களைச் சேர்ந்த சில பெண்கள் பரிதாபகரமாக இது குறித்து முறையிட்டனர்.
ஒரே ஒரு அம்சத்தில் மட்டுமே கொஞ்சம் முன்னேற்றத்தைக் காண முடிந்தது. ‘கியூ’ பிரிவுப் போலீசின் கண்காணிப்பும் கெடுபிடிகளும் கொஞ்சம் குறைந்துள்ளன. போர் முடிந்துள்ளது இதற்கொரு காரணம். ஆனால் அதே காரணத்தை முன்வைத்துச் செங்கல்பட்டுச் சிறப்பு முகாமை மட்டும் கலைப்பதற்கு தமிழக அரசு தயாராக இல்லை. முகாம்களை விட்டு வெளியே செல்லும்போது அதற்கான பதிவேட்டில் பதிவு செய்து விட்டுப் போனால் போதும் என்கிற நிலையே தற்போது நிலவுகிறது. ஆனாலும் பிரதமர் போன்ற முக்கிய தலைவர்கள் அருகிலுள்ள ஊர்களுக்கு வரும்போது அந்த நாட்களில் யாரும் முகாமை விட்டு வெளியே செல்ல வேண்டாமென ‘கியூ’ பிரிவுப் போலீஸ் வந்து எச்சரித்துச் செல்வது தொடர்கிறது.
வேறென்ன பிரச்சினை என்று கேட்ட பொழுது குறிஞ்சிப்பாடி முகாம் தலைவர் குணரட்ணம் சிரித்துக் கொண்டே சொன்னார்: “எங்கள் இளைஞர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை பெரிய பிரச்சினையாக உள்ளது. வயதானவர்கள் எப்படியோ இந்த வாழ்க்கையில் ‘செட்டில்’ ஆகி விட்டார்கள். குறைந்தபட்சம் குடியுரிமை கூட இல்லாமல் இங்கே வாழ்வதை இளைஞர்கள் வெறுக்கிறார்கள். வெளி நாட்டில் மூன்றாண்டுகளில் ஈழ அகதிகளுக்குக் குடியுரிமை கொடுக்கிறார்கள். ஆஸ்திரேலியா போகலாம் என்கிற ஆசை வார்த்தைகளில் மயங்கி எங்கள் இளைஞர்கள் நிறையப் பணத்தையும் இழந்து பிடிபடவும் செய்கிறார்கள்” என்றார்.
எங்களை மிகவும் உறுத்திய விஷயம் என்னவெனில் நாங்கள் சென்று பார்த்த அத்தனை முகாம்களிலும் அவ்வளவு பேர்களும் தங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, இந்திய அரசு நன்றாக வைத்துள்ளது என்று சொன்னதுதான். ஆனால் ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்கவும், பார்க்கப் பார்க்கவும்தான் எத்தனை அவல வாழ்வை அவர்கள் வாழ்கிறார்க்ள் என்பது நமக்குத் தெரிகிறது. முன்னால் இருந்த தார்ப்பாய்க் கூரையை விட தற்போதுள்ள தகரக் கூரையை அவர்கள் பெரிதென நம்பும் மனநிலையில் உள்ளனர். என்ன இருந்தாலும் நாம் அகதிகள். எந்த உரிமையும் இல்லாதவர்கள். நமக்கு இதுவே அதிகம் என்பது போன்ற மன நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர்.
ஒரு வேளை பிரச்சினை இல்லாமலிருந்து நீங்கள் உங்கள் ஊரிலேயே இருந்திருந்தால் இதைவிட நன்றாக இருந்திருக்கலாம் என நினைக்கிறீர்களா என்று கீழ்ப்புத்துப்பட்டு முகாமிலிருந்த வீரேந்திராவைக் கேட்டார் சத்யா. அதற்கான பதில் எதையும் வீரேந்திராவால் முறையாகச் சொல்ல இயலவில்லை. இப்படியான ஒரு hypothetical question-ஐ அவர் எதிர் கொள்ளத் தயாராக இல்லாததை நாங்கள் புரிந்து கொண்டோம்.
அகதி வாழ்வை அனுபவிக்கும் அவலம் நேராதிருந்தால் இவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என நினைத்துக் கொண்டே நாங்கள் கீழ்ப்புத்துப்பட்டு முகாமை விட்டு நகரத் தொடங்கியபோது, ஒரு பெண் ஓடி வந்து அவசரமாக எங்களை வீட்டுக்குள் அழைத்தார். எட்டிப் பார்த்தோம். கட்டிலில் படுத்த படுக்கையாய் ‘கோமா’ நிலையில் கிடந்தார் ஒருவர். அவர் விஜயசேகரன், 43 வயது. எட்டு மாதத்திற்கு முன் ஒரு நாள் மாலையில் கடைக்குச் சென்றபோது இரு சக்கர வாகனம் ஒன்று மோதித் தலையில் அடிபட்டு வீழ்ந்துள்ளார். கோமா நிலைக்குச் சென்றுவிட்ட அவரை மருத்துவமனையிலிருந்து கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.
ஆஃபர் தொண்டு நிறுவனம் ஒரு கட்டிலையும் மெத்தையையும் வாங்கித் தந்துள்ளது. அவரைக் கவனித்துக் கொள்வதற்காக அவரது மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்குப் போவதில்லை. ஆக இப்போது வீட்டில் இருவருக்கு வேலை இல்லை. 16 வயது மகன் விஜயராஜைக் கூலி வேலைக்கு அனுப்புகிறார் ராஜேஸ்வரி. விஜயராஜ் கூலி வேலை செய்து சம்பாதித்து வரும் கொஞ்சக் காசு + அரசு அக்குடும்பத்துக்கு அளிக்கும் 2500 ரூபாய், இதை வைத்துக் கொண்டுதான் ராஜேஸ்வரி, கோமாவில் கிடக்கும் கணவருக்கு வைத்தியம் செய்தாக வேண்டும், எல்லோரும் சாப்பிட்டாக வேண்டும். கண்களில் நீர் வழிய ஒரு பையிலிருந்த காகிதங்களைக் கொட்டி, உதவிக்காக அவர் யார் யாருக்கோ எழுதிய கடிதங்களை அள்ளி எங்கள் முன் காட்டினார். அகதி வாழ்வின் கொடுமை இதுதான். மோதிவிட்டுப் போனவரிடமும் நீதி கேட்க முடியாது. மருத்துவமனையில் வைத்துச் சிகிச்சை அளிக்க வேன்டும் என வற்புறுத்தவும் முடியாது.
கோரிக்கைகள்:
1. அரசு அளிக்கும் மாதாந்திர உதவித் தொகைகள் மற்றும் விதவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு அளிக்கப்படும் உதவித் தொகைகள் ஒவ்வொரு மாதமும் சரியான தேதிகளில் வினியோகிக்கப்படாதது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடலூர் மாவட்டத்தில் இப்பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக குறிஞ்சிப்பாடி மற்றும் குள்ளஞ்சாவடி முகாம்களில் உள்ள இக்குறை உடனடியாகப் போக்கப்பட வேண்டும். கடலூர் மாவட்ட ஆட்சியர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2. அகதி முகாம்களில் அளிக்கப்படும் மாதாந்திர ரேஷன் அரிசியின் தரம் மோசமாக உள்ளது என்கிற புகாரையும் மக்கள் முன்வைத்தனர். குறிப்பாக விருதாசலம் முகாமில் இக்குறைபாடு உள்ளது. மாவட்ட நிர்வாகம் இக்குறையைப் போக்க ஆவன செய்ய வேண்டும்.
3. புதிதாக உருவாகியுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக வீடு கட்ட இடம் ஒதுக்க வேண்டும். எல்லா முகாம்களிலும் இப்பிரச்சினை உள்ளது. குறிப்பாகக் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ்ப் புத்துப்பட்டு முகாமில் இவ்வாறு 125 குடும்பங்கள் கண்டறியப்பட்டும் அவர்களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. நீங்களே இடம் பார்த்துச் சொல்லுங்கள் என வருவாய்த்துறை அதிகாரிகள் சொல்வது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, தற்போதுள்ள முகாம்களுக்கு அருகிலேயே இவர்களுக்குப் புதிய குடியிருப்பு மனைகளையும் கட்டுமானப் பொருள்களையும் அளிக்க வேண்டும்.
4. பால்வாடிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் செய்து கொடுப்பதோடு பிள்ளைகள் விளையாடுவதற்குத் தேவையான விளையாட்டுப் பொருட்கள் முதலானவற்றையும் அளிக்க வேண்டும்.
5. கீழ்ப்புத்துப்பட்டு முகாமில் சடலங்களைப் புதைப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள இடுகாட்டின் பரப்பு அதிகரிக்கப்படுவதோடு அந்த இடம் சுத்தமாக்கப்பட்டுச் சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.
6. குள்ளஞ்சாவடி முகாம் தனியார் கரும்புத் தோட்டம் ஒன்றை ஒட்டி அமைந்துள்ளது. காம்பவுண்ட் சுவர் ஒன்று அங்கு உடனடித் தேவையாக உள்ளது. எல்லா முகாம்களுக்கும் காம்பவுண்ட் சுவர் கட்டித் தருவதற்கு மாவட்ட நிர்வாகங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். காட்டுமன்னார்குடி முகாமுக்கென கட்டப்பட்டுள்ள தண்ணீர்த் தொட்டியை உள்ளடக்கிக் காம்பவுண்ட் சுவர் எழுப்பப்பட வேண்டும்.
7. எல்லா முகாம்களிலும் உள்ள பழைய மின் இணைப்புகள் நீக்கப்பட்டு, முறையாக மின் கம்பங்கள் நட்டு மின்சார இணைப்பை வழங்க வேண்டும். மின் கசிவால் பெரிய விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் உடனடியாக இப்பணி மேற்கொள்ளப்படுதல் அவசியம்.
8. முகாம்களுக்குள் கான்க்ரீட் நடைபாதைகள், கழிவு நீர் வெளியேற்று வசதிகள் ஆகியவை செய்யப்படுதல் வேண்டும். குறிப்பாகக் குள்ளஞ்சாவடி மற்றும் குறிஞ்சிப்பாடி முகாம்களில் இது உடனடித் தேவையாக உள்ளது.
9. போர் முடிந்ததை ஒட்டி நாடு திரும்புபவர்களுக்கு அளிக்கப்படும் உதவிகள் மாவட்டந்தோறும் ஒரே சீராக இல்லை என்கிற குறையையும் காட்டுமன்னர்குடி முகாமில் தெரிவித்தனர். இந்தக் குறைகள் சீராக்கப்பட வேன்டும். நாடு திரும்பியவர்கள், அங்கிருக்க இயலாமல் மீண்டும் இங்கு வர நேரும்போது அவர்கள் முறையாக விசாரிக்கப்பட்டு மீண்டும் அவர்களுக்கு அகதி அட்டைகளை வழங்கி அவர்கள் தம் குடும்பத்துடன் வாழ வழிசெய்ய வேண்டும். குள்ளஞ்சாவடி முகாமில் அவ்வாறு திரும்பி வந்த சிலர் ‘கியூ” பிரிவு போலிசாரால் குற்றவாளிகள்போல நடத்தப்பட்டு அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். காவல்துறை இத்தகைய மனிதாபிமானமற்ற செயலை நிறுத்த வேண்டும்.
10. கீழ்ப்புதுப்பட்டு முகாமில் 47ம் குடியிருப்பில் வசிக்கும் விஜயசேகர் விபத்தொன்றின் விளைவாக இன்று கோமா நிலையில் உள்ளார். அவரைக் கட்டாயமாக மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய இரக்கமற்ற செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவரை மீண்டும் மருத்துவமனையில் சேர்த்து உரிய மருத்துவ உதவி அளிக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
11. விபத்துக்களால் கூரைகள் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு 100 சதுர அடிக்கு மட்டுமே கூரைகள் தருவது என்கிற நிலையைக் கைவிட்டு அவர்களின் முழு வீட்டிற்கும் கூரை வேய மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும். உடைந்துபோன கழிப்பறைகள் முதலியன சீர்திருத்தப்படுதல் வேண்டும்.
நாங்கள் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல மாவட்ட அளவில் நடவடிக்கை மேற்கொண்டு சீர்திருத்தப்படக் கூடிய கோரிக்கைகளை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளோம். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகங்கள் இக்குறைபாடுகளை உடனடியாக நீக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம்.
Labels:
G.Sugumaran,
அ.மார்க்ஸ்,
அகதிகள்,
கோ.சுகுமாரன்
Sunday, July 29, 2012
ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், குற்றமிழைத்தப் போலீசார் தப்பித்தலும்
நேற்றைய தினம் (28.7.2012) தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, நாங்குனேரி அருகே மறுகால்குறிச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டரால் சுட்டுக் கொல்லப்பட்ட வானமாமலை குடும்பத்திற்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியும், இறந்தவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவத்தோடு தொடர்புடைய இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யவும் உத்தரவிட்டுள்ளார்.
இது வரவேற்கத்தக்கது என்றாலும், இந்த நடவடிக்கை போதாது என்பதுதான் மனித உரிமையில் அக்கறை உடையோரின் கருத்து. மேலும், இந்த அறிவிப்பு எந்தப் பின்னணியில் வந்தது என்பதைப் பார்க்க வேண்டும். வழக்கமாக என்கவுன்டர் நடக்கும் போது, அதற்கு மக்களிடம் ஆதரவு இருக்கும். ஆனால், இந்த முறை வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட போது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாகர்கோவில் - நெல்லை நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் நான்கு மணி நேரம் சாலை மறியல் செய்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் வானமாமலை உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். மேலும், வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து நீதி விசாரணை, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி விஜயகுமார் உள்ளிட்டவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்தல், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு, வானமாமலையின் மனைவி மஞ்சுவிற்கு அரசு வேலை என நியாயமான கோரிக்கைகளை வைத்துப் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளான தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த சம்பவத்தைக் கண்டித்ததோடு, சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கோரினர். வைகோ பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை கொடுத்ததோடு, அப்போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டார். இந்தச் சூழலில்தான் தமிழக முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் அறிவிப்பில் குற்றமிழைத்தப் போலீசார் மீது கிரிமினல் சட்ட நடவடிக்கைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. வெறுமனே பணியிடை நீக்கம், துறை சார்ந்த விசாரணை என கூறப்பட்டுள்ளது. இதெல்லாம், வெறும் கண்துடைப்பு என்பதை அனைவரும் அறிவோம்.
ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தமிழகத்தில் 6 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 12 பேர் போலீஸ் காவலில் இறந்துள்ளனர். 5 பெண்கள் போலீசாரால் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சி தற்போது “போலீஸ்” ஆட்சியாகவே நடக்கிறது.
போலீஸ் அத்துமீறலுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமாகும் போது அதை மழுங்கடிக்க முதலமைச்சர் மேற்சொன்னபடி அறிவிப்புகள் மூலம் அதை திசைத் திருப்பி விடுவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளார். இதற்கு போலீஸ் உயரதிகாரிகள் அவருக்கு துணைநின்று அறிவுரை வழங்குகின்றனர்.
பரமக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 தேவேந்திரர்கள் கொல்லப்பட்ட போது உடனடியாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிதி அளித்தார்கள். திருக்கோவிலூர் போலீசாரால் இருளர் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தபோது, வேறு வழியில்லாமல் பரமக்குடி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கும் கூடுதலாக ரூ. 3 லட்சம் நிதி அறிவித்தார். ஆனால், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. போலீசாரை பணியிடை நீக்கம்கூட செய்யாமல், வெறுமனே இடமாற்றம்தான் செய்துள்ளனர்.
திருக்கோவிலூரில் 4 இருளர் பெண்கள் போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு, பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் நிலைமை இன்னமும் மோசம். இந்த சம்பவம் ஊடகங்களில் பெரிதாக்கப்பட்ட பின்னர் முதலமைச்சர் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ. 4 லட்சம் நிதி அளித்து அறிவித்தார். உடனடியாக குற்றமிழைத்தப் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால், இதுவரையில், போலீசார் கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ‘போலீசாரை ஏன் கைது செய்யவில்லை’ என தமிழக அரசைப் பலமுறை கண்டித்தும் இதுவரையில் போலீசார் கைது செய்யப்படவில்லை. குற்றமிழைத்தப் போலீசாரை கைது செய்ய உத்தரவிடாமல், அரசைக் கண்டித்துக் கொண்டே இருக்கும் உயர்நீதிமன்றத்தின் போக்குக் கொடுமையிலும் கொடுமை. அதிகாரத்தின் கரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழக்குகளை நீதிமன்றங்கள் அணுகும் போக்குக் குறித்துப் பிறகுப் பார்ப்போம்.
சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் ஆண்டுதோறும் நடக்கும் எருதாட்டத்தைத் தடை செய்ததன் விளைவாக நடந்த மோதலில், கிராம மக்கள் மீது போலீசார் நடத்திய கொடிய தடியடித் தாக்குதல் பற்றி அறிவோம். போலீசாரை தாக்கியதாக கூறிப் போடப்பட்ட வழக்கில் தற்போது பொதுமக்கள் 79 பேர் சிறையில் உள்ளனர். இந்த சம்பவத்தை முழுவதையும் நியாயப்படுத்தி போலீஸ் உயரதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதில் மக்களைத் தாக்கிய போலீசார் மீது எந்தவித சிறிய நடவடிக்கையும்கூட எடுக்கப்படவில்லை.
முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம், கிருஷ்ணகிரியில் பெரியார் தி.க. பிரமுகர் பழனி என பல கொலை வழக்குகளில் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படவில்லை. தமிழகம் முழுவதும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வர உருப்படியான திட்டம் தமிழக அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.
இந்நிலையில், போலீசாரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக் கீற்று தென்படுவதாக தெரியவில்லை. மனித உரிமை ஆர்வலர்கள் ஆகிய நாங்கள் தொடர்ந்துப் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உண்மை நிலைமைகளை அறிந்து வெளிப்படுத்தி வருகிறோம். வெற்று அறிவிப்புகளால் அரசு இவற்றை எதிர்க்கொண்டு வருகிறது. நாங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதாவது செய்ய முடியாதா என்ற நம்பிக்கையில் ‘விடாது கறுப்பு’ போல செயல்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.
‘சலிப்பு, ஓய்வு இவை இரண்டும் தற்கொலைக்குச் சமம்’ என்ற தந்தை பெரியாரின் வாசகத்துடன் நாட்காட்டி என் அறையில், கண்முன்னே தொங்கிக் கொண்டிருக்கிறது.

Thursday, July 19, 2012
தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 10 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் 'புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்' சார்பில்நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்.
தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.
தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப்படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.
கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.
கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். ‘தமிழும் கணிப்பொறியும்’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007. ஸ்ரீராம் நிறுவனத்தின் ‘பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் ‘பெரியார் விருது’ ஆகிய விருதுகளை பெற்றவர்.
கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார்.
இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பாகும்.

Tuesday, June 05, 2012
தன் அழகிய பேத்திப் பற்றி அ.மார்க்ஸ் எழுத மறந்தவை
அ.மார்க்ஸ் தன் முகநூலின் முகப்பில் பதிவிட்டுள்ள இப்புகைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. தன் மூத்த மகள் அமலாவின் ஒரே மகள் ‘சுகி’ என்று அனைவரும் அன்போடு அழைக்கும் மது வர்ஷா தான் அந்த ‘மிக அழகிய பேத்தி.’ சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் 6ம் வகுப்புப் படிக்கிறாள். மார்க்சை சந்திக்க சென்னை செல்லும் போது சுகியை நான் பார்ப்பதுண்டு. அவளிடம் எப்படி படிக்கிறாய் என்று சம்பிரதாயத்திற்குக்கூட கேட்க எனக்கு நேரம் இருக்காது. அவள் துரு துருவென்று ஏதாவது செய்துக் கொண்டிருப்பாள். அவள் நன்றாக படிக்கிறாள் என்று மட்டும் தெரியும். சில சந்தர்ப்பங்களில் நானும் மார்க்சும் பேசிக் கொண்டிருப்பதைக் கவனிப்பாள். அப்போதெல்லாம் அவளிடம் அப்படியொரு திறமை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
சென்ற மாத இறுதியில் திடீரென்று அமலா செல்லில் அழைத்து என் முகவரியைக் கேட்டார். அப்போது அவர் தன் மகள் சுகியின் நாட்டிய அரங்கேற்றம் (சலங்கைப் பூஜை) வைத்திருப்பதாகவும், அழைப்பு அனுப்புவதாகவும், கட்டாயம் வர வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அதன்படி அழைப்பையும் அனுப்பி வைத்தார். அப்போது அதில் கலந்துக் கொள்ள எனக்கு அதிகம் ஆர்வமில்லை. சென்னைக்கு செல்வது எனக்கு எப்போதும் அலர்ஜியாக இருக்கும். பல சந்தர்ப்பங்களில் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்குக்கூட செல்லாமல் விட்டு விடுவதுண்டு. இதுகுறித்து மார்க்சிடம் கேட்டால் ஒரு நீண்ட பட்டியலே தருவார். இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.
அதன்படி ஏப்ரல் 28 அன்று மதியம் சென்னை சென்று சாஸ்திரி பவனிலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் புதுச்சேரியில் நடக்கும் ஊழல் வழக்குகள் குறித்து சி.பி.ஐ. உயரதிகாரி ஒருவருடன் விவாதித்துவிட்டு, மாலையில் மயிலாப்பூரில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக சென்றேன். அப்போது நிகழ்ச்சி நடந்துக் கொண்டிருந்து. எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நம் சுகியா இப்படி எல்லா நுணுக்கங்களுடன் ஆடிக் கொண்டிருப்பது என்று. இதுபோன்ற நாட்டிய நிகழ்ச்சிகளில் அதிகம் ஆர்வமில்லை என்றாலும் முழுவதுமாக நிகழ்ச்சியைக் கண்டு களித்தேன். அங்கு பாடி இசைக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் தமிழில் இருந்தது ரசித்ததற்கு மற்றுமொரு காரணமாக இருக்கலாம். சுட்டிப் பெண் சுகியிடம் தேர்ந்த லயம், முக பாவனை, தாளம் மாறாமல் ஆடுதல் என அனைத்தும் கைக்கூடி இருந்ததைக் காண முடிந்தது. நிகழ்ச்சியின் இடையில் குருவிற்கு மரியாதை செலுத்திய போதும், அதனை லயத்துடன் செய்தது நாட்டியத்தின் மீதான அவளின் கவனக் குவிப்பிற்கு உதாரணம். இதற்கு அவளைப் பயிற்றுவித்த நடன குரு ராதா சீனிவாசன் முழுக் காரணம் என்றாலும், அதில் கவனம் செலுத்தி தன்னை வளர்த்துக் கொண்டதற்கு சுகியின் முயற்சியும், அமலாவின் ஊக்கமும் முக்கிய பங்கு என்பதைச் சொல்ல தேவையில்லை. நிகழ்ச்சி முடிந்தவுடன் அவளை மனதாரப் பாராட்டி சிறிய பரிசு ஒன்றை அளித்தேன். மார்க்ஸ், ஜெயா மார்க்ஸ் மற்றும் குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அங்கு கூடியிருந்த அனைவருமே அந்த குட்டிப் பெண்ணை வெகுவாகப் பாராட்டினார்கள். அவள் தன் திறமையை மேன்மேலும் வளர்த்துக் கொண்டு வளர வேண்டுமென்று மனதில் எண்ணிக் கொண்டே ஊர் திரும்பினேன்.
1990ல் தஞ்சையில் அமாலயம் சந்தில் குடியிருந்த மார்க்சை நானும் பொழிலனும் முதல் முறையாக சந்திக்க சென்ற போது சுகி போன்று சின்ன பெண்ணாக அமலாவும், பாரதியும் இருந்தனர். இன்று அவர்களின் குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து வருவதும், தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதும் உள்ளார்ந்து மகிழ்ச்சி அளிக்கிறது. காலம் ஓடிக் கொண்டிருப்பதை உணர வைக்கின்றன இந்தப் பசுமையான நினைவுகள்.
21.05.2012-இல் முகநூலில் எழுதிய குறிப்பு.

Saturday, June 02, 2012
ராசாங்கத்தின் ராஜாங்கம்
‘எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்திராத’ என்னுடைய சிறு குறிப்பிற்கு காலச்சுவடு ஆசிரியர் குழுவில் ஒருவரும், முக்கிய தலித் படைப்பாளியாக வளர்ந்து வருபவருமான ஸ்டாலின் ராசாங்கம் விரிவாக ஒரு எதிர்வினையைச் செய்துள்ளார். எழுத்து சார்ந்து அதிகம் பங்களிப்பு செய்து வருபவராயினும் எதிர்வினை என்னும் பெயரில் அவர் கொட்டியிருக்கும் வார்த்தைகளில் வெளிப்படும் வன்மத்தையும் வக்கிரத்தையும் அவரால் மறைத்துவிட முடியவில்லை. பேராசிரியர் கல்யாணி, அ.மார்க்ஸ் மற்றும் இந்திய அளவில் மனித உரிமை இயக்கங்களில் செயல்படும் தோழர்களுடன் இணைந்து நான் செய்து வரும் மனித உரிமைப் பணியைத் தேவையின்றியும், இவ்விவாதத்திற்கு கொஞ்சமும் தொடர்பில்லாமலும் கொச்சைப்படுத்திக் காழ்ப்பைக் கக்கியுள்ளது இதற்கொரு சான்று.
88-ல் அரசியல் செயல்பாட்டின் விளைவாக வெடிகுண்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைவாசத்தையும் சந்தித்தவன் நான். இதன் விளைவாகப் பாதியில்விட்ட படிப்பைத் தொடர இயலாமல் முழு நேரமாக மக்கள் மத்தியில் என்னால் இயன்ற சிறு பணிகளைச் செய்து வருகிறேன். கொடிய மனித உரிமை மீறல்களை நானே அனுபவித்தவன் என்கிற வகையில் அதற்கு எதிராக தொடர்ந்துச் செயல்பட்டு வருகிறேன். என்னுடைய இந்தப் பணிகளுக்கு நான் எந்த ஊதியத்தையோ, பெருமைகளை ஒருபோதும் கோரியதில்லை, கோரப் போவதுமில்லை. தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை மட்டுமின்றி, பழங்குடியினர், பெண்கள், சிறுபான்மையினர் எனப் பாதிக்கப்படும் எல்லோருக்காகவும் எனது எல்லைக்குட்பட்ட வகையில் ஏதோ செய்து வருகிறேன். எந்தச் சந்தர்ப்பத்திலும் இதற்காக நான் எந்தச் சலுகையையும் யாரிடமும் கோரியதில்லை. எனது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களின் உதவிகளை மட்டுமே நம்பி இந்தச் செயல்பாடுகளை முழு நேரமாக செய்து வருகிறேன். இப்போதுகூட நண்பர் ராசாங்கம் எனது இந்தப் பணிகளைக் கொச்சைப்படுத்திப் புண்படுத்தி இருக்காவிட்டால் இத்தனையையும் சொல்லி இருக்கமாட்டேன்.
ராசாங்கம் சொல்லியிருப்பதுபோல நான் எழுத்துச் சார்ந்து அதிகம் பங்களிப்புச் செய்திராதவன்தான். இருந்தாலும் சமகால அரசியலில் தொடர்ந்து செயல்பட்டு வருபவன் என்கிற வகையில் ஓரளவு எல்லாவற்றையும் வாசித்து வருபவன். உங்களைப்போல காலச்சுவடு அளவுக்கு நான் உயராவிட்டாலும், நிறப்பிரிகை இதழ் புதுச்சேரியை மையமாகக் கொண்டு இயங்கியபோது, இராமர் அணில் கதை சொல்வார்களே அதுபோல, என்னால் முடிந்தவற்றைச் செய்தவன் நான். தலித் அரசியல் அறிக்கை நகல் உருவாக்கத்தில் என்னுடைய சிறு பங்களிப்பும் உண்டு. நெருக்கடி நிறைந்த காலத்தில் ‘தாயகம்’ என்றொரு இயக்க இதழ் நடத்திய அனுபவமும் உண்டு. முகநூல், வலைப்பூ ஆகியவற்றிலும் அவ்வப்போது பதிவுகள் செய்து வருகிறேன். வலைப்பூவினருக்கான அமைப்பிலும் நான் செயல்பட்டு வருகிறேன். இந்த வகையில்தான் என் நண்பரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் அவர்களின் கருத்து குறித்துப் பதிவு செய்திருந்தேன்.
அந்தப் பதிவு அப்படியே காய்ந்து உதிர்ந்து போய்விடாமல் விவாதத்திற்குக் கொண்டு வந்ததற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பதிவு தேர்தல் களத்தில் தலித் கட்சிகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பது குறித்து எழுதப்பட்டது. திருமாவளவன் அவர்கள் உ.பி.யுடன் ஒப்பிட்டுள்ளதால் நானும் அந்த ஒப்பீடு குறித்துச் சில சொல்லி இருந்தேன். அண்மையில் உ.பி தேர்தல் முடிவுகள் குறித்த ஆய்வுகள் சிலவற்றைப் படித்த பின்னணியில் அதைச் சொல்லி இருந்தேன். ராசாங்கம் இந்தப் பிரச்சினையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத் தனது எதிர்வினையில் 90 சதத்தைப் பெரியார் மீதான தாக்குதல்களுக்கும், என் மீதான தனிப்பட்ட தாக்குதல்களுக்கும் செலவிட்டுள்ளார். என் மீதான தாக்குதல் குறித்து நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன். பெரியார் குறித்த லாவணி சுமார் ஐந்தாண்டுகள் முன்பு நடந்து முடிந்த ஒரு விஷயம். இரண்டு தரப்பினரும் சொல்ல வேண்டியவைகளைச் சொல்லி முடித்தாயிற்று. பழைய பஞ்சாங்கத்தையே நீங்கள் மீண்டும் அரங்கேற்றியுள்ளீர்கள். நானும் இதற்குப் பதில் சொல்ல வேண்டுமானால் மீண்டும் ஏற்கனவே சொல்லப்பட்டவற்றையே திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கும். இது தேவையில்லாத கால விரயத்திற்கே இட்டுச் செல்லும். இந்த விஷயத்தைக் கிளப்பிய உங்கள் ஆசான்கள் கொஞ்ச நாட்களில் அதிலிருந்து ஜகா வாங்கியதையும், பெரியார் படத்தைப் போட்டு ஓட்டுக் கேட்டு நின்றதையும் எல்லோரும் அறிவர். காலச்சுவடை விட்டு நீங்கள் தூக்கி எறியப்படும் காலத்தில் இதுகுறித்த உங்கள் நிலைப்பாடும் மாறலாம்.
இப்போது நான் எனது குறிப்பில் முன்வைத்திருந்த தேர்தல் பிரச்சினைக்கு வருவோம். தலித் அரசியலின் பல பரிமாணங்களில் தேர்தல் பங்கேற்பும் ஒன்று. அது குறித்தே திருமாவளவன் அவர்கள் பேசியிருந்தார். நானும் அது குறித்தே எழுதியிருந்தேன். வேறு பல சந்தர்ப்பங்களிலும் திருமாவளவன் அவர்கள் தேர்தல் கூட்டணி முயற்சிகளில் தான் திராவிட இயக்கங்களால் அலட்சியம் செய்யப்பட்டதைப் பற்றிக் கூறியுள்ளார். அது உண்மை. ஆனால் திராவிடக் கட்சிகள் தலித் கட்சிகளை மட்டுமல்ல, பா.ம.க, முஸ்லிம் கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாவற்றையும்தான் அலட்சியம் செய்கின்றன. சென்ற பாராளுமன்ற தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களைப் பார்த்து, “எல்லாத் தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவேன் என்று கூறுகிறீர்களே, எனக்கும் ஒரு தொகுதி ஒதுக்குங்கள்” என்று கிண்டலடிக்கவில்லையா?
பிரச்சினை இதுதான். தேர்தல் அரசியலில் மரியாதை என்பது எண்ணிக்கையைச் சார்ந்தது. நமக்குப் பின்னால் இருக்கும் வாக்கு வங்கியைப் பொருத்தது. திராவிடக் கட்சிகள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி பெரும் பலத்துடன் இருந்தாலும் அப்போதும் இதேதான் நடந்திருக்கும்.
உ.பி.யில் உள்ள நிலைமை வேறு. இது குறித்து விரிவான புள்ளி விவரங்களுடன் நான் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கத் தயார். ஏறக்குறைய 22 சதமுள்ள தலித் ஒற்றுமை என்பது அங்கு நிறுவப்பட்ட ஒன்று. ஆனால் இதற்கான பெருமை மாயாவதிக்கு உரியதல்ல. அவருடைய பங்கு இந்த ஒற்றுமையில் சிதைவு ஏற்படுத்தியதுதான். ஒற்றுமையை உருவாக்கியது கான்ஷிராமின் பெருமைக்குரிய பங்களிப்பு. அவர் எந்நாளும் உட்சாதி அடையாளத்தை முன்வைத்ததே இல்லை. முன்வைப்பதைக் கடுமையாகக் கண்டித்தும் வந்தார். அவர் எந்த உட்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதே இன்னும் ஆராய்ச்சிக்குரிய ஒன்றாகத்தான் உள்ளது. அது மட்டுமல்ல, தலித் ஒற்றுமையைத் தாண்டி இதர ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் முஸ்லிம்களின் நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்தார். ‘பகுஜன்’ என்கிற கோட்பாட்டின்படி அவர் இதைச் செய்தார்.
“85 பார் 15 கா நஹின் சலேகா, நஹின் சலேகா” என்பது அவரது முழக்கங்களில் ஒன்று. அதாவது 15 சதவீத மக்கள் 85 சதவீத மக்களை இனி ஆள்வது நடக்காது, நடக்காது என்பது இதன் பொருள். “திலக் தராசு அவுர் தல்வார் இங்கோ மாரோ ஜூடே சார்” என்பது இன்னொரு முழக்கம். அதாவது நெற்றிப்பொட்டு (பார்ப்பனர்), தராசு (வைசியர்), வாள் (சத்திரியர்) ஆகியவற்றைச் செருப்பால் அடிப்போம் (சமர்களின் சின்னமாக இங்கே செருப்பு கூறப்படுகிறது) என்பது பொருள். பார்ப்பனர், சத்திரியர், வைசியர் போக எஞ்சியுள்ள தலித் மற்றும் சூத்திரர்களைத்தான் அவர் 85 சதவீத மக்கள் என்றார். உ.பி.யில் அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாததால் அவர்கள் அரசுப் பதவிகளில் உரிய இடம் பெறவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இப்படி தேர்தலை நோக்கிய ஒரு அகன்ற கூட்டணிக்கு அவர் முயற்சித்தார். இதன் அடிப்படையாக தலித் ஒற்றுமை இருந்தது. கிட்டத்தட்ட 22 சதவீத தலித்களையும் அவர் ஒன்றாகத் திரட்டியிருந்தார். இந்தியத் தேர்தல் முறையில் 35 சதவீத வாக்குகளை ஒரு கட்சி பெற முடியுமானால் அது ஆட்சியைப் பிடித்துவிட இயலும். எனவே 22 சதவீத வாக்குகளையும் அதற்கு அப்பால் ஒடுக்கப்பட்ட சில பிற்படுத்தப்பட்ட சாதிகள் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவையும் பெற்றிருந்த பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தேர்தல் அரங்கில் ஒரு மரியாதை இருந்தது. 2007ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குள்ள பார்ப்பனர்கள் மாயாவதியுடன் இணைந்து நிற்கத் தயாராக இருந்தார்கள் என்றால் அதன் பின்னணி இதுதான். அப்போதும் கூட எல்லாப் பார்ப்பனர்களும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை என்பதையும் யாதவ்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்டவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் மயாவதிக்கு ஆதரவாக இருந்தனர் என்பதையும் விரிவாக ஆய்வு செய்து ‘எகனாமிக் அன்ட் பொலிடிகல் வீக்லி (EPW)’ இதழில் கட்டுரை வந்தது. நிறைய எழுதும் ராசாங்கம் அதற்குத் தக தான் எழுதுகிற விஷயங்கள் குறித்து நிறையப் படிக்கவும் வேண்டும்.
இன்று மாயாவதிக்கு ஏற்பட்டுள்ள தோல்வியில் ஊழல் ஒரு பங்கு வகித்தாலும், கான்ஷிராமின் கொள்கையில் இருந்து அவர் விலகியதே முக்கிய காரணமாக உள்ளது. பார்ப்பனர்களுக்கு அவர் அளித்த அதிக முக்கியத்துவம் முஸ்லிம்களை அவரிடமிருந்து பிரித்தது மட்டுமல்லாமல், தலித் ஒற்றுமையிலும் பிளவை ஏற்படுத்தியது. தலித் உட்பிரிவுகளில் ஒன்றான ஜாதவ்கள் இன்று பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி நின்றது இன்றைய அவரது படுதோல்விக்கு ஒரு காரணமாகி உள்ளது.
இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் தமிழகத்திலும் தலித் அமைப்புகள் தலித் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன். ஆனால் இங்கு நிலைமை அதுவல்ல. பட்டியல் இனத்தவர்களில் ஒருவரான “தேவேந்திர குல வேளாளர்கள்” (பள்ளர்கள்) தாம் தலித்களே இல்லை என்கின்றனர். அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு என்பது முற்றிலும் நியாயமான கோரிக்கை. இதை மற்ற இரு முக்கிய பிரிவினரும் எதிர்க்கின்றனர். இந்தப் பிரச்சினையில் திருமாவளவன் அவர்களின் கருத்து என்ன என்பது அவருக்குத்தான் தெரியும். டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் இதற்கு எதிராகப் போராட்டமே நடத்தினார். இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அருந்ததியர் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடரப்பபட்டுள்ள வழக்கின் பின்னணியில் மதுரையைச் சேர்ந்த தலித் அறிவுஜீவிகளாக அறியப்படும் ஸ்டாலின் ராஜாங்கம் உள்ளிட்டோரின் பங்கு ஊரறிந்த இரகசியம். மதுரையில் இதற்கென ஒரு இரகசியக் கூட்டம் நடத்தப்பட்டதும் பலருக்கும் தெரியும்.
மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் கட்சித் தலைவர்களும் ரம்ஜான் அன்று தொப்பி போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பதோடு சரி. தலித் – முஸ்லிம் ஒற்றுமைக்கு எந்த முயற்சியையும் இருதரப்பினரும் மேற்கொள்வதில்லை. ஆங்காங்கு தலித் முஸ்லிம் மோதல்கள் நடைபெறும்போதும் கூட தலைவர்கள் அங்கு சென்று ஒற்றுமை ஏற்படுத்த முயற்சிப்பதில்லை.
தேர்தல் களத்தில் எண்ணிக்கையைக் காட்டுதல் ஒன்றே மரியாதை பெறுவதற்கான வழி என்கிற அடிப்படையிலேயே இதைச் சொல்ல வேண்டியதாயிற்று. ஆனால் இன்று உட்சாதி ஒற்றுமை சாத்தியமில்லாமல் போனது மட்டுமின்றி ஒருவருக்கொருவர் எதிராக நிற்க வேண்டிய நிலையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. அப்படியாகும்போது எந்த ஒரு தலித் கட்சிக்கும் அதிகப்பட்சமான வாக்கு வங்கி 5 அல்லது 6 சதவீதம் என்கிற அளவிலேயே நின்று விடுகிறது. தலித் விடுதலைக்கு ஆதரவாக உள்ள மற்ற இயக்கங்களையும் தலித் கட்சிகள் தேவையில்லாமல் தமது பெரியார் எதிர்ப்பு அரசியலின் விளைவாக அந்நியமாக்கின. எல்லா தலித் அரசியல் கட்சிகளும் அப்படிச் செய்யவில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் அது சார்ந்த அறிவுஜீவிகளும் அதைப் படு தீவிரமாகச் செய்தனர். பெரியாரோ, திராவிட இயக்கங்களோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால், தலித்களின் இன்றைய நிலைகள் அனைத்திற்கும் பெரியாரே காரணம் என்பதாக முன்வைத்தது ரொம்பவும் அபத்தமாக இருந்தது. இதில் முன்னோடியாக இருந்த ரவிக்குமார் பார்ப்பன நிழலில் ஒதுங்கி நின்று இதைச் செய்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலின் ராஜாங்கம் போன்ற தலித் அறிவுஜீவிகளின் உச்சபட்சமான பிளவுவாதம் இன்று சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு எதிராக அவர்கள் எழுப்பும் குரலில் வெளிப்படுகிறது. சாதிவாரிக் கணக்கீட்டை முற்போக்கு சக்திகள் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளன. வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியும் தங்கள் எண்ணிக்கையைக் கூட்டிக் காட்டி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியில் உள்ள நிலையில் அவரவர்களின் உண்மையான எண்ணிக்கையைத் தெரிந்து கொள்வது என்பதே இடஒதுக்கீடு நியாயமாகச் செயல்படுவதற்கு ஏதுவாகும். இதனால் பெரும்பான்மைவாதம் தலைதூக்கும் எனச் சொல்வதை ஏற்க இயலாது. சாதிவாரிக் கணக்கீடு வந்த பின்புதான் யார் பெரும்பான்மைச் சாதி, யார் சிறுபான்மைச் சாதி என்பது தெரியும் எனச் சொல்வது சிறுபிள்ளைத்தனம். தேவர், வன்னியர், நாடார் முதலானோர் பெரும்பான்மையினர் என்பதும் நாவிதர், துணி வெளுப்போர் முதலானோர் மிகச் சிறிய சாதிகள் என்பதும் பொதுப் புத்திக்குத் தெரியாதா என்ன? அருந்ததியர்கள் சாதிவாரிக் கணக்கீட்டை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் ராசாங்கம் போன்றோரின் நிலைப்பாடு தலித் அரசியலை மேலும் பிளவுபடுத்துவதற்கே இட்டுச் செல்லும். பிற்படுத்தப்பட்ட சாதிகளிடமிருந்தும் தலித் கட்சிகளை அந்நியப்படுத்தும்.
ஆனால் இது குறித்தெல்லாம் கவலைப்படாமல் எல்லாப் பழியையும் எளிதாகப் பெரியார் தலையில் போட்டுக் கட்டுரை எழுதிவிட்டுப் போய்விடலாம். இன்று நாடெங்கிலும் சாதி ரீதியாகக் கட்சிகள் உருவாகித்தான் உள்ளன. சமாஜ்வாதிக் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் எல்லாம் சாதிக் கட்சிகள் இல்லையா? இவைகளை எல்லாம் பெரியார்தான் தொடங்கி வைத்தாரா?
நமது நாடு சாதிகளாகப் பிளவுண்ட ஒரு நாடு. அண்ணல் அம்பேத்கர் சொன்னதுபோல இங்கு ஒவ்வொரு சாதியும் அதற்குக் கீழே உள்ள சாதியை ஒடுக்கிக் கொண்டுள்ளன. ஒடுக்கப்பட்ட எல்லாச் சாதிகளுக்கும் அவற்றுக்குரிய எல்லா உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இதில் ஆக ஒடுக்கப்பட்டவர்கள் தலித்கள். அவர்களது விடுதலைக்கு எல்லாவற்றையும் காட்டிலும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற அடிப்படையிலேயே நான் பிரச்சினைகளைப் பார்க்கிறேன். சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமைகளைக் கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தும் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான் இந்தியப் புரட்சியின் எதிரிகள் என்றார் அம்பேத்கர். இத்தகைய சாதி மற்றும் தீண்டாமைக் கருத்தியலுக்கு எதிராக சமூகத் தளத்தில் இயங்குவதும், பிற்படுத்தப்பட்ட சாதிகளின் வன்கொடுமைகளுக்கு எதிராக வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை மேலும் வலுவாகச் செயற்படுத்துவதில் விழிப்புக் காட்டுவதும், தேர்தல் களத்தில் தலித் ஒற்றுமையைக்கட்டி ஆதரவுத் தொகுதியை விரிவாக்குவதும் மட்டுமே இன்றைய செயல்பாடாக இருக்க முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே செயற்படுகிறேன்.
ஸ்டாலின் ராசாங்கம் போன்றவர்கள் அவரே பெருமைப்பட்டுக் கொள்வது போல என்னை எல்லாம்விட அதிகமாக எழுதுவது வரவேற்கப்படக் கூடிய ஒன்று. ஆனால் இப்படி எழுதுவதோடு நிற்காமல் கொஞ்சம் களத்தில் இறங்கி வேலை செய்யவும் வேண்டும். அப்படிச் செய்யும்போதுதான் இத்தகைய பிளவுவாதம் எத்தகைய தீங்கானது என்பது தெரியும். அதிலிருந்து விடுதலைப் பெற இயலும்.
கடைசியாக ஒன்று: ராசாங்கம் தனது கட்டுரை முழுவதும் “பிராமணர்” எனப் பவ்யம் காட்டுவது ரசிக்கத்தக்கதாக உள்ளது. ஒரிடத்தில் கூட தப்பித் தவறி பார்ப்பனர் என அவர் எழுதிவிடவில்லை. ஒருவேளை அப்படி எழுதினால் காலச்சுவடு கண்ணன் விளக்கம் கேட்டு ‘மெமோ’ கொடுத்துவிடுவார் என்கிற அச்சமோ என்னவோ. ஸ்டாலின் மீது எனக்குச் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவர் எந்நாளும் பார்ப்பனியம் போன்ற ஒரு கருத்தியலுக்கும் காலச்சுவடு போன்ற முதலாளிகளின் எல்லாவிதமான அநீதிகட்கும் பணிந்து போனதில்லை. ஸ்டாலின்மீது உண்மையிலேயே உங்களுக்கு மரியாதை இருக்குமானால் உங்கள் பெயரிலுள்ள ஸ்டாலினை நீக்கிவிட்டுக் காலச்சுவடு ராசாங்கம் என மாற்றி வைத்துக்கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.
இதுகுறித்த விவாதங்களை அரசியல் நோக்கர்கள், களத்தில் செயல்படுவோர் என அனைவரிடமும் இருந்து எதிர்ப் பார்க்கிறேன்.
குறிப்பு: 23.05.2012-இல் முகநூலில் வெளியிடப்பட்ட குறிப்பு.
1. பெரியார் பிறந்த மண்ணில் ஏன் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை?
2..ஸ்டாலின் ராஜாங்கம் எதிர்வினை

பெரியார் பிறந்த மண்ணில் ஏன் ஒரு தலித் முதல்வராக முடியவில்லை?
“பெரியார் பிறந்த மண்ணில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் ஆக முடியவில்லை. அதேவேளையில் பெரியார் பிறக்காத உத்தரபிரதேசத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 4 முறை முதலமைச்சர் ஆகிறார். இது எப்படி சாத்தியமாயிற்று? கட்சியினர் சிந்திக்க வேண்டும்” என நெய்வேலியில் நேற்றைய தினம் விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்.
பெரியார் பிறக்காத உ.பி. முதலான மாநிலங்களில் ஒரு தலித் முதலமைச்சராக வர முடிகிறது. பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் ஏன் வர முடியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் தோழர் தொல்.திருமாவளவன். நல்ல கேள்வி. நாம் எல்லோரும் சிந்திக்க வேண்டிய கேள்வி.
உ.பி.யில் மாயாவதி வெற்றிப் பெற்றது என்பது மட்டுமல்ல, இன்று தோல்வி அடைந்ததும் எப்படி என்று நாம் இணைத்து சிந்திக்க வேண்டும். உ.பி.யில் ஒட்டுமொத்த தலித்துகளின் மக்கள்தொகை சதவீதம் 22%, பார்ப்பனர்கள் 11%, முஸ்லிம்கள் சுமார் 15%, சத்திரியர்கள் முதலான இதர முற்பட்ட வகுப்பினர் மற்றும் யாதவ் முதலான பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதர சதம். மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. ‘பகுஜன்’ என்கிற அந்த கருத்தாக்கத்தைப் பெரும்பாலான மக்கள் என்கிற பெளத்த சிந்தனையிலிருந்து கான்சிராம் வடித்தெடுத்தார். இந்த பகுஜன் என்கிற கருத்தாக்கத்தில் உட்சாதி வேறுபாடு இல்லாமல் அனைத்து தலித்துகள் மட்டுமின்றி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் மற்றும் முஸ்லீம்கள் உள்ளடக்கப்பட்டு இருந்தனர். தமிழகத்திற்கும், உ.பி.க்கும் மிக முக்கியமான வேறுபாடு அங்குள்ள 22% தலித்துகளும் உட்சாதி வேறுபாடின்றி ஒரு திரளாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர் எனப்துதான். இந்த மகத்தான சாதனைக்குரியவர் கான்சிராம். ஆனால், இங்கோ 20% தலித்துகள் தனித்தனிப் பிரிவுகளாக மட்டுமல்ல எதிரெதிர் குழுக்களாகவும் இன்று பிரிக்கப்பட்டுள்ளனர். அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது போன்ற நிலைப்பாடுகளை மற்ற பிரிவினர் எடுத்தது இந்தப் பிரிவினையை மேலும் அதிகப்படுத்தியது. இன்னொரு பக்கம் தேவேந்திரகுல வேளாளர்கள் தம்மைத் தலித்துகள் என அடையாளப்படுத்தக் கூடாது என்கின்றனர். ஆகையால், இங்கு தலித் ஒற்றுமைக் கைக்கூடவில்லை.
நம்முடைய தேர்தல் முறையில் 35% வாக்குகளை யார் பெற முடியுமோ அவர்கள் அருதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும். உ.பி.யில் 22% தலித்துகள் ஒருங்கிணைந்து நிற்பதால், சுமார் 10 அல்லது 12 சத வலிமையுள்ள எந்தப் பிரிவினரும் அவர்களுடன் சேரும் போது ஆட்சியை எளிதாக கைப்பற்ற முடிகிறது. அந்த வகையில் தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சிக்கு அங்கு பெரிய மரியாதை உண்டு. ஆனால், உட்சாதி ரீதியாக சிதறுண்டு கிடக்கும் தமிழ்நாட்டு சூழலில் எந்த தலித் கட்சியும் உட்சபட்சமாக 6 முதல் 7 சதத்துக்குமேல் வாக்கு வங்கிகளை உடையதாக இல்லாததால் எந்த அரசியல் கட்சிகளும் தலித் அரசியல் கட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை.
சென்ற தேர்தலில் மாயாவதி மகத்தான வெற்றிப் பெற முடிந்தது என்றால், அவருடயை 22% வாக்கு வங்கிகளை குறியாக வைத்து பார்ப்பனர்கள் அவரோடு நின்றனர். ஒரு குறிப்பிட்ட அளவு முஸ்லிம் ஆதரவும் இருந்தது. கான்சிராமால் உருவாக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோரும் இணைந்து நின்று பெரும் வெற்றியை ஈட்டினர். இந்தத் தேர்தலிலோ மாயாவதி ஆட்சியின் ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தமை, நிர்வாக சீர்கேடுகள் முதலானவற்றின் விளைவாகவும், மிகுந்த உயர்சாதி சாய்வின் காரணமாகவும், தலித்துகள் உட்பட பலர் புறக்கணிக்கப்பட்டதாலும் மிகப்பெரிய அளவில் ஆதரவை இழக்க நேரிட்டது. இம்முறை முஸ்லிம்கள் யாரும் மாயாவதிக்கு வாக்களிக்கவில்லை. அதைவிட மாயாவதியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் தலித் பிரிவின் பெரும்பான்மை உட்பிரிவான ஜாதவ்கள் அதிருப்தி அடைந்து விலகி நின்றதும்தான். கான்சிராமால் கட்டமைக்கப்பட்ட உட்சாதி தலித் ஒற்றுமைச் சிதைந்தது இம்முறை அங்கு ஏற்பட்ட தோல்விக்கு காரணம்.
தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதலமைச்சராக வேண்டுமென்ற நம்முடைய ஆசை நிறைவேற வேண்டுமென்றால் முதலில் தலித் மக்கள் மத்தியில் உட்சாதி ஒற்றுமையை உருவாக்க வேண்டும். தொல்.திருமாவளவன் போன்ற அரசியல் தெளிவு மிக்க தலைவர்களே இதைச் செய்ய முடியும். இத்தகைய நிலை உருவாகும் போதுதான் பா.ம.க.வோ அல்லது இதர ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுடனோ அல்லது இடதுசாரிகளுடனோ இணைந்து வெற்றியை ஈட்ட முடியும்.
குறிப்பு: 16.04.2012-இல் முகநூலில் வெளியிடப்பட்ட குறிப்பு.
Subscribe to:
Posts (Atom)